இந்த எண்கள் எல்லாம் சரியாக இருந்தால் உங்களுக்கு நல்லது ... இல்லை என்றால் ஜாக்கிரதை!

Numbers that will ensure your health
Numbers that will ensure your health
Published on

நமது உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ள சில "எண்களில்" கவனம் செலுத்தினால் போதும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அவர்கள் கூறும் அந்த அதிசய எண்கள்,

7000: சுறுசுறுப்பற்ற வாழ்வே பல உடல் நலப் பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. அதனை தவிர்க்க ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 7000 அடிகளாவது நடங்கள் என்கிறார்கள் சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். கிட்டத்தட்ட 1,60,000 பேர்களை ஆய்விற்கு உட்படுத்தியதில் தினசரி 7000 அடிகள் நடப்பவர்களுக்கு புற்றுநோய் நோய் அபாயம் 87%, டைப் 2 சர்க்கரை நோய் 14%, டிமென்சியா எனும் மறதிநோய் அபாயம் 38%, இதய நோயாளிகளின் அபாயம் 25% குறைவதாக கண்டறிந்துள்ளனர்.

தினசரி 30 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடைப்போட்டால் , புத்துணர்ச்சியாக, சக்தியூட்டப்பட்டவராக, அதே நேரத்தில் ரிலாக்ஸாக உணர்வீர்கள். வாரத்திற்கு 5 நாட்களாவது தினசரி 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும். இது எதுவும் முடியாதவர்கள், குறைந்தபட்சம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரு நாளைக்கு 7000 அடிகளாவது நடக்க வேண்டும்.

TSH 0.5-4.7 மைக்ரோ யூனிட்/எம் : உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான தைராய்டு தூண்டும் ஹார்மோன்( TSH) அளவு 0.5-4.7 மைக்ரோ யூனிட்/எம்.எல் - இந்த அளவுக்குள் தான் இருக்க வேண்டும். 30 வயதைத் தாண்டிய ஒவ்வொருவரும் வருடத்திற்கு ஒரு முறை "தைராய்டு டெஸ்ட்" செய்து கொள்வது நல்லது குறிப்பாக பெண்கள். தைராய்டு சுரப்பு குறைவு அல்லது அதிகம் இரண்டுமே அபாயமானவை. காரணம் அது கடைசியில் இதயத்தை பாதிக்கும். தகுந்த மாத்திரைகள் மூலம் தைராய்டு குறைவை சரி செய்யலாம்.

25 BMI : "பாடி மாஸ் இன்டெக்ஸ்" என்பது ஒருவருடைய உயரத்திற்கும், எடைக்கும் உள்ள விகிதத்தை காட்டும் அளவீடு. 'இது ஒருவரின் உடல் எடையை, குறைவா? சாதாரண எடையா? அல்லது அதிகமா?!' என்று அறிய உதவுகிறது. இது 18.5 முதல் 25 கே.ஜி/எம் 2 க்குள் இருக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள "பாடி மாஸ் இன்டெக்ஸ் (பி.எம்.ஐ) அளவு 25 ஆக இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் உணர்வார்கள். இது அதிகமாக இருக்கும் பட்சத்தில் பல்வேறு உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படும். உடற்பயிற்சிகள் மற்றும் உணவு கலோரி கட்டுப்பாடு மூலம் பி.எம்.ஐயை 25 என்ற அளவில் வைக்கலாம்.

25-30 கிலோ: நல்ல ஆரோக்கியமான இளம் பருவத்தினரின் "கைப் பற்றும் திறன்"(ஹேண்ட் கிரிப் ஸ்ட்ரென்த்) அளவு தான் இது. உங்களின் தசை மற்றும் எலும்புகளின் வலுவைக் காட்டும் திறன் அளவு இது. இந்த அளவு குறையும் போது நீங்கள் எலும்புச் சிதைவு நோயால் பாதிக்கப்படலாம்.

இதன் அளவை அதிகரிக்க கால்சியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். பாலினம் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து கைப்பிடி வலிமை மாறுபடும்.

