அரைக்கீரைக்கு கிள்ளுக்கீரை என்ற பெயரும் உண்டு. மிகவும் எளிதாகக் கிடைக்கும் இந்தக் கீரையின் இலையை பொரித்தோ, கடைந்தோ சாதத்துடன் அப்படியே பிசைந்து உண்ணலாம். சத்து மிகுந்த தண்டுகள் கீரை வகையைச் சேர்ந்த அரை கீரைக்கு அபாரமான மருத்துவ குணங்கள் உண்டு.
குழந்தை பெற்ற பெண்களுக்கு உடலில் சீதளம் எனும் குளிர்ச்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தக் கீரையை எந்த விதத்தில் சமைத்து உண்பதாலும் இதனைத் தடுக்கலாம். இந்த கீரை வாதம், கபம் முதலியவற்றை விலக்குவதுடன் ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கும். சளியுடன் சேர்ந்த கப இருமலைப் போக்க உதவும்.
கீரையுடன் சாதாரணமாக சேர்க்கும் பருப்புடன் வெங்காயம், பூண்டு, பெருங்காயம், மிளகு மற்றும் சுக்கு போன்றவற்றை சேர்த்து கீரையை கடைந்து சாப்பிட குடைச்சல் தரும் வாயு கோளாறுகள், உடல் வலி, நடுக்கம் நீங்கும். குழந்தைகளுக்கு இக்கீரை உணவை ஊட்ட அவர்களின் உடல் நன்றாக வளரும். கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, ஜீரண சக்தி அதிகரிக்கும். உடலின் கெட்ட நீர் வெளியேறிவிடும். உடலானது பொலிவும், அழகும் சுறுசுறுப்பு பெறும்.
அரை கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் மிகுதியாக உள்ளது. இதனால் எலும்புகள் பலம் பெறுவதுடன், தலைமுடி அடர்ந்து கருகருவென்று வளரும். தலைமுடி மயிர் கால்களுக்கு பலம் சேர்க்க அரை கீரை விதையை நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி அவ்வப்போது தலைமுடியை மசாஜ் செய்ய தலை முடி வலுவாகும்.
அரைக்கீரையில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் மற்றும் டயட்டரி ஃபைபர் உள்ளது. இதில் வைட்டமின் கே உள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. அரை கீரை இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களையும் கொண்டுள்ளது.
அரைக்கீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது மலச்சிக்கலை போக்கவும், இரைப்பை குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவும். இது வீக்கம் மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
அரை கீரை இலைகளை பேஸ்ட் செய்து, முன்கூட்டிய நரை மற்றும் முடி உதிர்வை தடுக்கலாம். புதிய அரை கீரை இலைகளின் சாறு முடி அமைப்பை பராமரிக்கவும், பொலிவு சேர்க்கவும் உதவும். இது அரிக்கும் சரும அழற்சி மற்றும் முகப்பரு போன்ற சருமப் பிரச்னைகளுக்கு ஒரு துவையலாக பயன்படுத்தலாம்.
வாய் புண்கள், ஈறு வீக்கம் மற்றும் தொண்டை புண் போன்றவற்றை குணப்படுத்த அரை கீரையை மவுத்வாஷ் ஆக பயன்படுத்தலாம். இது கறிகள், பொரியல், சூப்களிலும் பயன்படுத்தலாம். இது பருப்பு, தேங்காய் மற்றும் பாரம்பரிய மசாலாப் பொருட்களுடன் நன்றாக இணைகிறது.
சளி தொந்தரவு மற்றும் நுரையீரல் சார்ந்த நோய் தொந்தரவுகளை தீர்க்கும் கீரை அரைக்கீரை. இதனை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வர உடல் பலம் பெருகி ஆண்மை குறைவு நீங்கும்.
வீட்டில் கொஞ்சம் இடம் இருந்தால் இதனை பயிரிட்டால் 45 நாட்களில் இருந்து பறித்து சமைக்கலாம். தளிர்த்து வரும் கீரையை 15 நாளுக்கு ஒரு முறை பறித்து பயன்படுத்தலாம்.