எச்சரிக்கை! தினமும் மவுத்வாஷ் பயன்படுத்துபவரா நீங்க? ஆய்வுகள் தரும் அதிர்ச்சி தகவல்!

Mouth wash
Mouth wash
Published on

இன்றைய உலகில் வாய் தொடர்பான ஆரோக்கியம் என்பது பல் துலக்குவது மட்டுமல்லாமல், வாயிலிருந்து துர்நாற்றம் எதுவும் வீசாமல் இருக்க வேண்டும் என்ற நிலையையும் சரிபார்த்து, அதனுடன் பற்களும் பளபளவென்று பிரகாசிக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர். வாயிலிருந்து நல்ல மணம் மிக்க சுவாசம் பெற, பலரும் மவுத் வாஷை உபயோகிக்கின்றனர்.

இன்றைய தலைமுறையினரின் மவுத்வாஷ் மீதான அதிகப்படியான ஈர்ப்பிற்கு டிவியில் வரும் விளம்பரங்கள் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றன. ஆனால், அளவுக்கு அதிகமானால் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் (mouthwash side effects). மவுத்வாஷின் அதிகப்படியான பயன்பாடு உங்கள் இதய ஆரோக்கியத்தையும், இரத்த சர்க்கரை அளவையும் ஏற்றி எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன.

நைட்ரிக் ஆக்சைடு மற்றும் வாய்வழி பாக்டீரியாக்கள்:

நமது வாய் முழுவதிலும் பாக்டீரியாக்கள் கோடிக்கணக்கில் தங்கி உள்ளன. இந்த மாதிரி பாக்டீரியாக்கள் அனைத்தும் உண்மையில் மிகவும் தீமையானது அல்ல. இதில் நமது ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய, செரிமானத்தை மேம்படுத்தக்கூடிய நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் ஏராளமாக உள்ளன. இந்த நுண்ணுயிரிகள் நாம் உண்ணும் உணவில் உள்ள நைட்ரேட்டுகளை நைட்ரிக் ஆக்சைடாக மாற்றும் பணியை செய்கின்றன. ​

நைட்ரிக் ஆக்சைடு என்பது இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தைச் சீராக்கும் ஒரு மிக முக்கியமான வாயுவாகும். இதனால், உடலின் ரத்த அழுத்தம் சமநிலையாக இருக்கும். ஒருவர் கிருமி நாசினி கொண்ட மவுத் வாஷை உபயோகிக்கும் போது நன்மையான பாக்டீரியாக்களையும் சேர்த்து அழித்துவிடுகின்றன. இதனால், உடலில் நைட்ரிக் ஆக்சைடு பற்றாக்குறை ஏற்பட்டு, இரத்த நாளங்கள் சுருங்க தொடங்கி இரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்குகிறது.

இதையும் படியுங்கள்:
'Mood Swing'ஐ தவிர்க்க உதவும் 'பீரியட்ஸ் ஸ்பெஷல்' பழங்கள்!
Mouth wash

மவுத்வாஷ் பற்றிய ஆய்வுகள்:

புகழ்பெற்ற ​ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின், பொது சுகாதாரப் பள்ளி மேற்கொண்ட ஒரு ஆய்வில், மவுத்வாஷ் பயன்பாட்டிற்கும் நீரிழிவு நோய்க்கும் உள்ள நெருங்கிய தொடர்பு கண்டறியப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக 1000 நபர்களிடம் இது பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம்:

ஒருவர் தினமும் இரண்டு முறைக்கு மேலாக மவுத்வாஷ் பயன்படுத்தினால் அவருக்கு முழுமையான நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் 55% வரை அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தும் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் அவர் பிரி டயாபடிக் நிலைக்கு தள்ளப்படுவார்.

​இரத்த அழுத்த உயர்வு:

இன்னொரு ஆய்வு முடிவில், தொடர்ச்சியாக மவுத்வாஷ் பயன்படுத்துபவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளதாகக் தெரிவிக்கிறது. இந்த நிலை நைட்ரைட் ஆக்சைடு குறைபாட்டால் ஏற்படுகிறது.

இதையும் படியுங்கள்:
'உம்'முனு இருக்காதீங்கப்பா... சிரிச்சா, வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்கலாம்னு ஆராய்ச்சிகள் சொல்லுதப்பா!
Mouth wash

அனைத்து மவுத்வாஷ்களும் ஆபத்தானவையா?

குளோரெக்சிடின் (Chlorhexidine) போன்ற அதிக வீரியம் கொண்ட பாக்டீரியா எதிர்ப்பு மவுத்வாஷ்களை அதிகளவில் பயன்படுத்தக் கூடாது. இவை வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களையும் கொன்று உணவு செரிமானத்தின் மீது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதனால், மருத்துவரின் ஆலோசனையுடன் ஃப்ளூரைடு கொண்ட மவுத்வாஷ்களைப் பயன்படுத்தலாம். இவை நன்மையான பாக்டீரியாக்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

மவுத் வாஷிற்கு மாற்று என்ன?

தினசரி இருமுறை பல் விலக்குவதும், சூடான தண்ணீரில் உப்பு கலந்து இருவேளை கொப்பளிப்பதால் வாய் துர்நாற்றத்தை தடுக்க முடியும். மேலும் நல்ல ஊட்டச்சத்துமிக்க உணவுகளை சாப்பிடுவதால், பற்கள் பலம் பெறும். பல் மருத்துவரின் ஆலோசனையையும் பின்பற்றவும் .

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com