காலையில் எழுந்ததும் வயிறு உப்புசமா இருக்கா? இந்த 5 சூப்பர் ட்ரிங்க்ஸ் குடிச்சு பாருங்க ரிசல்ட் உடனே தெரியும்!

stomach bloating
stomach bloating
Published on

இப்போதெல்லாம் கண்ட நேரத்திலும் கண்ட உணவுகளை சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. இதனால் காலையில் தூங்கி எழுந்தவுடனேயே வயிறு பலூன்போல உப்புசமாக இருப்பது பலருக்கும் பெரும் தொல்லையாக மாறிவிட்டது. இதை Bloating என்று சொல்வார்கள். கேஸ் ட்ரபிள் மற்றும் அஜீரணக் கோளாறால் நாள் முழுவதும் எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாமல் ரொம்பவே கஷ்டமாக இருக்கும். 

இதற்காக அடிக்கடி மாத்திரைகளைத் தேடி ஓடுவதைவிட, சில சிம்பிளான பொருட்களை வைத்து இந்த பிரச்சனையை மிக எளிதாக சரிசெய்ய முடியும். அப்படி காலையில் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடிய 5 இயற்கையான பானங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

1. வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்!

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் அரை எலுமிச்சைப் பழத்தை பிழிந்து குடிப்பது ரொம்பவே நல்லது. எலுமிச்சையில் உள்ள ஆசிட் தன்மை, நமது வயிற்றில் உள்ள செரிமான அமிலங்களை தூண்டிவிட்டு உணவை எளிதாக செரிக்க வைக்கிறது. இது கேஸ் பிரச்சனையை குறைப்பது மட்டுமில்லாமல், உடலில் உள்ள நச்சுக்களை முழுமையாக வெளியேற்றி உங்களை ரொம்பவே சுறுசுறுப்பாக மாற்றும்.

2. சீரகத் தண்ணீர்!

சீரகம் என்றால் சீர் அகம் அதாவது நமது உடலின் உள்ளுறுப்புகளை சீராக வைப்பது என்று அர்த்தம். ஒரு ஸ்பூன் சீரகத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை லேசாக கொதிக்க வைத்து குடிக்கலாம். இது வயிறு உப்புசத்தை குறைப்பதில் ஒரு மாபெரும் மேஜிக் செய்யும். செரிமான என்சைம்களை தூண்டிவிட்டு அஜீரணத்தை உடனடியாக சரிசெய்யும் ஆற்றல் இதற்கு உண்டு.

3. இஞ்சித் தண்ணீர்!

பாரம்பரிய மருத்துவத்தில் இஞ்சிக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. ஒரு சிறிய துண்டு இஞ்சியை தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பது ரொம்பவே சூப்பரான ஒரு தீர்வு. இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள் குடலில் தேங்கியுள்ள தேவையற்ற வாயுக்களை வெளியேற்ற ரொம்பவே உதவி செய்யும். சுவைக்காக இதனுடன் கொஞ்சம் தேன் கூட கலந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
தொப்பையை குறைக்க... வரகரிசி + சாமை அரிசி + முருங்கைக்கீரை கஞ்சி!
stomach bloating

4. சோம்புத் தண்ணீர்!

ஹோட்டல்களில் சாப்பிட்டு முடித்ததும் சோம்பு வைப்பதற்கு ஒரு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. இது செரிமானத்தை வேகப்படுத்துவதோடு, வயிற்றில் ஏற்படும் தசைப்பிடிப்புகளை ரிலாக்ஸ் செய்யும். ஒரு ஸ்பூன் சோம்பை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி காலையில் குடித்து வந்தால், நாள்பட்ட கேஸ் பிரச்சனைகள் கூட கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.

5. புதினா நீர்!

புதினா இலைகளில் உள்ள மென்தால் என்ற வேதிப்பொருள் செரிமான மண்டலத்தை ரொம்பவே கூலாகவும் அமைதியாகவும் வைத்துக்கொள்ள உதவும். சில புதினா இலைகளை சூடான தண்ணீரில் போட்டு ஒரு பத்து நிமிடம் மூடி வைத்துவிட்டு, பிறகு அந்த தண்ணீரை குடிக்கலாம். இது ரொம்பவே புத்துணர்வாக இருப்பதோடு, வயிறு உப்புசத்தையும் காணாமல் போகச் செய்யும்.

இதையும் படியுங்கள்:
சிங்கப்பூர் போறீங்களா? அப்படின்னா இந்த 7 விஷயத்தை கண்டிப்பா செய்யாதீங்க!
stomach bloating

இந்த 5 வகையான ட்ரிங்க்ஸ் எல்லாமே எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாத முழுக்க முழுக்க இயற்கையான வீட்டு வைத்தியம் தான். உங்களுக்கு எந்த சுவை பிடிக்குமோ அந்த பானத்தை தினமும் காலையில் தொடர்ந்து குடித்து வரலாம். இதோடு சேர்த்து தினமும் கொஞ்ச நேரம் வாக்கிங் போவது, நேரத்திற்கு சாப்பிடுவது போன்ற நல்ல பழக்கங்களையும் பாலோ செய்தால், வயிறு உப்புசம் என்ற பிரச்சனை உங்கள் பக்கமே வராது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com