
சிலருக்கு பூஞ்சை தொற்றினால் காலில் ஆணி ஏற்படுவதுண்டு. இதற்காக கவலை வேண்டாம். வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அதை குணப்படுத்தலாம்.
1. எப்சம் உப்பு
ஒரு கைப்பிடி எப்சம் உப்பை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து அதில் கால்களை பதினைந்து நிமிடங்கள் வைப்பதால் கால் மிருதுவாகும். இரத்த ஓட்டம் அதிகமாவதுடன் சோர்வை நீக்கும். மேலும் இந்த உப்பு தோலை எக்ஸ்ஃபோலியேட் செய்து மிருதுவாக்கும்.
2. ப்யூமிஸ் கல்
காலை வெது வெதுப்பான துணியில் வைத்து, ப்யூமிஸ் கல் கொண்டு பாதித்த பகுதியில் மெதுவாக தேய்க்க தோல் மென்மையாகும். அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். இந்த நுரைகல் காலில் உள்ள விறைப்புத் தன்மையை நீக்கி மிக மிருதுவாக்கும். ஆணியும் குணமாகும்.
3. ஃபுட் ஃபைல்ஸ்
இதுவும் ப்யூமிஸ் கல் போன்ற ஒரு சாதனமாகும் இதைக்கொண்டு ஆணியை மெதுவாக தேய்க்க அந்த இடம் மென்மையாகும். அதை தேய்ப்பதற்கு முன் காலை வெதுவெதுப்பான நீரில் வைத்து தேய்ப்பது நல்லது. பிறகு நல்ல மாய்ட்சரைசரை தடவவும். இதன்மூலம் சருமம் மிருதுவாகும்.
4. எக்ஸ்ஃபோலியேட் க்ரீம்கள்
க்ளைகாலிக் அமிலம் மற்றும் அமோனியம் லாக்டேட் இறந்த செல்களை நீக்கும் பண்புடையது. இவற்றை நீரில் சேர்த்து அதில் காலை வைத்தால், எக்ஸ்ஃபோலியேட் ஆகி மென்மையாகும்.
5. பேக்கிங் சோடா பேஸ்ட்
பேகிங் சோடாவுடன் நீர் மற்றும் எலுமிச்சை ஜுஸ் சேர்த்து பேஸ்ட் ஆக்கி ஆணியின் மீது தடவவும். பிறகு சாக்ஸ் அணியவும். இரவு அப்படியே வைத்து மறுநாள் கழுவ நல்ல பலன் தெரியும்.
6. மென்மை க்ரீம்கள்
நீங்கள் படுக்கப் போகுமுன் வாஸலீன் தடவவும். இது சருமத்தை மிருதுவாக்கும். ஆணியை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் திரும்பவும் வராமல் காக்கும்.
7. குஷன்
ஆணியோடு நடக்கும் போது வலிக்கும் அதன்மீது குஷன் மாதிரியான மென்மையான பாடுகள் (pads) வைத்து நடக்க வலி நீங்குவதுடன் குணமாகும்.
8. க்ரீம்கள்
நல்ல ஈரப்பதமுள்ள க்ரீம்கள் தடவி சாக்ஸ் அணிந்து நடக்க ஆணி குணமாகும். காட்டன் சாக்ஸ் அணியவும்.
9. ஆணி சாக்ஸ்கள்
மருந்து கடைகளில் கிடைக்கும் அதை அணிந்து நடக்க ஆணி வெகு விரைவில் குணமாகும்.
10. சரியான காலணி
ஹீல்ஸ் அணிவதை தடுத்து சரியான காலணியை தேர்ந்தெடுக்கவும். கால் விரல்களுக்கு மெத்து மெத்தென்ற வகையில் காலணி வாங்கவும்.
11. நகம் வெட்டுங்கள்
அதிகமாக நகங்களை வளர்க்காமல் வெட்டி சீராக வைக்கவும். அதிக நகங்கள் வளர்ப்பது ஆணிக்கு சரியல்ல. தினமும் சோப் கொண்டு காலை கழுவி நல்ல ஈரப்பதமான மாய்ச்ட்சரைசர் பயன்படுத்தவும். இப்படி தனி பராமரிப்பு தந்தால் ஆணி தடுக்கப்படும்.
பூண்டை நசுக்கிப் இதன் சாற்றை இரவு ஆணியின் மீது தடவி ஒரு துணியைக் கட்டி மறுநாள் கழுவ ஆணி குணமாகும். மல்லிகைப் பூ இலையை இடித்து சாறு எடுத்து அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து காலை வைக்க ஆணி குணமாகும்.
அம்மான் பச்சரி செடியின் பாலைத் தடவி வர ஆணி குணமாகும். கொடிவேலி வேர்ப்பட்டை எடுத்து அரைத்து ஒரு புளியங்கொட்டை அளவு ஆணி மீது தடவி ஆணி சரியாகும். மருதாணியையும் மஞ்சளையும் அரைத்து ஆணியில் வைத்து துணியால் கட்டி மறுநாள் கழுவ ஆணி குணமாகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)