நீரிழிவு நோய் தாக்கத்தைக் குறைக்கும் நாவல் பழம்!

Novel fruit that reduces the impact of diabetes
Novel fruit that reduces the impact of diabeteshttps://manithan.com
Published on

நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ போன்றவை நிறைந்துள்ளன. நாவல் பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற குளுக்கோசைட் உள்ளது. இதன் செயல்பாடு உடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. நாவல் பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. நாவல் மரம் அனைத்து வகையிலும் ஒரு சிறப்பான மரமாகப் போற்றப்படுகிறது.

நாவல் பழத்தின் பயன்கள்: நாவல் பழம் பித்தத்தைத் தணிக்கும். மலச்சிக்கலை குணப்படுத்தும். இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகை நோயை குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியை நிவர்த்தி செய்யும். சிறுநீரகக் கற்கள் கரையவும், மண்ணீரல் கோளாறுகளை சரி செய்யவும்  நாவல் பழம் உதவுகிறது.

நாவல் பழம் நீரிழிவு நோயைத் தடுக்கிறது. தினமும் இந்தப் பழத்தை சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. நீரிழிவு நோயாளிகள் நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொண்டு வந்தால் சிறுநீர்ப் போக்குக் குறையும்.

ஈறுகள் மற்றும் பல் பிரச்னை உள்ளவர்கள் நாவல் பழத்தினை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். அதிலும் நாவல் பழத்தின் இலையை பொடி செய்து அதனைக் கொண்டு பற்களைத் துலக்கி வந்தால் ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
இளமை பொங்கும் கொலாஜன் உற்பத்தியை இயற்கையாக அதிகரிக்கும் வழிகள்!
Novel fruit that reduces the impact of diabetes

நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேலை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரை அளவு 15 நாட்களில் 10 சதவிகிதத்தைக் குறைத்து விடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்தி விடலாம் என்கிறது ஒரு சித்த மருத்துவ ஆய்வு.

நாவல் பழம் கிடைக்கும்போதெல்லாம், குறிப்பாக அதன் கொட்டையைப் பத்திரப்படுத்தி எடுத்து வைத்திருந்து அதை பயன்படுத்தி ஆரோக்கியம் காப்போம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com