சுளுக்கெடுப்போம் வாரீகளா..! 'சுளுக்கு' பிடிச்சவங்க இதை மட்டும் பண்ணுங்க - உடனடி தீர்வு!

Grandma is treating the girl's sprain.
natural home remedies for muscle sprain Image credit: AI Image
Published on

எல்லோருக்கும் சுளுக்கு என்பது எப்போது வேண்டுமானாலும் ஏற்படும். அப்படி சுளுக்கு பிடித்தால் அதனால் நாம் படும் அவஸ்தை இவ்வளவு அவ்வளவு இல்லை. அயோடக்ஸ் தடுவுவோம்; அமிர்தாஞ்சன் தடவுவோம்; மாத்திரைகளை விழுங்குவோம். ஆனால், சுளுக்கு கொஞ்சத்தில் போகாது. அந்த கால போலீஸ் ரவுடிகளை லாடம் கட்டுவார்கள். சுளுக்கெடுப்பார்கள். ஆனால், உங்களுக்கு தெரியுமா நம் பாட்டிமார்கள் சுளுக்கெடுப்பதில் கில்லாடிகள் என்று .

மஞ்சள் மற்றும் கடுகு பற்று: மஞ்சள் மற்றும் சிறிதளவு கடுகு சேர்த்து அரைத்து, சுளுக்கு உள்ள இடத்தில் பற்று போட்டு, ஒரு துணியால் கட்டினால் வலி மற்றும் வீக்கம் குறையும்.

முட்டை வெள்ளைக்கரு பற்று: முட்டையின் வெள்ளைக்கருவை சுளுக்கு உள்ள இடத்தில் தடவி, அதன் மேல் சிறிது உப்பு தூவி, கட்டுப்போடலாம்.

சுடுதண்ணீர் ஒத்தடம்: 48 மணி நேரத்திற்குப் பிறகு, வீக்கம் குறைந்ததும், சுடு தண்ணீரில் உப்பு போட்டு ஒத்தடம் கொடுக்கலாம்.

எண்ணெய் மசாஜ்: நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை சூடாக்கி, சுளுக்கு உள்ள இடத்தில் மென்மையாக மசாஜ் செய்யலாம்.

மூலிகை பற்று: வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெதுவெதுப்பாக சுளுக்கு உள்ள இடத்தில் தடவி வரலாம்.

பாட்டி வைத்தியம் ஒரு புறம் இருக்கட்டும். எல்லாவற்றிற்கும் மேலாக சுளுக்கு ஏற்பட்ட உறுப்புக்கு போதிய ஓய்வு கொடுப்பது முக்கியம்.

அமுக்கம் (Compression): மீள் பட்டை (Elastic bandage) கொண்டு கட்டுப்போடுவது மூட்டு அசையாமல் இருக்க உதவும்.

உயர்த்தி வைத்தல் (Elevation): வீக்கம் குறைய, பாதிக்கப்பட்ட பகுதியை இதய மட்டத்திற்கு உயர்த்தி வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
ரீல்ஸ் பார்ப்பதால் குழந்தைகளின் மூளை சுருங்குகிறதா? அதிர்ச்சி ரிப்போர்ட்!
Grandma is treating the girl's sprain.

சுளுக்கை பற்றி இன்னொரு விஷயம் நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ கிராமப்புறங்களில் சுளுக்கை மந்திரத்தால் கூட எடுப்பார்கள். எங்களுடைய பாட்டி இரண்டு கட்ட தொடப்ப குச்சியை வைத்து ஏதோ மந்திரத்தை முணுமுணுத்து கொண்டே சுளுக்கு பிடித்த இடத்தை மேலும் கீழும் தடவுவார். சுளுக்கின் பிடியும் வலியும் வேகமாக குறையும். எங்கள் பாட்டியை அவர் இருந்த தெருவில் 'சுளுக்கு பாட்டி' என்று தான் அழைப்பார்கள். அவர் இறக்கும் முன் அந்த மந்திரத்தை யாருக்கும் சொல்லாமல் போய்விட்டார். அதுதான் மிகவும் வருத்தமளித்தது. அந்த மந்திரத்தை வைத்தே கோடீஸ்வரனாகி இருப்பேன் என்று என் சகோதரன் ஒரு நாள் புலம்பிய போது, அம்மா சொன்னார் "அந்த சேவைக்கு பணம் பெற்றால் அந்த மந்திரம் வேலை செய்யாது".

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com