காலையில் எழுந்ததும் முதல் அடியிலேயே குதிகால் வலியா? 5 காரணங்களும் எச்சரிக்கையும்!

பிளான்டார் ஃபாசியாடிஸ் முதல் குதிகால் எலும்பு வளர்ச்சி வரை காலை நேரத்தில் ஏற்படும் கடுமையான குதிகால் வலிக்குக் காரணம் என்ன?
High Heels | குதிகால் வலி
High Heels | குதிகால் வலி
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் முதல் அடியெடுத்து வைக்கும் பொழுது ஏற்படும் கடுமையான குதிகால் வலி பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான தசைநார் சார்ந்த பிரச்சனை ஆகும். பொதுவாக இரவு முழுவதும் ஓய்வெடுக்கும் பொழுது பாத தசைநார்களில் அழற்சி திரவம் (Inflammatory fluid) தேங்குவதால் காலை நேரத்தில் வலி அதிகமாக இருக்கும். சிறிது தூரம் நடந்த பிறகு இந்த வலி படிப்படியாகக் குறைய தொடங்கும். இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

பிளான்டார் ஃபாசியாடிஸ் (Plantar Fasciitis):

இதுவே காலையில் ஏற்படும் குதிகால் வலிக்கு மிக முக்கியமான மற்றும் பொதுவான காரணமாகும். பாதத்தின் அடிப்பகுதியில் குதிகாலையும் விரல்களையும் இணைக்கும் தடிமனான தசைநாரில் (Plantar Fascia) ஏற்படும் அழற்சி அல்லது வீக்கத்தினால் இது உண்டாகிறது. இரவு முழுவதும் ஓய்வில் இருக்கும் இந்த திசுக்கள் காலையில் திடீரென நீளும் போது கடுமையான வலியை ஏற்படுத்தும்.

அகில்லெஸ் டெண்டினிடிஸ் (Achilles Tendinitis):

கணுக்கால் மற்றும் குதிகால் எலும்பை இணைக்கும் தசைநாரில் ஏற்படும் வீக்கம். முறையற்ற காலணிகளைப் பயன்படுத்துவது அல்லது கால்களுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுப்பது குதிகாலின் பின்புறத்தில் கடுமையான வலி மற்றும் விறைப்பு தன்மையை உண்டாக்கும். நடக்கும்போது அல்லது ஓடும் போது குதிகாலின் பின்புறத்தில் இந்த வலி தெரியும்.

குதிகால் எலும்பு வளர்ச்சி (Heel Spurs):

பாத தசைநார்களில் நீண்ட நாட்களாக அழுத்தம் இருக்கும் பொழுது, குதிகால் எலும்பின் அடியில் கால்சியம் படிந்து ஒரு சிறிய முள் போன்ற எலும்பு வளர்ச்சிஉருவாகும். இது சுற்றியுள்ள திசுக்களைக் குத்துவதால் வலி ஏற்படுகிறது. காலை நேரத்தில் தரையில் காலை வைக்கும் போது இந்த கூர்மையான வலியை உணரலாம்.

ஸ்ட்ரெஸ் ஃபிராக்சர் (Stress Fractures):

குதிகால் எலும்பில் ஏற்படும் மிகச் சிறிய விரிசல். அதிக தூரம் ஓடுதல் அல்லது குதித்தல் போன்ற தொடர் அழுத்தங்களால் இது நிகழலாம்.

தட்டையான பாதம் (Flat Feet):

உள்ளங்காலில் இயல்பான வளைவு இல்லாமல் பாதம் தட்டையாக இருப்பது ஒரு காரணமாகும். இதனால் நடக்கும் போது உடல் எடை குதிகாலில் சமமாகப் பரவாமல் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி உண்டாகும். காலுக்குப் பொருந்தாத அல்லது தட்டையான காலணிகளை அணிவது மற்றும் இயற்கையிலேயே தட்டையான பாதம் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வலி வர வாய்ப்பு அதிகம்.

High Heels | குதிகால் வலி
High Heels | குதிகால் வலி

மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

பொதுவாக குதிகால் வலி சில நாட்கள் ஓய்வு எடுத்தாலே சரியாகிவிடும். குதிகால் வலிக்கு சிறிது ஓய்வு, ஐஸ் ஒத்தடம் மற்றும் எளிய உடற்பயிற்சிகள் மூலம் சரி செய்து விடலாம். ஆனால் பின்வரும் சில அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

இரண்டு மூன்று வாரங்களுக்கு மேல் வலி நீடித்தாலோ, குதிகாலில் தாங்க முடியாத கடுமையான வலியுடன் சிவந்து போய் வீக்கம் இருந்தாலோ மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தீபாவளி பட்டாசு: ஆஸ்துமா நோயாளிகளும் செல்லப் பிராணிகளும் தப்பிக்க 5 வழிகள்!
High Heels | குதிகால் வலி

காலில் எடையைத் தாங்கி நிற்கவோ அல்லது சில அடிகள் கூட எடுத்து வைக்கவோ முடியாத பொழுது.

முறையான ஓய்வு எடுத்தும் சில வாரங்களுக்கு மேல் வலி நீடித்தால்.

குதிகால் அல்லது பாதத்தில் உணர்ச்சியற்ற நிலை, மரத்துப்போன உணர்வு, ஊசி குத்துவது போன்ற உணர்வு அல்லது எரிச்சல் இருந்தால்.

கணுக்காலில் ஏதேனும் சத்தம் (Pop sound) கேட்டு வலி உடனே தொடங்கினால் (தசைநார் கிழிந்திருக்கலாம்).

பொதுவாகவே உடல் எடை திடீரென அதிகரிக்கும் பொழுது பாதங்கள் தாங்கும் எடையின் அளவு கூடுகிறது. இதனால் பாத தசைநார்களில் அழுத்தம் அதிகரித்து வலி உண்டாகிறது. அதேபோல் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தாலோ, முடக்குவாதம் போன்ற எலும்புத் தேய்மானப் பிரச்சனைகளாலோ குதிகால் மற்றும் கணுக்கால் மூட்டுகளில் அதிகாலை நேரத்தில் கடுமையான வலி மற்றும் வீக்கம் உண்டாகும். இதற்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரைகள் மற்றும் பிசியோதெரபி எடுத்துக்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
ரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க! தவறான அளவுகள் வரலாம்!
High Heels | குதிகால் வலி

Reference:

logo
Kalki Online
kalkionline.com