தோல் உரிதலைத் (சொரியாசிஸ்) தடுக்கும் 'சக்கரதாரா' சிகிச்சை - மாயமா? மந்திரமா?

Psoriasis
Psoriasis
Published on

சிலருக்கு கை கால்களில் இரத்த கசிவுடன் சருமம் உரிந்து பாளம் போன்று வெடிப்புகள் காணப்படும். இதற்கு சொரியாசிஸ் என்று பெயர். இது ஒரு வகையான பால்மோ பிளாண்டெர் வகையைச் சார்ந்தது.

இந்த வகை சொரியாசிஸ் நோய்க்கு அலோபதி மருத்துவரிடம் சென்றால் அவர் ஸ்டிராய்டு மருந்துகளும் களிம்புகளும் சிபாரிசு செய்வார்.

சொரியாசிஸ் என்பது மரபணு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்தது என்பதால், இதனை முழுமையாக "வேரோடு அழிப்பதை" விட, வாழ்நாள் முழுவதும் கட்டுப்பாட்டில் (Remission) வைத்திருப்பதே சாத்தியமான இலக்கு. தினமும் மருந்து எடுத்துக் கொண்டால் ஓரளவு பலன் கிடைக்கும்; நிரந்தர தீர்வு கிடையாது. மேலும், ஒரு நாள் மருந்து சாப்பிடாமல் விட்டாலும் களிம்பு தடவாமல் விட்டாலும் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும்.

இதற்கு ஆயுர்வேதத்தில் வெளிபூச்சிக்கு மருந்துகள் உள்ளன. இயற்கையான மூலிகைகளில் இருக்கும் ரசாயனங்கள் மட்டுமே செயல்பட வைக்கிறது. அலோபதி மருந்துகளுடனும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

பால்மோ பிளாண்டெர் சொரியாசிஸ் என்பது நோய் எதிர்ப்பு செல்கள் நம் உடல் செல்களை அழிக்கும் ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது இந்த பிரச்னை தீவிரமாக வெளிப்படும்.

நோய் எதிர்ப்பு செல்கள் உடலில் எந்த இடத்தில் உள்ள செல்களை அழிக்கிறதோ அங்கு அலர்ஜி ஏற்படும் எந்த வகை சொரியாசிஸ் ஆக இருந்தாலும் செரிமான மண்டலம், மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்ச்சியை மாற்றத்தை பாதிக்கும்.

அதனால், இந்த இரண்டையும் மேம்படுத்த வேண்டும். பசியின்மை, மலச்சிக்கல் போன்றவை இருந்தால் மிதமான முறையில் இவற்றை வெளியேற்ற வேண்டும். மலக்கழிவுகள் வெளியேறினால்தான் பசி அதிகரிக்கும்; உள்ளுறுப்புகளின் இயக்கம் சீராக இருக்கும். இதன் மூலம் வெடிப்புகள் குறைந்து தசைகள் சேர ஆரம்பிக்கும். இந்த சிகிச்சையின் பலனாக குளிர்காலத்தில் ஏற்படும் வெடிப்புகளும் குறைந்துவிடும்.

சக்கரதாரா (Chakra Dhara) அல்லது தக்ரதாரா (Takradhara) போன்ற சிகிச்சைகள் ஆயுர்வேதத்தில் மிகவும் பிரபலம். சக்கரதாரா சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது.

  • தக்ரதாரா: மூலிகைகள் கலந்த மோர் அல்லது கஷாயத்தை நெற்றியில் அல்லது பாதிக்கப்பட்ட இடத்தில் தாரையாக ஊற்றுவது. இது மன அழுத்தத்தைக் குறைத்து (Stress is a major trigger for Psoriasis) நரம்பு மண்டலத்தைச் சீராக்கும்.

  • பருத்தித் துணி கட்டு: இதனை 'லேபனம்' (Lepanam) செய்துவிட்டு துணியால் கட்டுவது மருந்தின் ஊடுருவலை (Absorption) அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
சொரியாசிஸ் நோயை எதிர்கொள்ளும் விதமும், தடுப்பு முறைகளும்!
Psoriasis

இந்த ஆயுர்வேத மருந்துகளை வெடிப்பு உள்ள இடங்களில் தடவி பருத்தித் துணியால் கட்ட வேண்டும் இதன் மூலம் பழைய சருமம் உரிந்து புதிய சருமம் வளர ஆரம்பிக்கும்.

ஆயுர்வேதத்தில் சக்கரதாரா சிகிச்சை மூலம் இந்த சொரியாசிஸ் நோயை குணப்படுத்தலாம். 40 நாட்கள் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஆனால் 'குணம்' என்பது நபரின் உடல்நிலை மற்றும் வாழ்வியலைப் பொறுத்தது.

சொரியாசிஸ் பிரச்னை உள்ளவர்கள் எண்ணெய் மசாலா பொருட்கள், வறுத்த பொறித்த உணவுகள் மற்றும் செரிமானம் ஆகாத உணவுகளை தவிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சொரியாசிஸ் எனும் சரும நோயை கையாளுவது எப்படி?
Psoriasis

செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருந்தால்தான் இந்த நோயை சீக்கிரம் குணப்படுத்த முடியும். அதோடு மலச்சிக்கல் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முடிந்தவரை புதிதாக சமைத்த உணவுகள் நார்ச்சத்து உணவுகள் சிறந்தது. ஆயுர்வேதத்தில் சக்கரதாரா சிகிச்சை என்பது பல்வேறு மூலிகைகள் மருந்துகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒருவித களிம்பு மற்றும் உள்ளே சாப்பிடும் கசாயம் ஆகும். சிறந்த ஆயுர்வேத மருத்துவரை நாடினால் இதற்கு தகுந்த சிகிச்சை அளித்து சொரியாசிஸ் நோயை குணப்படுத்த முடியும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com