மூலிகைகளை மூலையில் கிடத்தாதீர்கள்! அவற்றின் முக்கியத்துவத்தை மறக்காதீர்கள்!

வீட்டுக்கு அருகில் கிடைக்கும் சில பச்சிலைகளை கொண்டு சீசனுக்கு தகுந்தாற் போல் முதலுதவிகளை செய்து கொள்ளலாம்.
திருநீற்றுப்பச்சிலை, தண்ணீர் விட்டான் கிழங்கு, முருங்கை
பச்சிலை மூலிகைகள்
Published on

வீட்டுக்கு அருகில் கிடைக்கும் சில பச்சிலைகளை கொண்டு சீசனுக்கு தகுந்தாற் போல் முதலுதவிகளை செய்து கொள்ளலாம். அவற்றில் சில பச்சிலைகளைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

இதையும் படியுங்கள்:
பெண்களே! உங்கள் தொடர் ஆரோக்கிய நன்மைக்கு 'தண்ணீர் விட்டான் கிழங்கு' பெஸ்ட்!
திருநீற்றுப்பச்சிலை, தண்ணீர் விட்டான் கிழங்கு, முருங்கை

தண்ணீர் விட்டான் கிழங்கு :

இதன் வேரில் ஏறக்குறைய 100 கிழங்குகள் இருக்கும். எனவே இது சதாவேரி, சதாவேலீ, சதா மூலம் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதன் கிழங்கு நாள்பட்ட சுரம், நீரிழிவு, எலும்புருக்கி, உட்சூடு முதலியவற்றை போக்கும் தன்மை உடையது. இக்கிழங்கை பாலில் வேக வைத்து அந்தப் பாலை பருகினால் உஷ்ணத்தால் உண்டான சுவையின்மை, உணவு செரியாமையினால் ஏற்படும் வயிற்றுப்போக்கு இவை அனைத்தும் சரியாகும். இக்கிழங்குச்சாற்றுடன் தேன் சேர்த்து சாப்பிட வயிற்றில் உண்டாகும் சூலை நோய் சரியாகும்.

திருநீற்றுப்பச்சிலை:

இந்த இலையின் சாற்றில் வசம்பை இழைத்து அந்த விழுதை முகத்தில் ஏற்படும் பருக்களுக்கு போட பருக்கள் குணமாகும். இதன் விதையை நீரில் ஊற வைத்து அத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்து அருந்துவது உண்டு.

இதனால் சிறுநீர் எரிச்சல் குணமாகும். இளநீரில் திருநீற்றுப்பச்சிலை விதையை சிறிது போட்டு ஐந்து நிமிடம் கழித்து சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதனை உருத்திரச் சடை என்றும் சப்ஜா சிதை என்றும் சொல்வதுண்டு. சப்ஜா விதையை மோரிலிருந்து எலுமிச்சை ஜூஸ் வகைகளில் ஊறவைத்து அருந்தினால் குளிர்ச்சி கிடைக்கும்.

சர்வ சஞ்சீவி முருங்கை:

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம் ,சுண்ணாம்பு சத்து போன்றவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் பொரித்து சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் தீரும்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஏற்பட்ட உணவு பஞ்சத்தின் போது முருங்கைக்கீரை, காயையும், வேரையும், பட்டையும் உணவாக சமைத்து சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார்கள் என்பது அந்த காலகட்டத்தில் இருந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இதிலிருந்தே முருங்கை எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.

கீரைகள்:

கீரைகளில் பலவித சத்துப் பொருட்களும் சரீர வளர்ச்சிக்கு தேவையானவைகளும் அடங்கி இருக்கின்றன. உடலுக்கு நன்மை விளைவிக்க கூடிய உலோகப் பொருட்கள் பல கீரைகளில் நிறைந்திருக்கின்றன. கீரையில் ஒருவித உப்புப் பதார்த்தம் இருக்கின்றது. அதற்கு உணவுகளிலும், ஆகாரப் பண்டங்களிலும் உள்ள புளிப்பை மாற்றி ரத்தம் சரியாக இருக்க வேண்டிய நிலைக்கு கொண்டு வரும் சக்தி இருக்கின்றது.

இந்த குணத்தினால் குடல், சுவாசம் முதலிய உறுப்புகளுக்கு ஏற்படும் வியாதிகள் நீக்கப்படுகின்றன. கீரையிலே சர்க்கரை சத்து கிடையாது. நீரிழிவு வியாதி உள்ளவர்கள் கூட தாராளமாக பயம் இன்றி தங்கள் ஆகாரத்துடன் சேர்த்து உண்ணலாம் . கீரைகளை ஒழுங்காக சாப்பிடுபவருக்கு சிறுநீரக ரோகங்கள் வருவது இல்லை. ஆரோக்கியத்திற்கு அவசியமான உயிர் சத்துக்கள் வைட்டமின்கள் கீரைகளில் மிகுதியாக இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தக் கூடிய 5 மூலிகைகள்!
திருநீற்றுப்பச்சிலை, தண்ணீர் விட்டான் கிழங்கு, முருங்கை

மனிதனை காக்கும் மூலிகைகள்... அவை உதவும் விதங்கள் :

  • விதையின்றி தோன்றும் மூலிகை- மூளைக்கு

  • பால் உள்ள மூலிகை -உடல் வளத்துக்கு

  • காயாத மூலிகை- உஷ்ண சகிப்பிற்கு

  • தண்ணீரில் தளமுள்ள மூலிகை- குளிர்ச்சிக்கு

  • தொட்டால் வாடும் மூலிகை வசியத்துக்கு

  • கொம்பு பஸ்பம் -மூளை, இருதயத்துக்கு

  • பாறையில் தழைக்கும் மூலிகை- ஆயுள் நீடிப்பதற்கு

  • காரம் உள்ள மூலிகை -இருதய பலத்துக்கு

  • தீப்பற்றும் மூலிகை- உஷ்ணம் உண்டாக்குவதற்கு

  • கசக்கும் மூலிகை -விஷத்திற்கும், சுரத்திற்கும்

  • தீப்பற்றும் மூலிகை- ரத்த கொதிப்புக்கு

  • சோம்பு தைலம் தலையில் தடவ பேன் ஈறு சாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com