200 எம்.ஜி(200mg/dl) : நமது உடலில் நல்ல கொலஸ்டிரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் இரண்டும் சேர்ந்து உங்களின் மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 எம்.ஜிக்கு கீழ் தான் இருக்க வேண்டும். இது ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை காட்டுகிறது. இது அதிகமாக இருக்கும் பட்சத்தில் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஆபத்து அதிகம். LDL (கெட்ட) கொலஸ்ட்ரால்,100 mg/dLக்குக் கீழ் இருக்க வேண்டும். HDL (நல்ல) கொலஸ்ட்ரால், 60 mg/dLக்கு மேல் இருக்க வேண்டும்.

60-100: BPM( Beats per minute) : நமது இதயத்துடிப்பு நாம் ஓய்வாக இருக்கும் போது 60-100 வரை இருக்க வேண்டும். இதன் அளவு 50 க்கும் கீழே குறைந்தால் ஆபத்து. 50 முதல் 70 வரை இருந்தால், அவர்கள் ஆரோக்கியமான இதயத்தோடு இருக்கிறார்கள் என்று அர்த்தம்.100 க்கும் மேல் பலமுறை இருந்தால், மருத்துவரை சந்திக்க வேண்டும்.

50-100 HRV(Heart rate variability): இதய துடிப்பின் அலைவரிசை சீராக இருப்பது அவசியம். இது சீராக இல்லாவிடில் பிரச்சினை ஏற்படும். இது அதிகமாக இருந்தால், மன அழுத்தம், மன பதட்டமும் ஏற்படும். இந்த அளவு குறையும் போது களைப்பு, தூக்கமின்மை, மனக்குழப்பம் ஏற்படும். சாதாரண இதய துடிப்பு மாறுபாடு (HRV) வரம்பு பொதுவாக வயது வந்தோர்களில் நிமிடத்திற்கு 50 முதல் 100 மில்லி விநாடிகள் வரை இருக்கும்.

இதையும் படியுங்கள்:
நீங்க ஒரு விஷயத்தை மறந்தா, இந்த நோய் வர வாய்ப்பு இருக்கு! டாக்டர்கள் ரகசியத்தை வெளியிட்டார்கள்!
Numbers that will ensure your health

SpO2-95-100: உங்கள் இரத்த ஆக்ஸிஜன் அளவு என்பது உங்கள் இரத்த சிவப்பணுக்கள் எவ்வளவு ஆக்ஸிஜனைச் சுமந்து செல்கின்றன என்பதற்கான அளவீடு ஆகும். ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு ஆரோக்கியமான மனிதனுக்கு 95-100 வரை இருக்க வேண்டும். இதன் அளவு குறையும் போது மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படும். மூச்சுத்திணறல் ஏற்படும்.

7-8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம்: உடல் மற்றும் மனம் இரண்டின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானதாகும். ஒரு ஆரோக்கியமான மனிதன் மூன்று வகையான தூக்க சுழற்சிக்கு ஆளாகின்றனர். அது சாதாரண தூக்கம், ஆழ்ந்த தூக்கம், ரேம் தூக்கம் (Rem sleep). தூக்கம் இரண்டு நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மூளையை உண்ணும் அமீபா நோய்யில் இருந்து நம்மை காத்து கொள்வது எப்படி?
Numbers that will ensure your health

இதில் NREM (விரைவான கண் அசைவு) மற்றும் REM (விரைவான கண் இயக்கம்) ஆகியவை அடங்கும். NERM உடல் மீட்பை ஊக்குவிக்கிறது, தசைகள் ஓய்வெடுக்க மற்றும் சரிசெய்ய அனுமதிக்கிறது. REM அறிவாற்றல் செயல்முறைகள், நினைவக ஒருங்கிணைப்பு, கனவுகளுடன் தொடர்புடையது. சரியான தூக்கம் நல்ல ஆரோக்கியத்திற்கு நல்லது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com