ரோஜாக்கள் தரும் மனநிலை மாற்றங்களும், உடல் ஆரோக்கியமும்!

ரோஜா பூக்கள்
Rose flowers
Published on

ரோஜா என்று உச்சரிக்கும்போதே மனதில் ஒரு பரவச உணர்வு எழுவதுண்டு. பூக்களைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு பூக்களும் தனித்துவமான நிறத்தையும், வாசனையையும் கொண்டுள்ளன. மல்லிகை, முல்லை, செம்பருத்தி, தாமரை, லில்லி,  ரோஜா இன்னும் ஏராளமான பூக்கள் உள்ளன. இவற்றில் மக்களிடத்தில் எப்போதும் பயன்பாட்டில் உள்ளது என்றால் அது அழகிய ரோஜாக்கள்தான். ரோஜாவால் பலவிதமான வாழ்வியல் மற்றும் உடல் ஆரோக்கியம் கிடைக்கிறது எனலாம்.

உலகில் 100 மற்றும் அதற்கு மேற்பட்ட வகைகளில் ரோஜாக்கள் பூக்கின்றன. ஆசியாவை தாயகமாகக் கொண்ட இது, ரோச்சி குடும்பத்தை சேர்ந்தது. Rose என்ற பெயர் பிரெஞ்சு மொழியிலிருந்து வந்தது. லத்தின் மொழியில் ரோஜா என்பதற்கு அன்பு என்று பொருள். இம்மலர் காதல் மற்றும் காதல் சின்னமாக ஜூன் மாதம் அமெரிக்காவில் பரவலாகக் கொண்டாடப்படுகிறது.

மஞ்சள், சிவப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, ஊதா, ஆரஞ்சு போன்ற ரோஜாக்களின் நிறங்கள் அன்பு, சோகம், நட்பு, சமாதானம், காதல் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதால்தான் காதலர் தினத்தன்று ரோஜா பூக்கள் கொடுக்கப்படுகிறது. சிவப்பு ரோஜாக்கள் ஆழமான காதல் மற்றும் ஆர்வத்தின் உன்னதமான அடையாளமாக உள்ளது. மஞ்சள் ரோஜாக்கள் நட்பு மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும், பாராட்டுகளை வெளிப்படுத்த சிறந்தவை. அரவணைப்பையும் மகிழ்ச்சியையும் இவை வெளிப்படுத்துகின்றன.

வெள்ளை ரோஜாக்கள் தூய்மை, அப்பாவித்தனம் மற்றும் புதிய தொடக்கங்களைக் குறிக்கும். வெள்ளை ரோஜாக்களால் நேர்மையான மற்றும் தூய்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும் என்பதால் வாழ்க்கையில் நாம் மதிக்கும் நபர்களுக்கு அவற்றைப் பரிசளிக்க முடியும். இளஞ்சிவப்பு ரோஜாக்கள் நன்றியுணர்வு, பாராட்டு மற்றும் போற்றுதலை வெளிப்படுத்தும். பல்துறை மற்றும் நண்பர்கள், காதல் ஆர்வத்தை மிகவும் நுட்பமாகக் காட்ட பயன்படுத்தப்படலாம்.

இதையும் படியுங்கள்:
இரும்புச்சத்து குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள்... ஜாக்கிரதை! 
ரோஜா பூக்கள்

ஆரஞ்சு ரோஜாக்கள், ஆரஞ்சு சிவப்பு மற்றும் மஞ்சள் இரண்டின் கலவையாக இருப்பதால் ஆர்வம், கவர்ச்சி, ஏக்கம் மற்றும் ஆசை ஆகியவற்றைக் குறிக்கின்றன, அவை தீவிரமான மற்றும் உணர்ச்சிவசப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு ஏற்றதாக அமைகின்றன.

ரோஜாக்கள் நமது ஆரோக்கியத்திற்கும் உகந்ததாக உள்ளது. ஆம், ரோஜா இதழ்களில் வைட்டமின் பி, ஈ, கே மற்றும் சி இன் சிறந்த சத்துக்கள் உள்ளன. மேலும், கரோட்டின், கால்சியம், மெக்னீசியம் மற்றும் செம்பு ஆகியவற்றின் நல்ல மூலமாகும். ரோஜா இதழ்களில் பினோல்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால் இவை மலர் மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது.

உதாரணமாக, குல்கந்து ரோஜா இதழ்களின் சுவையான இனிப்பு வகை ஆகும்.  பாரம்பரியமாக ரோஜா இதழ்கள் மற்றும் சர்க்கரை ஆகியவை  கொண்டு குல்கந்த் தயாரிக்கப்படுகிறது. குல்கந்து ரோஸ் இதழ்களின் தனித்துவமான சுவை மற்றும் மணம் ஆகியவற்றிற்கு பிரபலமானது. குல்கந்து  பல ஆயுர்வேத மருந்துகள் மற்றும் சிகிச்சையில் முக்கியமான மூலப்பொருளாக அமைகிறது. அழகுக் கலைகளிலும், முகம், கண்கள் பொலிவு பெறவும் ரோஜாக்கள் பங்காற்றுகின்றன. ரோஜா இதழ்களை முதல் நாள் இரவு நீரிலிட்டு அதில் முகம் கழுவினால் நல்ல மணத்துடன் மனம் உற்சாகம் பெறும். ஆண்டவன் சன்னிதியில் மட்டுமல்ல, நமது வீடுகளிலும் ரோஜாச் செடிகளை வளர்த்து அழகியல் மற்றும் ஆரோக்கியம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com