நுண்ணுயிரிகளின் உலகம்: கண்ணுக்குத் தெரியாத நண்பர்களும் பகைவர்களும்!

கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிர்களின் வளர்ச்சியும் இதனால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களையும், அதன் பின் விளைவுகளையும் பற்றி விரிவாய் பேசுவோம்.
Bacteria
Bacteria
Published on

மனிதர்கள் மட்டும்தான் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். நம்மோடு விலங்குகளும், பறவைகளும், பூச்சிகளும், தாவரங்களும் சேர்ந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவை எல்லாம் நம் கண்ணுக்கு முன்னால் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கண்ணுக்குத் தெரியாமலேயே பல நுண்ணுயிர்களும் (microorganism) வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

கண்ணுக்குத் தெரியாத, வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள், புரோட்டோசோவா போன்ற நுண்ணுயிர்கள் மனிதர்களுக்கு சிறிய அளவு நன்மையை செய்தாலும், பெரிய அளவில் பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இப்படி கண்ணுக்கே தெரியாத சில நுண்ணுயிர்களை நாம் நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்க முடியும். இந்த நுண்ணுயிர்கள் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், காற்று, நீர், குளங்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பெருங்கடல், மண் என எல்லா உயிரினங்களின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இப்படி கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிர்களின் வளர்ச்சியும், பெருக்கமும் இதனால் மனிதர்களுக்கு ஏற்படும் 2 முக்கிய நோய்களையும், அதன் பின் விளைவுகளையும் பற்றி விரிவாய் பேசுவோம்.

இதையும் படியுங்கள்:
கிருமி நாசினி தெரியும்! ஆனால் இந்த நாசினி அது அல்ல!
Bacteria

காசநோய்

காசநோய் மைக்கோ பாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியாவினால் ஏற்படுகிறது. இந்த நோய் காற்றின் மூலமும், நோய் தொற்று உடைய மனிதனின் சளி மூலமும் மற்ற மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த நோய் ஏற்பட்டால் தொடர்ச்சியான இருமல், ரத்தத்துடன் கூடிய சளி, எடை இழப்பு, மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதனை தடுப்பதற்கு BCG தடுப்பூசியை நாம் மருத்துவமனைகளில் போட்டுக் கொள்ள வேண்டும்.

எய்ட்ஸ் பெறப்பட்ட நோய் தடுப்பாற்றல் குறைவுநோய்

எய்ட்ஸ் என்ற நோயானது HIV வைரஸின் மூலம் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. இந்த நோய் ஏற்பட்டால் நோய் தடைகாப்பு மண்டலம் பாதிப்படைகிறது. இவை லிம்போசைட்டுகளை தாக்கி பாதிப்படைந்த நபர்களில் நோய் தொற்றினை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் முதல் எய்ட்ஸ் நோயாளி சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த HIV வைரஸானது சிறுநீர், கண்ணீர், உமிழ் நீர், தாய்ப்பால் மற்றும் கலைவிக்கால்வாய் சுரப்புகளில் காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து ரத்தத்தின் மூலம் நலமான ஒருவருக்கு பரவுகிறது. தொடுதல் அல்லது உடல் தீண்டல் வழியாக HIV வைரஸ் பரவுவதில்லை.

இது உடல் திரவங்கள் மற்றும் ரத்த தொடர்பின் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு கொள்வதன் மூலமாகவும், போதை மருந்து ஊசி பயன்படுத்துவதன் மூலமாகவும், பாதிக்கப்பட்ட நபரின் நோய் தொற்று உடைய ரத்தம் மற்றும் ரத்தப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலமாகவும், பாதிக்கப்பட்ட தாயிடம் இருந்து சேய்க்கு, தாய் செய் இணைப்பு திசு மூலமாகவும் இந்த எச்ஐவி வைரஸ் பரவுகிறது.

