டார்க் சாக்லேட், வாழைப்பழம் மனநிலையை மாற்றுமா? டோபமைனை அதிகரிக்கும் உணவுகள்!

ஒமேகா 3, புரோபயாடிக்குகள், டார்க் சாக்லேட், வாழைப்பழம் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்.
Mood boosting diet | மனநிலையை மேம்படுத்தும் உணவுமுறை
Mood boosting diet | மனநிலையை மேம்படுத்தும் உணவுமுறைImage Credit: ChatGPT
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

மூளையில் செரோடோனின் (Serotonin) மற்றும் டோபமைன் (Dopamine) போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்களைத் தூண்டும் சத்தான உணவுகள் நம் மனநிலையை உடனடியாக உற்சாகப்படுத்த உதவுகின்றன. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி, மெக்னீசியம் மற்றும் புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது மன அழுத்தத்தைக் குறைத்து உற்சாகத்தைத் தரும்.

அதுவே தரமற்ற உணவு அல்லது அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை, அதிக உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற உணர்வுகள் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனில் செரோடோனின் அளவை அதிகரிக்க நமது மூளைக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் இந்த உணவுகளில் போதுமான அளவு இருப்பதில்லை. எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், சிவப்பு இறைச்சிகள், சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் போன்றவற்றை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது.

மனநிலையை மேம்படுத்தும் உணவுகள்:

டார்க் சாக்லேட்:

இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் காஃபின் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து எண்டோர்பின் மற்றும் செரோடோனின் சுரப்பைத் தூண்டுகின்றன. குறைந்தது 70% கோகோ கொண்ட டார்க் சாக்லேட்டைச் சிறிய அளவில் சாப்பிடுவது நல்ல பலன் தரும்.

வாழைப்பழம்:

இதில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் டிரிப்டோபான் (Tryptophan) அமினோ அமிலம் மூளையில் மகிழ்ச்சி ஹார்மோன்களை உருவாக்க உதவுகின்றன. மேலும் இதில் உள்ள இயற்கையான சர்க்கரை மற்றும் நார்ச்சத்து உடலுக்கு நிலையான ஆற்றலை வழங்குகின்றன. இது சோர்வை நீக்கி உடனடி ஆற்றலைத் தரக்கூடியது.

கொழுப்பு நிறைந்த மீன்கள்:

சால்மன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மனச்சோர்வு ஏற்படுவதைக் குறைப்பதுடன் மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகின்றன.

தயிர் மற்றும் புளித்த உணவுகள் (Fermented foods):

தயிர், மோர் மற்றும் இட்லி போன்ற புளித்த உணவுகளில் உள்ள புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. நமது உடலின் 90% செரோடோனின் குடலில் தான் உற்பத்தியாகிறது என்பதால் இது மனநிலையை சீராக வைக்க உதவுகிறது.

Mood boosting diet | மனநிலையை மேம்படுத்தும் உணவுமுறை
Mood boosting diet | மனநிலையை மேம்படுத்தும் உணவுமுறைImage credit: ChatGPT

நட்ஸ் மற்றும் விதைகள்:

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த வால்நட்ஸ் மூளை ஆரோக்கியத்திற்கும் மனச்சோர்வை தவிர்க்கவும் உதவுகிறது. பூசணி விதைகளில் உள்ள துத்தநாகம் (Zinc) மற்றும் மெக்னீசியம் மன பதற்றத்தைக் குறைத்து அமைதியைத் தருகின்றன.

பாதாம் மற்றும் ஆளி விதைகளில் மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் ஒமேகா 3 சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை மன அமைதியைத் தருகின்றன.

பசலைக் கீரை மற்றும் அடர் பச்சை காய்கறிகள்:

கீரை வகைகளில் ஃபோலேட் மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் உள்ளன. இவை நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்தி சோர்வு மற்றும் எரிச்சலைக் குறைக்கின்றன.

பருப்பு வகைகள் மற்றும் சுண்டல்:

கொண்டைக்கடலை, பாசிப்பயறு மற்றும் பருப்பு வகைகளில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் தாவரப் புரதம் நிறைந்துள்ளது. இவை ரத்த சர்க்கரை அளவைச் சீராக வைத்து திடீர் மனநிலை மாற்றங்களைத் (Mood swings) தடுக்கின்றன.

சிறுதானியங்கள் மற்றும் ஓட்ஸ்:

முழு தானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகின்றன. இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். நார்ச்சத்து அதிகம் உள்ள ஓட்ஸ் நாள் முழுவதும் திடீர் சோர்வோ அல்லது எரிச்சலோ ஏற்படாமல் சுறுசுறுப்பாகவும், ஓரே சீரான ஆற்றலையும் அமைதியான மனநிலையையும் தக்க வைக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
உருளைக்கிழங்கு, வாழைக்காயில் 'வாயு மர்மம்' என்ன? எது சிறந்தது?
Mood boosting diet | மனநிலையை மேம்படுத்தும் உணவுமுறை

முட்டை:

வைட்டமின் டி மற்றும் புரதம் நிறைந்த முட்டை மூளையின் செயல்பாட்டையும் மனநிலையையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

பெர்ரி பழங்கள் மற்றும் மாதுளை:

அவுரி நெல்லிகள் (Blueberries ), ஸ்ட்ராபெர்ரி மற்றும் மாதுளையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் உள்ளன. இவை மூளையில் ஏற்படும் அழற்சியைக் குறைத்து மனதைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கின்றன.

தவிர்க்க வேண்டியவை:

அதிக சர்க்கரை மற்றும் மைதா உணவுகள் தவிர்க்கப்பட வேண்டியவை. அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் தற்காலிக உற்சாகத்தைத் தந்தாலும் சிறிது நேரத்தில் சோர்வை ஏற்படுத்தும். இனிப்புகள் மற்றும் குளிர்பானங்கள் ரத்த சர்க்கரையை உடனடியாக உயர்த்தி, சிறிது நேரத்திலேயே சோர்வையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். அதேபோல் அதிகப்படியான காஃபின் தவிர்க்கப்பட வேண்டியது. ஒரு நாளைக்கு இரண்டு கப்பிற்கு மேல் காபி அல்லது டீ குடிப்பது பதற்றத்தையும் தூக்கமின்மையையும் அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
கடமுடவென வரும் வயிற்று சத்தத்தைக் குறைக்க எளிய வழி என்ன?
Mood boosting diet | மனநிலையை மேம்படுத்தும் உணவுமுறை

Reference: