தூக்கமின்மை முதல் இரத்த அழுத்தம் வரை: 'ஃபேஷன் பழம்' தரும் நன்மைகள்!

விசித்திரமான தோற்றமும் வியப்பூட்டும் மருத்துவக் குணங்களும் கொண்ட ஃபேஷன் பழத்தின் நன்மைகளையும், அதை வைத்து சுவையாக செய்யக்கூடிய ஆரோக்கிய ரெசிபிக்களையும் இந்தத் தொகுப்பில் முழுமையாக அறியலாம்!
Passion Fruit Recipes
Passion Fruit BenefitsAI Image
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on

இயற்கையின் விசித்திரமான வகையில், உலகளவில் பலராலும் விரும்பப்படும் ஒரு தனித்துவமான வெப்பமண்டலப் பழம்தான் 'ஃபேஷன் பழம்' (Passion Fruit) ஆகும். தமிழில் ‘கொடித்தோடை’ என்றும் பரவலாக அழைக்கப்படும் இப்பழம், தனது புளிப்பும் இனிப்பும் கலந்த அசத்தலான சுவைக்காகவும், மனதை மயக்கும் நறுமணத்திற்காகவும் அறியப்படுகிறது.

இதனுள் ஒளிந்திருக்கும் மருத்துவக் குணங்களும் ஊட்டச்சத்துக்களும் அளப்பரியவை. உடலுக்குப் புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் இந்த அதிசயப் பழத்தை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

1. தோற்றம் மற்றும் வகைகள்:

இந்த பழம் பார்ப்பதற்கு உருண்டை வடிவில் இருக்கும். இதில் இரண்டு வகைகள் உள்ளன:

  • மஞ்சள் நிற ஃபேஷன் பழம் அளவில் சற்று பெரியதாகவும், அதிக புளிப்புச் சுவையுடனும் இருக்கும்.

  • ஊதா நிற ஃபேஷன் பழம் அளவில் சிறியதாகவும், நல்ல வாசனையுடனும், இனிப்புச்சுவை அதிகமாகவும் இருக்கும்.

2. ஊட்டச்சத்துக்கள்:

ஃபேஷன் பழம் ஒரு ‘சூப்பர் ஃபுட்’ என்று சொல்லும் அளவுக்கு ஊட்டச் சத்துக்கள் நிறைந்தது. வைட்டமின் C மற்றும் A நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், கண் பார்வை மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. அதிக நார்சத்து செரிமானத்தை சீராக்க உதவுகிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை பலப்படுத்துகிறது.

3. எப்படி சாப்பிட வேண்டும்?

பழத்தை பாதியாக வெட்டி, உள்ளே இருக்கும் கூழ் மற்றும் கருப்பு நிற விதைகளை ஸ்பூன் மூலம் எடுத்து அப்படியே சாப்பிடலாம். இதன் விதைகளும் சாப்பிடக்கூடியவைதான், அவை மொறுமொறுப்பாக இருக்கும்.

இதன் சாற்றை பிழிந்து, சர்க்கரை அல்லது தேன் கலந்து குளிர்ந்த பானமாக அருந்தலாம். ஐஸ்கிரீம், யோகர்ட் மற்றும் கேக் போன்றவற்றில் சுவைக்காக இதன் கூழ் சேர்க்கப்படுகிறது.

4. ஆரோக்கிய நன்மைகள்:

இதில் பொட்டாசியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் சில சத்துக்கள் மன அழுத்தத்தைக் குறைத்து, இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகின்றன. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் இது ஒரு சிறந்த பழம்.

ஃபேஷன் பழத்தை வைத்து சுவையாக செய்யக்கூடிய ரெசிபிக்கள்:

1. ஃபேஷன் ஃப்ரூட் மொஹிட்டோ

செய்முறை: ஒரு உயரமான கிளாஸில் 10 புதினா இலைகள், பாதி எலுமிச்சையை சிறு துண்டுகளாக வெட்டி போட்டு மற்றும் 2 தேக்கரண்டி தேன் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு ஸ்பூன் அல்லது மத்தால் அவற்றை லேசாக இடிக்கவும். அப்போதுதான் புதினா மற்றும் எலுமிச்சையின் சாறு நன்றாக இறங்கும். இப்போது, 2 ஃபேஷன் பழத்தின் கூழ் மற்றும் விதைகளை அந்த கிளாஸில் ஊற்றவும். தேவையான அளவு ஐஸ் கட்டிகளைச் சேர்க்கவும். கடைசியாக, கிளாஸ் நிறையும் வரை குளிர்ந்த நீரை ஊற்றி, ஒரு ஸ்பூன் வைத்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

இதையும் படியுங்கள்:
தமிழக அரசின் 'இதழ்' தேநீரில் ஒளிந்திருக்கும் மாபெரும் ரகசியம்!
Passion Fruit Recipes

2. ஃபேஷன் ஃப்ரூட் தயிர் பச்சடி

செய்முறை: ஒரு கிண்ணத்தில் ஒரு கப் கெட்டித் தயிர் மற்றும் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலந்து கொள்ளவும். பின்னர் ஒரு கண்ணாடி கிளாஸை எடுத்துக் கொண்டு, முதலில் 2 ஸ்பூன் தயிர் கலவையைப் பரப்பவும். அதற்கு மேல் 1 ஸ்பூன் ஃபேஷன் பழக்கூழ் மற்றும் 1 ஸ்பூன் ஓட்ஸ் சேர்க்கவும். இதேபோல் அடுத்தடுத்த அடுக்குகளாக தயிர், பழக்கூழ், ஓட்ஸ் மாற்றி மாற்றி மூன்று முறை வைக்கவும். கடைசியாக, மேலே நறுக்கிய பாதாம், முந்திரி மற்றும் மீதமுள்ள பழக்கூழை ஊற்றி அலங்கரிக்கவும். இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது 15 நிமிடம் பிரிட்ஜில் வைத்து ஜில்லென்று சாப்பிடலாம்.

(இதற்கு 2 ஃபேஷன் பழத்தின் கூழும், 3 ஸ்பூன் ஓட்ஸும் தேவைப்படும்).

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற பழமொழிக்கு ஏற்ப பல்வேறு மருத்துவ நன்மைகள் கொண்ட இந்த ஃபேஷன் பழத்தை நமது அன்றாட உணவுப் பட்டியலில் சேர்த்து, நோய்களற்ற ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்.

logo
Kalki Online
kalkionline.com