பெண்களை குறிவைத்துத் தாக்கும் ஆஸ்டியோபொரோசிஸ்!

Osteoporosis affects women more
Osteoporosis affects women morehttps://www.metrohospitals.com

ந்த நோயுமே நமக்கு வருவதற்கு முன்பு அதைப் பற்றிய விழிப்புணர்வை தெரிந்து கொள்ளாமலேயே இருந்து விடுகிறோம். முன்பே அதைப் பற்றி அறிந்திருந்தால், வரும்முன் காத்துக்கொள்ளலாம். ஆஸ்டியோபொரோஸிஸ் வருவதற்கு முக்கியமான காரணம், பெண்கள் தங்கள் உடலை ஆரோக்கியமாக கவனித்துக் கொள்ளாததேயாகும். பால் குடிப்பது, எலும்புகளை உறுதிப்படுத்தும் உணவுகளை எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சி போன்றவற்றில் ஆர்வம் காட்டாததேயாகும். இது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

ஆஸ்டியோபொரோசிஸ் என்பது எலும்புகளில் உள்ள தாதுக்களின் அடர்த்தி மற்றும் எலும்பின் நிறை குறைவதால் ஏற்படுவதாகும். எலும்பின் கட்டமைப்பு மற்றும் வலிமை மாறுபடுவதால் எலும்பில் இருக்கும் வலிமை குறைந்து எலும்புகளில் முறிவு ஏற்படும்.

ஆஸ்டியோபொரோசிஸ் நோய் வந்ததை அவ்வளவு எளிதாகக் கண்டுப்பிடிக்க முடியாது. இந்த நோய் வந்ததற்கான அறிகுறிகளே தெரியாது. அதனால் இதை ‘அமைதியான நோய்’ என்று சொல்வதுண்டு. எலும்பு முறிவுகள் ஏற்படுவதை வைத்தே இதை அறிய முடியும். இந்த நோய் ஆண்களுக்கும் வரும், எனினும் பெண்களையே அதிகம் இது குறி வைத்துத் தாக்குகிறது. இந்நோய் குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களையும், வயதான பெண்களையுமே தாக்கும். எந்த எலும்பில் வேண்டுமானாலும் முறிவு ஏற்படலாம். இருப்பினும், அதிகம் முறிவு ஏற்படுவது இடுப்புப் பகுதி, மணிக்கட்டு, முதுகெலும்பு ஆகியனவாகும்.

இந்நோயை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:

உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். தினமும் நடப்பது மிகவும் நல்லதாகும். மதுப்பழக்கம், புகையிலை பழக்கத்தை நிறுத்த வேண்டும். ஆஸ்டியோபொரோசிஸ் நோய்க்காக கொடுக்கப்படும் மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து உணவில் அதிகமாக சேர்த்து கொள்வதால் பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.

சாதாரணமாக கீழே விழும்போதே எலும்புகள் உடையக் கூடும். அது வலிமையான எலும்புள்ளவர்களுக்கு நடப்பதில்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கே எலும்பு முறிவு ஏற்படும். குனிவது, ஏதாவது பொருளைத் தூக்குவது, அதிக பாதிப்பின்போது இருமினால் கூட எலும்பு முறிவு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ‘செனைல் ஆஸ்டியோபொரோசிஸ்’ என்பது முழுக்க முழுக்க வயதாவதால் வரக் கூடியதாகும்.

ஆஸ்டியோபொரோசிஸ் பற்றி அறிந்து கொள்வதற்கு எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். இந்த பரிசோதனையின் பெயர், டெக்சாவாகும். எக்ஸ் ரே கதிர்களை பயன்படுத்தி இடுப்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு போன்ற இடங்களில் உள்ள எலும்பின் அடர்த்தியை கண்டுப்பிடிப்பார்கள். இந்த பரிசோதனை செய்து கொள்ள 30 நிமிடங்கள் வரையாகும்.

இதையும் படியுங்கள்:
முதுமையை தாமதப்படுத்தும் பெண்களுக்கான 7 ஆரோக்கிய பழக்கங்கள்!
Osteoporosis affects women more

ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பு இருக்கிறது என்று தெரிந்தால், வாழ்க்கை முறை, உணவு முறையை மாற்றுவதாலும், மருந்துகளாலும் குணப்படுத்த முடியும். உணவுகளில் அதிகப்படியான கால்சியம் மற்றும் வைட்டமின் டியை சேர்த்துக்கொள்வது நல்லதாகும். நன்றாக உடற்பயிற்சி செய்வதும் உடலுக்கு நலம் தரும். ஆஸ்டியோபொரோஸிஸ் பாதிப்பை சரியான சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

ஆண்களுக்கு டெஸ்ட்டோஸ்ட்ரான் தெரபி செய்வது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கும். பெண்களுக்கு, மெனோபாஸிற்கு முன்பும் பின்பும் ஈஸ்ட்ரோஜன் தெரபி கொடுக்கப்படுவது எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவும். ஆஸ்டியோபொரோஸிஸ் இருப்பதாக கருதும்போது உடனடியாக மருத்துவரை அனுகி, அதற்கான பரிசோதனை செய்து பார்த்து தெளிவு பெறுவது நல்லதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com