ரீல்ஸ் பார்ப்பதால் குழந்தைகளின் மூளை சுருங்குகிறதா? அதிர்ச்சி ரிப்போர்ட்!

ரீல்ஸ் பார்ப்பது குழந்தைகுளுக்கு 'நொறுக்குத் தீனி' போன்றதா? மூளையைச் சிதைக்கும் மொபைல் பழக்கம்!
a child scrolling reels
a child scrolling reelsImg credit: AI Image
Published on

குறுகிய கால வீடியோக்கள் (Short-form videos) குழந்தைகள் பகல் இரவாக உட்கொள்ளும் ஒரு 'நொறுக்குத் தீனி' போன்றது.

ஆரோக்கியமற்ற உணவுகள் வளரும் உடலைக் கெடுப்பது போலவே, அர்த்தமற்ற ரீல்ஸ்களை (reels) ஸ்க்ரோல் செய்வது குழந்தைகளின் முக்கியமான அறிவாற்றல் திறன்களைப் பறிப்பதாக ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

ஆய்வு என்ன சொல்கிறது?

ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள், 2025-ஆம் ஆண்டில் அமெரிக்க இளம்பருவ மூளை அறிவாற்றல் வளர்ச்சி ஆய்வில் (US Adolescent Brain Cognitive Development study) 7,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் திரை நேரம் மற்றும் மூளை அமைப்பைப் பற்றிய தரவுகளை ஆய்வு செய்தனர்.

அதிகப்படியான திரை பயன்பாடு, ADHD அறிகுறிகள் அதிகரிப்பதற்கும் மற்றும் மூளையின் பின்வரும் பகுதிகளில் கார்டிகல் தடிமன் (cortical thickness) குறைவதற்கும் தொடர்பு இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

வலது டெம்போரல் போல் (Right temporal pole) உணர்ச்சிகளை நினைவகத்துடன் இணைக்கிறது.

இடது சுப்பீரியர் ஃப்ரண்டல் கைரஸ் (Left superior frontal gyrus) அறிவாற்றல், வேலை செய்யும் நினைவாற்றல் மற்றும் இயக்க செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது.

இடது ரோஸ்ட்ரல் மிடில் ஃப்ரண்டல் கைரஸ் (Left rostral middle frontal gyrus) கவனக் கட்டுப்பாடு (கவனம் செலுத்தும் திறன், கவனச்சிதறல்களைத் தவிர்த்தல், பணிகளுக்கு இடையே மாறுதல், திட்டமிடுதல்), மன அழுத்த மேலாண்மை மற்றும் கல்வியறிவு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.

திரைகளால் இழக்கப்படும் வெள்ளைப்பொருள் (White matter):

இளம்பருவத்தில் தூக்கக் குறைவு, மூளையின் முக்கிய வயரிங் அமைப்பான 'வெள்ளைப்பொருளை' குறைக்கிறது.

இது மோட்டார் மற்றும் உணர்ச்சி செயல்பாடு, கற்றல், நினைவாற்றல் மற்றும் ஒருங்கிணைந்த சிந்தனைக்கு முக்கியமானது.

இதையும் படியுங்கள்:
உங்கள் கால் கருப்பாக மாறுகிறதா? இது உயிருக்கே ஆபத்தான அறிகுறியாக இருக்கலாம்!
a child scrolling reels

2025-ஆம் ஆண்டு JAMA இன்டர்னல் மெடிசின் ஆய்வில், திரைகளை அதிகமாகப் பயன்படுத்தும் இளைஞர்கள் அதிக மனக்கிளர்ச்சியுடன் (impulsive) இருப்பதையும், குறைந்த சொற்களஞ்சியம் மற்றும் புரிந்துகொள்ளும் திறன்களைக் கொண்டிருப்பதையும் கண்டறிந்துள்ளது.

'அடிமைத்தனமான நடத்தையைக் கட்டுப்படுத்தவும், அதிக மனக்கிளர்ச்சி அடையாமல் இருக்கவும் மூளையின் கோர்டெக்ஸ் நமக்குத் தேவை. கார்டிகல் தடிமன் குறைவதால் அந்தப் பகுதிகள் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. மனக்கிளர்ச்சியானது சமூக ஊடகங்களிலிருந்து 'டோபமைன் ஹிட்ஸ்' (dopamine hits) தேட நம்மைத் தூண்டும்"என்கிறார் மிட்ச் பிரின்ஸ்டீன், உளவியல் மற்றும் நரம்பியல் பேராசிரியர்.

எல்லாம் சரி, இந்த மூளை சிதவை தடுப்பது எப்படி?

இந்த மூளைச் சிதைவைத் தடுப்பது எப்படி?...என்று AI-யிடம் கேட்காதீர்கள்!

  • திரைகளை படுக்கையறைக்கு கொண்டு செல்லாதீர்கள்.

  • தூங்கும் இடத்திலிருந்து போன்களைத் தள்ளி வைக்கவும்.

  • திரை நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள். சிக்கல் தரும் செயலிகளை நீக்கவும், பயன்பாட்டைக் குறைக்கவும்.

  • முக்கியமாக வீட்டுப்பாடத்திற்கு AI-யைப் பயன்படுத்தாதீர்கள்.

  • குழந்தைகளுக்குப் பதிலாக AI வேலை செய்ய அனுமதிக்காதீர்கள். அவர்களின் மூளையைப் பயன்படுத்த விடுங்கள்.

  • அனைத்திற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாதீர்கள்.

  • குழந்தைகளுக்கு ஒரு சிறிய போராட்டம் அல்லது சிரமம் மூளைக்கு எப்போதும் நல்லது என்று உணருங்கள்.

  • குழந்தைகள் சாப்பிடும் நேரத்தில் அவர்களிடம் அலைபேசியைக் கொடுக்காதீர்கள். கவனம் தேவை.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com