இனி வருவது மழைக்காலம் என்பதால் நிறைய பேருக்கு சளி , இருமல் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் அதிகம் வரும். மற்ற காலங்களை விட மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகும். இப்படிப்பட்டவர்கள் மழைக்காலத்தில் உடல் நலக் குறைவால் சிரமப்படுவார்கள்.
மழைக்காலத்தில் உடல் பலவீனமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவில் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் போதும் பாரம்பரிய உணவுகளை தேர்ந்தெடுத்து மழைக்காலத்தில் அதிகம் உட்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தலாம். நோய்வாய்ப்படுவதையும் தடுக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஐந்து உணவுகள் என்னென்ன பார்ப்போம்.
1) சுக்கு மல்லி காபி
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருள் சுக்கு மல்லி கஷாயம். இது காய்ந்த இஞ்சியான சுக்கு, காய்ந்த மல்லியை கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதுவும் இந்த கஷாயத்தில் சுக்கு, மல்லியுடன், மிளகு, ஏலக்காய், கிராம்பு /சீரகம் இவற்றை வறுத்துப் பொடி செய்து கொதிக்கும் நீரில் போட்டு கொதிவிட்டு வடிகட்டி குடிப்பதால் உடலுக்கு இருமடங்கு நன்மைகளை தருகிறது. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருந்தால் அதற்கு சுக்கு , மல்லி கஷாயம் குடித்தால் சரியாகும்.
2) மஞ்சள் மிளகு பால்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றொரு அற்புதமான பானம் மஞ்சள் மிளகு பால். மிளகில், மஞ்சளில் பல சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளன. இந்த மஞ்சள் மிளகு பாலை தினம் குடித்து வந்தால் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்கும்.
3) நிலவேம்பு கசாயம்
நிலவேம்பு கசாயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது . குறிப்பாக வைரஸ் செல்களுக்குள் ஊடுருவதை தடுக்கும் ஆற்றல் இதன் கசப்புகளில் உள்ளது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலவேம்பு கசாயத்தை குடித்து வந்தால் நுரையீரலில் வைரஸ்கள் சேர்வைதை 100% குறைக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கசாயத்தை 15 நாட்களுக்கு ஒரு முறை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
4) தூதுவளை
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் முதன்மையான பொருள் தூதுவளை. இந்த தூதுவளை இலையில் முட்கள் நிறைந்திருக்கும். இந்த தூதுவளை இலையை கொண்டு ரசம் செய்து மழைக்காலத்தில் சாப்பிட்டால் தூதுவளையில் உள்ள அல்கலாயிடுகள் நுரையீரலுக்கு நன்மை அளிக்கும்.
நமது நுரையீரலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் விட்டமின்கள் தூதுவளையில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. நுரையீரலில் எதிர்ப்பு சக்தி 60% அதிகரிக்குமாம்.
தூதுவளை இலையை கொதிக்கும் நீரில் போட்டு மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து சூப் செய்து குடித்தாலோ ,ரசமாக, செய்து சாப்பிட்டாலோ சளி, இருமல், நெஞ்சு சளி போன்றவற்றிலிருந்து நல்ல நிவாரணம் அளிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
5) வெந்நீர்
சளி இருமல் வந்து விட்டால் தண்ணீரை சூடாக்கி தான் குடிக்க வேண்டும் வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் தன்மை உண்டு. காய்ச்சல் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும் எனவே சளி இருமல் வந்தால் வெந்நீர் அருந்த வேண்டியது கட்டாயம்.
உணவு மருந்துக்கு மாற்றல்ல. ஆனால், மருந்து விரைவாக பணி புரிய வைக்கவும் ,நோய் அணுகாமல் தடுத்து வைக்கவும் வந்த நோயை விரைவாக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டு விரட்டவும், உணவால் மட்டுமே முடியும் என மனதில் கொண்டு சாப்பிட வேண்டும்.