தசைகளை வலிமையாக்கும் காய்கறிகள்: ஒரு விரிவான பார்வை!

Muscle Man
Muscle-Strengthening Vegetables
Published on

மனித உடலின் ஆரோக்கியத்திற்கும் செயல் திறனுக்கும் தசைகள் மிகவும் முக்கியமானவை. அதை நாம் அசைய, எடையைத் தூக்க மற்றும் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன. வலுவான தசைகள், காயங்கள் ஏற்படாமல் தடுக்கவும், எலும்புகளை பாதுகாக்கவும் உதவும். நமது தசை வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நாம் உணவில் இருந்து பெற வேண்டும் என சொல்லப்பட்டாலும், காய்கறிகள் போன்ற தாவர உணவுகளிலும் தசைகளை வலுப்படுத்தும் பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. 

இந்தப் பதிவில் தசைகளை வளர்க்கவும் பராமரிக்கவும் உதவும் சில முக்கிய காய்கறிகளைப் பற்றி பார்ப்போம். 

பசலைக் கீரை: பசலைக் கீரையில் புரதம், இரும்பு, மக்னீசியம் மற்றும் விட்டமின் சி ஆகியவை அதிகம் உள்ளன. இவை தசை வளர்ச்சிக்கு அவசியமானவை. பசலைக்கீரை நைட்ரேட்டுகளைக் கொண்டுள்ளது. இது உடற்பயிற்சியின் போது ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது. 

ப்ரோக்கோலி: ப்ரோக்கோலியில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. இவை தசை வளர்ச்சி மற்றும் உடற்பயிற்சிக்குப் பிந்தைய மீட்புக்கு உதவுகின்றன. ப்ரோக்கோலியில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் தசை செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. 

வெங்காயம்: வெங்காயத்தில் குவேர்செட்டின் என்ற பிளாவனாய்ட் உள்ளது. இது அழற்சியைக் குறைக்கவும் தசை வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. வெங்காயத்தில் உள்ள விட்டமின் சி மற்றும் மாங்கனிஸ், தசை மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. 

தக்காளி: தக்காளிகளில் லைக்கோபின் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது தசை சேதத்தைக் குறைத்து தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. தக்காளிகளில் உள்ள பொட்டாசியம் மற்றும் விட்டமின் சி ஆகியவை தசை செயல்பாட்டிற்கு முக்கியமானவை. அதே நேரம் தக்காளிகளை அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். 

பூசணிக்காய்: பூசணிக்காயில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை நிறைந்துள்ளன. இவை தசை வளர்ச்சி மற்றும் மீட்புக்கு உதவுகின்றன. பூசணிக்காயிலும் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் இருப்பதால் அவை தசை மற்றும் நரம்பு செயல்பாட்டிற்கு பெரிதளவில் உதவுகின்றன. 

இதையும் படியுங்கள்:
சுகர் நோயாளிகள் காளான் சாப்பிடலாமா? திடுக்கிடும் உண்மைகள்! 
Muscle Man

காளான்கள்: காளான்களில் புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை தசை வளர்ச்சி மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது. காளான்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் Beta-Glucans என்கிற ஒரு வகை நார்ச்சத்து உள்ளது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. 

இந்த காய்கறிகளை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக, தசை வளர்ச்சியை ஊக்குவித்து வலிமையான மற்றும் ஆரோக்கியமான உடலைப் பெறலாம். எனவே இந்த காய்கறிகளை தவறாமல் சாப்பிட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com