
கேன்சர் வியாதி என்பது ஒரு பயங்கரமான நோயாக மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. அத்தகைய கேன்சர் வரும் முன்னரே தடுக்க சில உணவுகளை எடுத்துக்கொண்டால் போதும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அந்த உணவுகள் என்னென்ன என்பதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1.பெர்ரிஸ்.
பெர்ரிஸ் பழங்களான ஸ்ட்ராப்பெர்ரி, ப்ளு பெர்ரி போன்ற பழங்களில் வைட்டமின், நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடென்ட், Anthocyanins, ellagic acid, resveratrol போன்றவை இருக்கிறது. இது கேன்சர் வருவதை தடுக்க உதவுகிறது. இந்த பழங்களில் இருக்கும் நீலம், சிகப்பு, பர்புள் பிக்மெண்ட்கள் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
2.காய்கறிகள்.
காலிஃபிளவர், முட்டைகோஸ், பிரக்கோலி போன்ற காய்கறிகளில் கேன்சரை எதிர்க்கும் Indole 3 carbinol அதிகம் உள்ளது. இந்த காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்வதால், கேன்சர் வியாதி வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
3.மீன்கள்.
மீன்களில் அதிக அளவிலான ஊட்டச்சத்தும், புரதமும் உள்ளன. மேலும் இதில் அதிகமாக ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இதை எடுத்துக் கொள்வதால் மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியுமாம்.
4. டார்க் சாக்லேட்.
அதிகமான கொக்கோவைக் கொண்ட டார்க் சாக்லேட்டை சாப்பிடுவதால் மினரல், ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் நார்ச்சத்து கிடைக்கிறது. இது புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க உதவுவதாக சொல்லப்படுகிறது. மேலும் சாக்லேட்டில் Polyphenols மற்றும் flavanols உள்ளது. இது குடலில் உள்ள நல்ல பேக்டீரியாவிற்கு உணவாக இருக்கிறது. இதனால் குடல் ஆரோக்கியம் நன்றாக மேம்பட உதவுகிறது.
5. பச்சை கீரைகள்.
Spinach, kale போன்ற கீரைகளில் Carotenoids உள்ளது. இதை எடுத்துக் கொள்வதால், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் ஆகியவை வராமல் தடுக்க உதவுகிறது.
6.தயிர்.
தயிர் போன்ற புளித்த உணவில் ப்ரோபையாடிக் உள்ளது. இதனால் நம் குடலில் உள்ள பேக்டீரியா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கேன்சர் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது. நம் குடலில் இருக்கும் நல்ல பேக்டீரியாக்கள் கேன்சர் செல்களை அழித்து குடல் சம்மந்தமான கேன்சர் வராமல் தடுக்கிறது.
7.பூண்டு.
பல நூற்றாண்டுகளாக உணவாகவும், மருந்தாகவும் பூண்டை நாம் பயன்படுத்தி வருகிறோம். பூண்டில் Allicin என்னும் Sulphur compound உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. எனவே, இதுப்போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதின் மூலமாக கேன்சர் வருவதை தடுத்து ஆரோக்கியமாக வாழலாம்.