
1. கறிவேப்பிலையை சிறிதளவு எடுத்து அரைத்து, ஒரு கப் சூடான பாலில் கலந்து குடித்தால் வாத நோய் மட்டுப்படும். உடல் வலியும் நீங்கி விடும்.
2. நான்கு நாட்கள் தொடர்ந்து பப்பாளி பழத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் பல்வலி, பல்லில் ரத்தம் வருதல், பல் ஈறுகளில் வரும் நோய் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
3. சின்ன வெங்காயத்தை உரித்து நெய் விட்டு வதக்கி இரவு நேரங்களில் சாப்பிட்டு வந்தால், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
4. தொடர் இருமலுக்கு பனங்கற்கண்டு சாப்பிட்டு வர இருமல் நீங்கி விடும்.
5. வெங்காயத்தை பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்துப்பருகினால் நீர்க்கடுப்பு உடனே குணமாகும்.
6. இருபது கிராம் வெள்ளை வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டுடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வர, ரத்த மூலம் நீங்கும்.
7. எலுமிச்சைப் பழச்சாற்றில் தேன் கலந்து பருகி வர வறட்டு இருமல் குணமாகும்.
8. தொடர் விக்கலுக்கு மாதுளையை சாப்பிட்டு வந்தால் உடன் பலன் கிடைக்கும்.
9. குழந்தைகளுக்கு தொடர் இருமல் வந்தால், பெருங்காயத்தை வெந்நீர் விட்டுக்கரைத்து, அது தெளிந்ததும் நீரை மட்டும் கொடுக்க இருமல் விலகி விடும்.
10. இரவு படுப்பதற்கு முன் உள்ளங்காலில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்துக் கொண்டு படுத்தால், காலையில் எழுந்ததும் கால்களை ஊன்றி நடக்கும் போது வலி இருக்காது.
11. துளசி இலையுடன் சிறிது புதினா சேர்த்து கொதிக்க வைக்கவும். சூடு ஆறியதும் அதனுடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்று உபாதைகள் அகலும்.
12. வெங்காயச் சாற்றுடன் கடுகு எண்ணெய் கலந்து மூட்டு வலி உள்ள இடங்களில் தடவினால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)