
பொதுவாகவே ஒருவருக்கு வயதாகும்போது, அவரின் உடலின் எலும்புகள் பலவீனமடைந்து பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 40 வயதை தாண்டியவர்களுக்கு, அதற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பிரச்சனைகள் மிகவும் பொதுவானது. வயது மட்டுமல்ல, சில மருந்துகளும் எலும்புகளை பலவீனப்படுத்தும். இதன் காரணமாக, எலும்புகள் அடர்த்தியை இழக்க நேரிடும். இதனால் எலும்புகள் வலுவிழந்து எலும்பு முறிவுகள், எலும்பு தேய்மானம் ஏற்படும். இது பெண்களில் மட்டுமல்ல, ஆண்களிடமும் தோன்றும். எனவே ஆண்கள் தங்கள் எலும்புகளில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். ஆண்கள் தங்கள் எலும்பு ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தினால், அது எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
எலும்பு ஆரோக்கியத்தின் மோசமான அறிகுறிகள்:
பொதுவாக அனைவரும் எலும்புகள் தேய்ந்த பின்னரோ, முறிந்த பின்னரோ தான் அதனை பற்றி கவனிக்கின்றனர். எடை குறைவாக இருப்பவர்களிடமும் ஸ்கோலியோசிஸின் குடும்ப வரலாற்றைக் கொண்டவர்களிடமும் இந்தப் பிரச்சனை மிகவும் பொதுவானது. எலும்பின் அடர்த்தி குறைவு மற்றும் குறைந்த கால்சியம், மற்றும் வைட்டமின் டி குறைபாடு எலும்பு குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்; எப்போதும் உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு எலும்பு வளர்ச்சி மற்றும் எலும்பு பராமரிப்பை கடினமாக்கும்; மற்றும் எலும்புகளை பலவீனமடைய வைக்கும். மேலும் செலியாக் நோய் இருந்தால் எலும்பு ஆரோக்கியத்தை இன்னும் பாதிக்கலாம். கார்டிகோ ஸ்டீராய்டுகள் போன்ற மருந்துகளை அதிகமாகப் பயன்படுத்துவதால் எலும்புகள் பலவீனமடையும்.
நீரிழிவு நோய் , நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் போன்ற சில உடல்நலப் பிரச்சனைகள் ஆண்களுக்கு எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மேலும் புகைபிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல், எப்போதும் அமர்ந்து வேலை செய்யும் வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை எலும்பு அடர்த்தியைக் குறைத்து ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை அதிகரிக்கும். இதனால் கடுமையான எலும்பு முறிவு ஏற்படலாம். உறுதியற்ற தன்மை இருக்கும்போது எலும்பு முறிவு விகிதம் ஆண்களில் அதிகமாக இருக்கும். இது ஆண்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கலாம்.
எலும்பு அரிப்பு நோயை தடுக்கும் முறைகள்:
வாழ்க்கை முறை மாற்றங்கள்:
எலும்பு தேய்மானத்தை தவிர்க்க தினசரி உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி கொண்ட ஆரோக்கியமான உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டும். அதேபோல் தினசரி உடற்பயிற்சி முக்கியம். புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கால்சியம்:
எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கவும், அதன் மூலம் எலும்பு முறிவு அபாயத்தைக் குறைக்கவும் சில கால்சியம் மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். மாற்று சிகிச்சை மற்றும் மருந்துகள் மூலமும் எலும்புகளை சரிசெய்ய முடியும்.
கவனமாக நடக்கவும்:
எலும்பு பலவீனமாக உள்ள ஆண்கள் எப்போதும் கவனமாக நடக்க வேண்டும்; முடிந்தவரை விழுவதைத் தவிர்க்க வேண்டும். தடைகள் இல்லாத இடங்களில் சரியான வெளிச்சத்தில் மற்றும் சீரான மற்றும் ஆற்றல் தரும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
DHA பரிசோதனை :
எலும்பு அடர்த்தி மற்றும் அதன் உறுதியற்ற தன்மையைக் கண்டறிய DHA பரிசோதனை செய்வது மிகவும் அவசியம். இந்த இரத்தப் பரிசோதனை மூலம், ஹார்மோன் அளவைக் கண்டறிந்து எலும்பு அரிப்பை ஏற்படுத்தும் நிலைமைகளைக் கண்டறிய முடியும். வயது, பாலினம் மற்றும் வேறு சில காரணிகளை கணக்கில் கொண்டு பரிசோதனைகள் மூலம் அறிய முடியும்.
மருத்துவர் ஆலோசனை :
எலும்பியல் மருத்துவரிடம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஆலோசனை பெற்று , அவர் கூறும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.