கோடைக்கு ஏற்ற 'குளுகுளு' பழைய சோறு... அத இப்படி சாப்பிடணும் பாஸ்!

கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையில் பழைய சாதத்தை தயாரித்து சாப்பிட்டால் கோடைக்கு நல்ல குளிர்ச்சி கிடைப்பதோடு குடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது உறுதி.
பழைய சோறு
பழைய சோறுhttps://news.lankasri.com
Published on

கோடை காலம் வந்துவிட்டால் அனைவருக்கும் பழையது சாப்பிட ஆசை வரும். பழைய சாதம் செய்வதற்கு அனைத்து வகை அரிசிகளையும் பயன்படுத்தலாம் என்றாலும், ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ரீதியாக பார்க்கும் போது கைக்குத்தல் அரிசி (Hand pounded) அல்லது சிவப்பு அரிசி (Red rice) வகைகளே மிகச் சிறந்தவை. அது ஏன் சிறந்தது? பழைய சாதத்தை எப்படி சாப்பிட வேண்டும் ? என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

ஊட்டச்சத்துக்களின் இருப்பிடம்:

தவிடு நீக்கப்படாத கைக்குத்தல் அல்லது சிவப்பரிசியில் B'-வைட்டமின்கள் (B -Vitamins) இரும்புச்சத்து மற்றும் மக்னீசியம் அதிக அளவில் உள்ளன. சாதத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்கும் போது நொதித்தல் செயல்முறையால் இந்தச் சத்துக்கள் பல மடங்கு பெருகுகின்றன.

எளிதான செரிமானம்:

பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியைவிட இதில் நார்ச்சத்து அதிகம். நொதித்தலுக்குப் பிறகு உருவாகும் 'புரோபயாட்டிக்' (Probiotics) எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் இந்த நார்ச்சத்துடன் இணைந்து குடல் ஆரோக்கியத்தை (Gut health) மேம்படுத்துகின்றன.

இதையும் படியுங்கள்:
Fried Rice Syndrome: பழைய சாதம் உயிருக்கே ஆபத்தா?
பழைய சோறு

ரத்த சர்க்கரை கட்டுப்பாடு:

வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும்போது சிவப்பு அரிசி அல்லது மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய அரிசி வகைகளின் கிளைசெமிக் குறியீடு (Glycemic Index) குறைவு. எனவே இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்தாது.

பாரம்பரிய அரிசி வகைகளின் சிறப்புகள் !

அரிசி வகை: மாப்பிள்ளை சம்பாவின் பழைய சாதத்தில் சிறப்பு என்னவென்றால் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். உடலுக்கு அதிக ஆற்றலைத் தரும்.

பூங்கார் அரிசி: பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையை சீராக்க உதவும்.

கருப்பு கவுனி: இதில் ஆந்தோசயனின் (Anthocyanins) அதிகம் உள்ளது. இது புற்றுநோய் எதிர்ப்பு திறன் கொண்டதாக உள்ளது.

பழைய சாதம் தயாரிக்கும் போது கவனிக்க வேண்டியவை:

வடி நீர்: சாதம் வடித்த கஞ்சியில் தண்ணீர் கலந்து வைத்து விட வேண்டும். அதை சாதத்தில் ஊற்றி மூடி வைத்து விட்டால் நல்ல நீராகாரம் கிடைக்கும்.

பதம்: சாதம் குழையாமல் உதிரி உதிரியாக இருந்தால் தண்ணீர் ஊற்றி வைக்கும் போது சுவை மாறாமல் இருக்கும். அதற்கு சரியான பதம் தேவை.

பாத்திரம்: மண்பாண்டத்தில் (Clay pot) பழைய சாதம் வைப்பது மிகவும் சிறந்தது. இது குளிர்ச்சியைத் தருவதோடு நொதித்தல் முறையை சீராக வைக்கும்.

சேர்க்கை: சியா விதைகளை ஊற வைத்து நீராகாரத்துடன் சேர்த்து குடிப்பது கோடை வெப்பத்தை தணிக்கக் கூடுதல் பலன் தரும்.

குறிப்பாக பழைய சாதத்துடன் சிறிது சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சாப்பிடுவது சுவையை தருவதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
பழைய சோறு குறித்த அறிவியல் பூர்வ ரகசியம் வெளியானது!
பழைய சோறு

இந்த முறையில் பழைய சாதத்தை தயாரித்து சாப்பிட்டால் கோடைக்கு நல்ல குளிர்ச்சி கிடைப்பதோடு குடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது உறுதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com