இந்த எச்ஐவி வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களில் நோய் எதிர்ப்பாற்றல் குறைகிறது. இதனால் அந்த நபர்கள் வைரஸ், பாக்டீரியா, புரோட்டோசோவா, மற்றும் பூஞ்சை தொற்றினால் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். நிணநீர் முடிச்சுகளில் வீக்கம், மூளை சேதம், நினைவாற்றல் குறைவு, பசியின்மை, எடை குறைதல், காய்ச்சல், நீடித்த வயிற்றுப்போக்கு, இருமல், சோம்பல், தொண்டை அலர்ஜி, வாந்தி, மற்றும் தலைவலி போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாக தென்படும். இந்த எச்ஐவி வைரஸ் தொற்று இருப்பதனை எலைசா என்ற கண்டறியும் சோதனை மூலமாகவும் வெஸ்டன் பிளாட் சோதனை மூலமாகவும் உறுதிப்படுத்தலாம்.

இந்த எச்ஐவி வைரஸினை தடுப்பதற்கு நாம் ரத்த வங்கியில் இருந்து ரத்தம் பெற்று ஏற்றுவதற்கு முன்னர் குறிப்பிட்ட வகை ரத்தமானது எச்ஐவி சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். மருத்துவமனைகளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஊசிகள் மீண்டும் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பான பாலுறவு மற்றும் ஆணுறைகளை பயன்படுத்த வேண்டும்.

எய்ட்ஸ் நோயின் விளைவுகளை விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் அறிவுறுத்த வேண்டும். எச்ஐவி வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களை குடும்பம் மற்றும் சமுதாயத்தில் இருந்து தனிமைப்படுத்துதல் கூடாது.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோய் இருந்தால் எச்சரிக்கை! ஈறுகளை பாதிக்கும் கிருமித் தொற்றின் மர்மம் இதுதான்!
Bacteria

ரெட்ரோ வைரஸிற்கு எதிரான மருந்துகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகின்ற சிகிச்சையின் மூலம் பாதிக்கப்பட்ட நபரின் வாழ்நாளில் நீட்டிக்கலாம். இதுவே இந்த எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை ஆகும். நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இது எச்ஐவி வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாளை நீடிக்க பயன்படுத்தப்படும் மருந்து பொருளாகும்.

நம் கண்ணுக்கே தெரியாத இந்த நுண்கிருமிகளை நாம் பாதுகாப்பான வழியில் மட்டுமே கையாள முடியும். ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட காலரா, அம்மை போன்ற நோய்களிலிருந்து இன்று வரை வந்து சென்ற கொரோனா என்ற நோய் தொற்று அனைத்தும் நுண்கிரும்பிகளினால் மட்டுமே ஏற்படுகிறது.

'கந்தையானாலும் கசக்கி கட்டு! கூழானாலும் குளித்துக் குடி!' என்பது பழமொழி! அதைப் போல நாம் நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொண்டால் எந்த ஒரு நோயும் நம்மையும், நம் உடலையும், சுற்றுப்புறத்தையும் அணுகாது என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.

வெளியே சென்று விட்டு வீட்டிற்கு உள் நுழையும் போது கை, கால்கள், முகம் ஆகியவற்றை வீட்டின் முற்றத்தில் இருக்கும் அண்டாவில் கழுவி விட்டு வீட்டுக்குள் வரவேண்டும். இந்த தண்ணீரில் மஞ்சள், உப்பு, வேப்பிலை போன்ற பொருட்களை அதனுள் போட்டு வைத்திருப்பார்கள். இது நோய்க்கிருமிகளை அழிக்கும் ஒரு பாரம்பரிய முறையாகும். இது அந்தக் காலத்தில் இருந்தே பெரியோர்கள் நமக்கு ஏற்படுத்திய ஒரு பாரம்பரிய வழக்கமாகும். ஆனால் இந்த வழக்கம் இப்போது கடைபிடிக்கப்படுவதில்லை என்பதுதான் சற்று வருத்தமாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
உங்க வீடு இனி கிருமி இல்லாத கோட்டை! மாப் தண்ணில இதெல்லாம் சேருங்க!
Bacteria

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com