
நாம் அதிகம் சாப்பிடாத பழங்களும் பல ஆரோக்கியமான மகத்துவங்களை தங்களுக்குள் புதைத்து வைத்திருக்கின்றன. அதில் பேரிக்காயும் ஒன்று. இது காய் என்ற பெயரில் இருக்கும் பழம். மழைக்காலத்தில் மட்டுமே சந்தைகளில் கிடைக்கும் இந்த பழம், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம் எனச் சொல்லப்படுகிறது. மழைக்காலங்களில் உடலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது ஒரு சவாலாக இருக்கிறது. இந்நிலையில், பேரிக்காய் அந்த சவாலை சமாளிக்க உதவும் என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
பேரிக்காய் ஆப்பிள் வகையைச் சார்ந்தது தான். எனினும் ஆப்பிளில் இல்லாத வைட்டமின் ஏ இப்பழத்தில் உள்ளது. எளிதில் கரையாத 'பாலிசாச்ரைடு' மூலக்கூறுகள் இதில் உள்ளது. இது குடலில் சேரும் புற்றுநோய் நச்சுகளை அகற்றவல்லது.
தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வர சிறுநீர் கல்லடைப்பு நீங்கும், ரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து கல்லாக மாறுகின்றன. இவற்றை பேரிக்காய் உடைத்து வெளியேற்றுகிறது. பேரிக்காயில் சோடியம் குறைவு. அது சிறுநீரக நோய்களைத் தடுக்கும். அதுவும் ஏற்கனவே சிறநீரக நோய் இருப்பவர்கள் பேரிக்காயை உட்கொள்ளும் போது அது டயாலிசிஸ் செய்ய வேண்டியதைத் தடுப்பதோடு விரைவில் சிறுநீரக நோயில் இருந்து மீள உதவி புரியும்.
ஏழைகளின் ஆப்பிள் என்று கூறப்படும் பேரிக்காயை இளந்தாய்மார்கள் காலையிலும், மாலையிலும் ஒன்று சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும், தாயின் வயிற்றில் வளரும் கரு நன்கு வளரும்.
உண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப்போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் போக்கும் ஏற்படலாம் தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட வயிற்று போக்கு நிற்கும், வயிற்று புண் விரைவில் குணமாகும், வாய்ப்புண் குணமாகும். அதிகமான நார்ச்சத்துக்கள் அடங்கிய பேரிக்காயில் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்தினை இன்னும் மேம்படுத்தலாம். பேரிக்காயில் வைட்டமின் C, K, B6, நார்ச்சத்து, புரதம் , பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், தாமிரம், சோடியம்,ஃபிளாவனாய்டுகள், கரோட்டினாய்டுகள் உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
ஒரு பேரிக்காயில் 6 கிராம் நார்ச்சத்து இருப்பதாகவும், ஒரு பெண்ணுக்கு தேவைப்படும் சராசரி நார்ச்சத்து அளவில் 24 சதவீதம் ஒரு பேரிக்காய் சாப்பிடுவதன் மூலம் பூர்த்தியாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. பேரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது என்றும், ஆரோக்கியமான உடல் மற்றும் செரிமான அமைப்பும் சிறப்பாக செயல்படும் என்று கூறப்படுகின்றது.
உடல் எடையை குறைப்பதற்கு பேரிக்காயில் உள்ள கலோரிகள் பயன்படும் என்றும், பேரிக்காய் போன்ற குறைந்த கலோரிகள் கொண்ட உணவை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடை சீக்கிரம் குறையும் என்றும் கூறப்படுகிறது. மேலும், பேரிக்காய்கள் 84 சதவீதம் நீர் உள்ளதால், நீர்ச்சத்து உடலுக்கு தேவையான அளவு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
பேரிக்காய் இனிப்புச் சுவை கொண்டது, சர்க்கரை சாப்பிடும் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் பழம், அதைச் சாப்பிடுவது சர்க்கரைக்கான பசியைக் குறைக்கிறது. கொழுப்பைக் குறைப்பதோடு, அதன் நுகர்வு எடையையும் குறைக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் உள்ளது. பேரிக்காய் இயற்கையாகவே இனிப்பானது, இது இனிப்புகளை சாப்பிட்ட பிறகு அதன் மீதான ஏக்கத்தைக் குறைக்கிறது.
ஒரு நாளைக்கு ஒரு பேரிக்காய் சாப்பிட, இந்த நோய்கள் உடலை விட்டு மறைந்து போகும். செரிமானத்தை மேம்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும், இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு அபாயத்தை குறைக்கும், உடல் எடையை கட்டுப்படுத்த உதவும், செல்கள் சேதமடையும் அபாயத்திலிருந்து பாதுகாக்கும். இதில் காணப்படும் கரோட்டினாய்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள், உடலை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காக்கும் திறனைக் கொண்டுள்ளன.
பேரிக்காயில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுவும் இதில் உள்ள அந்தோசையனின்கள் மற்றும் சினாமிக் அமிலம் போன்றவை புற்றுநோயை எதிர்த்துப் போராடும். தினசரி உணவில் சேர்த்து வந்தால் அது வயிறு, நுரையீரல், சிறுநீர்ப்பை புற்றுநோய் போன்றவற்றை எதிர்த்து பாதுகாக்கும்.கூடுதலாக இதில் உள்ள ப்ளேவோனாய்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை எதிர்த்து பாதுகாப்பளிக்கிறது.
பேரிக்காயை தினசரி காலை உணவாகவோ அல்லது மாலை நேர ஸ்நாக்ஸாகவோ எடுத்துக்கொள்ளலாம், ஆண்டு முழுவதும் கிடைக்காத இந்த பழம் மழைக்காலத்தில் மட்டுமே அதிகளவில் கிடைப்பதால், இந்த நேரத்தில் அவைகளை சாப்பிட எண்ணற்ற மருத்துவ பலன்களை பெறலாம். பொதுவாக பேரிக்காய் ஆவணி, புரட்டாசி மாதங்களில் மட்டுமே அதிக அளவில் கிடைக்கிறது.