
கத்தரிக்காய் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த சுவையான மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட சத்தான காய்கறியாகும். ஒரு சிலருக்கு கத்தரிக்காய் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அந்த வகையில் கத்தரிக்காய் சாப்பிட கூடாதவர்கள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
1. சிறுநீரக கற்கள் மற்றும் ஆக்சலேட்:
சிறுநீரக கற்கள் உருவாவதற்கு வழிவகுக்கும் பல தாவர உணவுகளில் இயற்கையாக காணப்படும் சேர்மமான ஆக்சலேட் கத்தரிக்காயில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. இதனால் சிறுநீரக கற்கள் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கத்தரிக்காய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் .
2. ஒவ்வாமை:
கத்தரிக்காய் நைட்ஷேட் (Nightshade) குடும்பத்தைச் சேர்ந்தது. கத்தரிக்காயில் ஹிஸ்டமைன் போன்ற சேர்மங்கள் உள்ளன. அவை சிலருக்கு ஒவ்வாமை அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். இந்த அறிகுறிகளில் தோல் அரிப்பு, சிவத்தல், அரிப்பு, படை நோய், உதடுகள் அல்லது நாக்கு வீக்கம், தொண்டை இறுக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை அடங்கும். சில தீவிரமான சந்தர்ப்பங்களில், அனாபிலாக்ஸிஸ் (Anaphylaxis) எனப்படும் உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமை எதிர்வினை கூட ஏற்படலாம்.
3. செரிமான பிரச்சனைகள் :
குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் சோலனைன் (Solanine) என்ற ஆல்கலாய்டு கத்தரிக்காயில் சிறிய அளவு உள்ளதால் செரிமான கோளாறுகள் உள்ளவர்கள் கத்தரிக்காயை குறைவாக உட்கொள்ள வேண்டும் அல்லது தவிர்த்து விட வேண்டும்.
4. மனச்சோர்வுக்கான மருந்துகளை உட்கொள்பவர்கள்:
மன அழுத்தத்திற்கான மருந்துகளை சாப்பிடுபவர்கள் கத்தரிக்காயை சாப்பிடும் போது மேலும் அதிகரிக்கும் என்பதால் மனச்சோர்வுக்கான மருந்துகளை உட்கொள்பவர்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
5. கர்ப்பிணி பெண்கள்:
கர்ப்ப காலத்தில் சில சிக்கல்களை ஏற்படுத்தும் பைட்டோஹார்மோன்கள் கத்தரிக்காயில் உள்ளதால் கர்ப்பிணி பெண்கள் கத்தரிக்காயை உட்கொள்வதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
6. இரத்த சோகை உள்ளவர்கள்:
கத்தரிக்காயில் உள்ள சில பொருட்கள் உடலில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கலாம். இரத்த சோகை உள்ளவர்கள் கத்தரிக்காயை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
7. கண் பிரச்சனைகள் உள்ளவர்கள்:
நைட்ஷேட் காய்கறிகள் உட்கொள்பவர்களுக்கு குறிப்பாக மாகுலர் டிஜெனரேஷன் (Macular Degeneration) போன்ற குறிப்பிட்ட கண் கோளாறுகள் உள்ளவர்களுக்கு கத்தரிக்காய் சாப்பிடுவதால், கண்களில் எரிச்சல் அல்லது வீக்கம் ஏற்படலாம். இது அனைவருக்கும் பொருந்தாது என்றாலும் மருத்துவரின் ஆலோசனைக் கேற்ப கத்தரிக்காயை இவர்கள் சாப்பிட வேண்டும்.
8. மூல நோய் உள்ளவர்கள்:
கத்தரிக்காய் மூல நோயின் அறிகுறிகளை மோசமாக்கி வீக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் இவர்கள் கத்தரிக்காய் உட்கொள்வதை குறைப்பது அல்லது தவிர்ப்பது . இதைத் தவிர தற்செயலாக கத்தரிக்காய் சாப்பிட்டு லேசான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தால், நிறைய தண்ணீர் குடித்து ஓய்வு எடுப்பது அல்லது கடுமையான விளைவுகள் நேரிட்டால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது.