தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பது நல்லதா? எவ்வளவு நேரம் கொதிக்க வைக்கலாம்?

தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பது நல்லதா? எவ்வளவு நேரம் கொதிக்க வைத்து குடிக்கலாம்? என்பது குறிந்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
boil water
boil water
Published on

உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனால் நமக்கு வரும் பல வியாதிகள் தடுக்கப்படுகின்றன. அதுவே அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பது இன்னும் நல்லது என்றும் கூறுகின்றனர். தினமும் கொதிக்க வைத்த தண்ணீரை அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஏனெனில் நீரினால் பரவும் நோய்களை ஏற்படுத்தக்கூடிய தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகள், புரோட்டோசோவா உள்ளிட்ட நோய்க்கிருமிகளை அழிக்க கொதிக்க வைப்பது ஒரு சிறந்த வழியாகும். தண்ணீரை அதிகபட்சமாக 100 டிகிரி செல்சியஸ் கொதி நிலைக்கு சூடாக்கும்போது அதில் உள்ள பெரும்பாலான நுண்ணுயிரிகள் அழிந்துவிடுவதால் மனிதர்களுக்கு நீரினால் பரவும் நோய் அபாயம் கணிசமாக குறையும்.

ஆனால் மருத்துவர்கள் இந்த நுண்ணுயிர் நோய்க்கிருமிகளை கொல்வதற்கு நீரை ஒரு நிமிடம் கொதிக்க வைத்தாலே போதுமானது என்று கூறுகின்றனர். கொதிக்க வைத்த நீரை அப்படியே ஆற வைத்து சூடு குறைந்ததும் குடிக்கலாம் அல்லது வெதுவெதுப்பாக இருக்கும்போதும் குடிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமா? ஆபத்தா?
boil water

அதேபோல் ஒருமுறை கொதிக்க வைத்த நீரை மீண்டும் மீண்டும் கொதிக்க வைப்பதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது தண்ணீரில் உள்ள சில வேதிப்பொருட்களின் அடர்த்தியை அதிகரிக்கும் மற்றும் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். சில சமயங்களில்,

சிலர் கொதிக்க வைத்த நீரில் குளிர்ந்த நீரை கலந்து குடிப்பார்கள். இவ்வாறு செய்வது மிகவும் தவறானது. ஏனெனில் கொதிக்க வைத்த நீரில் உள்ள நுண்ணுயிரிகள் அழிந்திருக்கும், ஆனால் குளிர்ந்த நீரில் நுண்ணுயிரிகள் அழியாமல் இருக்கும் என்பதால் அவ்வாறு கலந்த நீரை குடிக்கும் போது ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம்.

மழைக்காலங்களில், தண்ணீரின் தரம் குறைவாக இருக்கும்போது, நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி குடிப்பது மிகவும் அவசியமாகிறது. அதுவும் மழைக்காலங்களில் தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பது நோய் தொற்றில் இருந்து நம்பை பாதுகாக்கும்.

கொதிக்க வைத்த நீர் பருகுவதால் குடல் சுத்தமாகும். ரத்த ஓட்டம் சீராக இயங்கும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இத்துடன் சிறுநீரகக் குழாய் நோய்கள், வயிற்றுப் பொருமல், இருமல், இதயப் படபடப்பு, சளி போன்றவை விலகும்.

சிலர் ஆர்.ஓ. போன்ற சுத்திகரிக்கப்பட்ட நீரையும் கொதிக்க வைத்து அருந்துகின்றனர். ஆனால் ஆர்.ஓ. போன்ற சுத்திகரிக்கப்பட்ட நீரை கொதிக்க வைத்துத்தான் குடிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஏனெனில் ஆர்.ஓ. அமைப்புகள் பாக்டீரியா, வைரஸ்கள், புரோட்டோசோவான்கள் உள்பட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்கிருமிகளை அகற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். மேலும் இவை தண்ணீரை பலகட்ட வடிகட்டுதலுக்கு பிறகு சுத்திகரித்து கொடுப்பதால் சூடுபடுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் நீங்கள் ஆர்.ஓ. சுத்திகரிப்பை முறையாக பராமரிக்கப்படாவிட்டாலும், அது சரியாக வேலை செய்யாவிட்டாலும் வடிகட்டுதலுக்கு பிறகு நீர் மாசுபடும் அபாயம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனினும் ஆர்.ஓ. பராமரிப்பு, உங்கள் வீட்டில் உள்ள நீரின் தரம், தனிப்பட்ட சுகாதாரம், மழைக்க்காலத்தில் ஏற்படும் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடரின்போது நீரின் தரத்தில் அதிகளவு மாறுபாடு ஏற்படும் என்பதால் இதுபோன்ற நேரங்களை கவனத்தில் கொண்டு ஆர்.ஓ. நீரை கொதிக்கவைத்து குடிப்பது பற்றி நீங்கள் பரிசீலிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லதா? 'நீர் தெரபி' சொல்வது என்ன?
boil water

அதேசமயம் இந்த காலகட்டங்களில் நீர் தரமாக தான் உள்ளது என்பதை நீங்கள் உறுதி செய்துவிட்டால் ஆர்.ஓ. நீரை கொதிக்கவைத்து குடிக்க தேவையில்லை. ஏற்கனவே ஆர்.ஓ. தண்ணீரில் பலகட்ட வடிகட்டுதலுக்கு பிறகு தாதுக்கள் குறைவாகவே இருக்கும் என்பதால் அதை மேலும் கொதிக்க வைக்கும் போது அதில் உள்ள கனிம உள்ளடக்கத்தை மேலும் குறைக்கக்கூடும் என்பதால் தவிர்த்து விடுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com