நரம்பு செல்களை பாதுகாப்பது எப்படி? பார்க்கின்சன் அறிகுறிகளும் நவீன மருத்துவமும்!

பார்க்கின்சன் நோய் (Parkinson's Disease) மற்றும் அதற்கான நவீன சிகிச்சை முறையான DBS (Deep Brain Stimulation) பற்றி மிகத் தெளிவாக பார்க்கலாம் வாங்க.
Parkinson's Disease
Parkinson's DiseaseImage credit: AI Image
நடேஷ் கன்னா

என் பெயர் நடேஷ் கன்னா. எனது உண்மை பெயர் சிவராம சுப்ரமணியன். எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் களக்காடு. தற்போது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லிடைக்குறிச்சியில் வசித்து வருகிறேன். நான் கடந்த 57 ஆண்டுகளாக பத்திரிகைகளுக்கு எழுதி வருகிறேன். சிறுகதை கட்டுரைகள் கவிதைகள் துணுக்குகள் ஜோக்ஸ் என எழுதி உள்ளேன். நான் கல்கி, தீபம், மங்கையர் மலர், குமுதம், விகடன், சாவி இதயம் பேசுகிறது முத்தாரம், ராணி, தேவி, ஜூனியர் விகடன், நக்கீரன், துக்ளக், தினமலர், போன்ற அனைத்து பத்திரிகைகளுக்கும் எழுதியுள்ளேன். எனக்கு ஆரம்ப காலத்தில் எழுத தூண்டியது கல்கி வார இதழ். அதில் நான் எழுதிய முதல் துணுக்கு இடம் பெற்றது அன்றிலிருந்து இன்று வரை எழுதி வருகிறேன். நான் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. என்னை எழுத தூண்டிய கல்கிக்கு வாழ்த்துக்கள்.

Updated on

ஒவ்வொரு நரம்பு செல்களும் பாதிப்பு அடையும் போது வெவ்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக மூளை நரம்பு செல்கள் பாதிக்கப்பட்டால் பார்க்கின்சன் நோய் ஏற்படுகிறது. இதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்றால் ஆரோக்கியமாக இருந்த ஒருவருக்கு செயல் திறன் குறையும் போது கைகளில் நடுக்கம், கைகள் விரைப்பது, ருசி மாறுவது என பல வகைப்படும்.

சிலர் வாசனை நுகரும் தன்மையை இழந்து இருப்பார்கள். சிலர் தூக்கத்தில் வரும் கனவுகளை நிஜமாக நடப்பதாக நினைத்து கத்துவது, அடிப்பது, உதைப்பது போன்ற ரியாக்ட் செய்வார்கள்.

இவற்றை உடல் அசைவுகளை வைத்து கண்டுபிடிக்கலாம். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் எதிர்காலத்தில் இவர்களுக்கு பார்க்கின்சன் வரலாம் என எதிர்பார்க்கலாம்.

பார்க்கின்சன் நோயில் பலவகை உள்ளது. இது உறுதியாக இருந்தால் நான்கு வருடங்களில் தெரிந்து விடும்.

இதில் ஒரு வகை காரணம் தெரியாமல் வரும் பார்க்கின்சன்ஸ். இந்த நோய் ஏற்பட்டால் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மாத்திரைகள் பலன் தரும். அதன் பின் மாத்திரைகளின் வீரியம் குறையவோ அல்லது கூடவோ செய்யும். எட்டு மணி நேரம் வேலை செய்யக்கூடிய மருந்து இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே பலன் தரும்.

இந்த நோய் உள்ளவர்கள் நடக்க சிரமப்படுவார்கள். எந்த வேலையும் செய்ய முடியாமல் தடுமாறுவார்கள்.

சிலர் இயல்பாக இருந்தாலும் கை, கால்கள், கழுத்து இவை அசைந்து கொண்டே இருக்கும். இவர்களுக்கு டீப் பிரைன் ஸ்டிமுலேஷன் மருந்துகள் பலன் தராது என்ற நிலையில் மூளை நரம்புகளை மின் அதிர்வுகள் உதவியுடன் இயல்பாக செயல்பட வைக்கும் முறைதான் டீப் பிரைன் ஸ்டூமுலேஷன்.

இதையும் படியுங்கள்:
தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பது நல்லதா? எவ்வளவு நேரம் கொதிக்க வைக்கலாம்?
Parkinson's Disease

மூளையைச் சுற்றியுள்ள கனமான மண்டை ஓட்டில் சிறிய துளை இட்டு எம்ஆர்ஐ ஸ்கேன் உதவியுடன் சிதைந்த நரம்பு செல்கள் உள்ள பகுதியை கண்டறிந்து அவற்றை தூண்ட மின்முனை சிப் பொருத்தப்படும். இதை வெளியில் இருந்து பேட்டரி வாயிலாக இயக்க வேண்டும். இதில் இருந்து சீராக மின் அளவுகள் மூளையின் நரம்பு செல்களை தூண்டும்போது மின்சாரத்தை சீராக தரும் ஸ்டெபிலைசர் மாதிரி மூளை செல்களால் இயல்பாக செயல்பட முடியும். இந்த நோயை குணப்படுத்த கருவி ஏதும் கிடையாது. நோயினால் ஏற்படும் அறிகுறிகளை குறைத்து சீராக செயல்பட வைக்கும் முறையாகும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com