நகங்கள் சொல்லுமே நம் உடல் ஆரோக்கியத்தை!

Nail Health
Nail Healthhttps://www.quora.com

மது கைகளின் தோற்றத்தை உயர்த்திக் காட்டுவதற்காகவே நம் விரல்களில் நகங்கள் அமைந்துள்ளன என்று ஒரு தவறான கருத்தை நாம் அனைவரும் கொண்டுள்ளோம். நகங்கள் நம் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய பல விஷயங்களை வெளிப்படுத்தக்கூடிய திறன் கொண்டவை. பல நேரங்களில் நம் உடம்பின் ஆரோக்கியம் பற்றி அறிந்துகொள்ள நாம் மிகுந்த செலவில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்கிறோம். அவற்றின் தேவையில்லாமலே நம் நகம், முடி மற்றும் சருமத்தில் தோன்றும் மாற்றங்களே நம் உடல்நிலை பற்றிய பல தகவல்களை வெளிப்படுத்தி விடும். நகத்தில் ஏற்படும் சிறு மாற்றம்  கூட நம் உடல் ஆரோக்கியம் குறித்த பல விஷயங்களைக் கூறும்.

நம்மில் பலருக்கும் நகத்தின் அடிப்பகுதியில் ஒரு பிறை சந்திரன் வடிவம் இருப்பதைக் காண்பது சகஜமான ஒன்று. இது நம் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிக் கூறுவதான அறிகுறியாகும்.  இந்த அரை வட்ட சந்திர வடிவம் லுனுலா (Lunula) என அழைக்கப்படுகிறது. நகத்தின் அடியில், நகம் உருவாவதற்கான வளர்ச்சிச் சூழலின் ஒரு பகுதியாகும் இந்த லுனுலா. அப்பகுதியில் நரம்புகள், இரத்த நாளங்கள் மற்றும் உடலின் உட்பகுதியை தூய்மை செய்வதும், நோய்த் தொற்று பரவாமல் தடுக்கவும் உதவக்கூடிய இரத்தத்தின் வெள்ளை அணுக்கள் அடங்கிய ஒருவகை திரவமும் நிறைந்திருக்கும்.

லுனுலா உற்பத்தி செய்யும் ஒரு வகை செல்களே, கடினத்தன்மை அடையும்போது நகங்களாக வெளி வருகிறது. 'நெயில் ரூட்' எனப்படும் இந்த பிறை சந்திர வடிவமானது நகம் உருவாகும் பகுதியின் ஒரு பாதியாகும். இந்த பிறை சந்திர வடிவமே நம் உடலும் நகங்களும் ஆரோக்கியமாக உள்ளதை தெரிவிக்கும் அறிகுறியாகும்.

இதையும் படியுங்கள்:
சுய அன்பு தரும் 9 வித நன்மைகள் பற்றி தெரியுமா?
Nail Health

இந்த பிறை சந்திர வடிவம் வழக்கமாக கையின் பெரு விரலில் காணப்படும். நகத்தின் பிற பகுதியின் நிறத்தை விட, ஆரோக்கியமான லுனுலாவின் நிறம் வெண்மை அல்லது வெளிர் நிறம் கொண்டதாக இருக்கும். ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரலிலும் இந்தப் பிறை தோன்றக்கூடும்.

இந்தப் பிறை போன்ற அரை வட்ட வடிவம் ஒருவரின்  நகத்தினடியில் தோன்றாவிடில் அது அவரின் உடலுக்குள்ளிருக்கும் ஆரோக்கியக் குறைபாட்டைக் காட்டுவதாகும். அந்த நபர் ஊட்டச் சத்துக் குறைபாடு, மன அழுத்தம் அல்லது அனீமியா போன்ற நோய்களால் தாக்கப்பட்டவராக இருக்கலாம். நகங்களைப் பரிசோதிக்கையில் லுனுலா சிவந்த நிறமாய்த் தோன்ற ஆரம்பித்து, லேசான தலைவலி, மன அழுத்தம் மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தால் உடனே மருத்துவரை அணுகுவது நலம்.

நாமும் நம் நகங்களை அடிக்கடி பரிசோதித்து நலமுடன் இருப்பதை உறுதி செய்து கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com