மருத்துவ குணங்களுக்காகவே தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிரிடப்படும் கிழங்கு வகை தான் தண்ணீர் விட்டான் கிழங்கு. இதனை உலர்த்தி தூளாக்கி உண்ணலாம். இனிப்பு சுவை, குளிர்ச்சியான தன்மை ஆகியவை இதன் தனிப் பண்புகள். பெரும்பாலும் இந்த கிழங்கு பொடிகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.
தண்ணீர்விட்டான் கிழங்கிற்கு, சதாவேரி, சதாவரி, நாராயணி, உதகமூலம், சீக்குவை, பறணை, பீருதந்தி ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இதன் ஊசி போன்ற இலைகளும் கிளைகளும் வரிவரியாக மேலேறுவதால் 'வரிவரி கிழங்கு' எனும் பெயரும் உண்டு.
தண்ணீர் விட்டான் கிழங்கில் உள்ள அளவில்லா மருத்துவ குணங்கள் குறித்து இங்கு காணலாம்.
தண்ணீர் விட்டான் கிழங்கு பொட்டாசியம் சத்தை அதிகம் கொண்டுள்ளது. இதயம், எலும்புகள், சிறுநீரகம், நரம்புகள் ஆகியவற்றின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி – தலா 50கிராம் எடுத்துப் பொடி செய்து, இரண்டு வேளை இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டால் அனைத்துவிதமான காய்ச்சல்களும் குணமாகும்.
இரத்த அழுத்தத்தைக் குறைக்க தண்ணீர் விட்டான் கிழங்கு உதவுகிறது.
எலும்பு, மார்பகம், பெருங்குடல், குரல்வளை, நுரையீரல் ஆகிய பகுதிகளில் ஏற்படும் புற்றுநோயை எதிர்த்துப் போராட தண்ணீர்விட்டான் கிழங்கு உதவுகிறது.
வயிறு, குடல் ஆகிய உள்ளுறுப்புகளில் ஏற்படும் புண்களை குணப்படுத்தும் தன்மை இந்தக் கிழங்கிற்கு உண்டு.
தண்ணீர் விட்டான் கிழங்கில் காணப்படும் அமினோ அமிலம் இயற்கை டையூரிடிக் ஆக இயங்கி, சிறுநீர் கழிப்பதை தூண்டுகிறது. இதனால் நமது உடலில் சேரும் அதிகப்படியான உப்பை வெளியேற்றுகிறது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு எதிராகப் போராட இது உதவுகிறது.
தண்ணீர்விட்டான் கிழங்கில் அதிகமான அளவில் நார்ச்சத்து காணப்படுவதால், மலச்சிக்கலுக்கு இது அருமருந்து. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
தண்ணீர் விட்டான் கிழங்கை தூளாக்கி பாலில் கலந்து குடிக்கும் போது உடலில் உள்ள உஷ்ணம் தணியும். கண் எரிச்சல் நீங்கும்.
தாய்ப்பால் நன்றாக சுரக்க வேண்டுமென்றால், இந்த மூலிகையைதான் முன்னோர்கள் தருவார்களாம். அதேபோல, மாதவிடாய் நேரங்களில் அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுப்படுத்த, கை கொடுப்பதும் இந்த கிழங்குதான்.
கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு ரத்தவிருத்திக்கு இந்த மருந்துதான் தரப்படுகிறது. கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியையும் இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு ஊக்குவிக்கிறதாம்.
பருவமடைந்த பெண்கள் சிலர் ரத்தசோகையுடன், உடல் மெலிந்து காணப்படுவார்கள். மார்பக வளர்ச்சியில்லாமல் ஆரோக்கிய குறைபாடு கொண்டவர்களாகவும் காணப்படுவார்கள். இவர்களுக்கு தண்ணீர்விட்டான் கிழங்கு சேர்ந்த மருந்துகள் கைகொடுத்து உதவுகின்றன.
தண்ணீர்விட்டான் கிழங்கு பால் சேர்த்து அரைத்துக் காயவைத்து பொடி செய்து, தினமும் இரு வேளை சாப்பிட்டுவந்தால் நீரிழிவு குணமாகும்.