விடாக்கண்டன் பித்த வெடிப்பையும் காணாமல் போகச் செய்யும் மேஜிக் வைத்தியம் இதோ!

Foot crack remedies
Foot crack
Published on

40 வயதிற்கு மேல் பெரும்பாலானவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் பாத வெடிப்பு(Foot crack)மிகவும் பொதுவானதாகும். போதுமான ஈரப்பதம் இல்லாத காலங்களில் பாதங்களின் தோல் வறண்டு, பித்த வெடிப்புகள் ஏற்படலாம். இத்தகைய வெடிப்புகள் வலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தி சில சமயங்களில் ரத்தப்போக்கைக் கூட உண்டாக்கும். இதை சரி செய்வதற்கு எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

பித்த வெடிப்புக்கான பொதுவான காரணங்கள்:

பாதங்களில் போதுமான ஈரப்பதம் இல்லாமல் போவது பித்த வெடிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும், சிலருக்கு தோல் கடினமாக மாறி பித்த வெடிப்புக்கு வழிவகுக்கும்.

அரிக்கும் தோல் அலர்ஜி போன்ற சில சரும நோய்கள் காரணமாகவும் பித்தவெளிப்புகள் ஏற்படலாம். 40 வயதுக்கு மேல் சில உடல் நிலைமைகள் காரணமாக, ஸ்டெராய்டு போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது, பித்த வெடிப்புகள் உண்டாகும் வாய்ப்புள்ளது. காற்று புகாத காலணிகளை அடிக்கடி அணிவதால், வியர்வை அதிகமாக தேங்கி பித்தவெடிப்பு உண்டாகும்

பித்த வெடிப்புக்கான வீட்டு வைத்தியங்கள்:

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் தேங்காய் எண்ணையை பாதங்களில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். இதை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்தால் பித்த வெடிப்பு விரைவில் சரியாகும்.

கற்றாழை ஜெல் பாதங்களின் வறட்சியைப் போக்கி, பித்த வெடிப்புகளை குணப்படுத்த உதவுகிறது. எனவே, பித்த வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் பாதங்களில் கற்றாழை ஜெல் தடவி 30 நிமிடங்கள் அப்படியே ஊற வைத்து பின்னர் கழுவி விடவும்.

எலுமிச்சை சாறு பாதங்களில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், புதிய செல்களை உருவாக்கவும் உதவுகிறது. ஒரு பக்கெட் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து 15 நிமிடங்கள் உங்கள் கால்களை ஊற வையுங்கள்.

பப்பாளி பழத்தை நன்கு மசித்து, தேன் கலந்து பாதத்தில் தடவி வர, கொஞ்சம் கொஞ்சமாக பித்த வெடிப்புகள் குணமாகும். அல்லது வாழைப்பழத்தை மசித்தும் பாதங்களில் தடவலாம்.

வெள்ளரிக்காய் சாறு பாதங்களை புதுப்பிக்கும் பண்புகளைக் கொண்டது. இது வீக்கத்தைக் குறைத்து, பித்த வெடிப்பை விரைவில் குணப்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
மருத்துவ உலகில் மாபெரும் புரட்சி! மூட்டு வலியை வேரோடு அழிக்கும் 'ஆண்டி-ஏஜிங்' ஊசி!
Foot crack remedies

இந்த வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றி, 40 வயதிற்கு மேல் ஏற்படும் பித்த வெடிப்பை நீங்கள் எளிதாக சரி செய்ய முடியும். நீங்கள் இவற்றை முயற்சித்த பிறகும் குணமடையவில்லை எனில், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

-கிரி கணபதி

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com