அறிகுறிகளை வைத்து அடையாளம் காணப்படும் உடல் பிரச்னைகள்!

Symptoms of physical problems
Symptoms of physical problems
Published on

ண்களோ, மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் உங்களுக்கு ஜலதோஷம் பிடிக்கப் போகிறது என்று அர்த்தம்.

உதடுகளில் அல்லது உடல் சருமத்தில் வெடிப்பு, பிளவு, சருமம் உரிதல் போன்றவை காணப்பட்டால் உடலில் நீர்ச்சத்து மற்றும் எண்ணெய்ப்பசை குறைந்து வருகிறது என்று பொருள்.

காதில் அதீத குடைச்சலோ, வலியோ வந்தால் காய்ச்சல் வரப்போகிறது என்று அர்த்தம். அடிக்கடி தலையை சொரிகிறீர்களா? அது உடலில் ஏற்படும் பொட்டாசியம் குறைபாட்டின் அறிகுறி என்கிறார்கள்.

முதுகுத் தண்டு அல்லது இடுப்புப் பகுதி தொடர்ந்து வலிக்குமானால் அந்த இரண்டு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் துவங்குகிறது என்பதன் அறிகுறியாகும்.

உங்களுக்கு அடிக்கடி வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உங்கள் கை விரல் நகங்கள் சுத்தமாக இல்லை என்று பொருள். முகத்தில் அரிப்போ, நமைச்சலோ அடிக்கடி ஏற்பட்டால் உங்கள் தலைமுடி சுத்தமில்லாமல் இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.

பாதங்களில் வெடிப்பு உண்டானால் உடலில் சூடும், உடல் அழுத்தமும் அதிகரித்து விட்டது என்று அர்த்தம்.

தோள்பட்டை, முதுகுத்தண்டு, குதிகால் இவற்றில் இறுக்கமோ, வலியோ ஏற்பட்டால் உடலில் வாயு அழுத்தம் கூடி விட்டது மற்றும் வாயு தேங்கி உள்ளது ஈன்று அர்த்தம். முழங்கால் மூட்டு, கை கால்களின் மணிக்கட்டு வலி எடுத்தால் உடல் எடை அதிகரித்து விட்டது அதை குறைக்க வேண்டும் என்று பொருளாகும்.

கைகளில் மடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் கணையத்தில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கிறது என்று அர்த்தம். அடிக்கடி அதிக பசி அதிகரிக்கிறது என்றாலும் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கிறது மற்றும் நீரிழிவு அபாயத்தை தொடுகிறீர்கள் என்று அர்த்தம்.

கைவிரல் நகங்களுக்கு மேல், மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் இதயத்தில் பிரச்னைகள் துவங்குகிறது என்று அர்த்தம்.

இதையும் படியுங்கள்:
மலச்சிக்கலுக்கு மருந்தாகும் 5 வகை உணவுகள்!
Symptoms of physical problems

ஆரோக்கியமான நபர்களுக்கு இதயத்துடிப்பு அவர்கள் ஓய்வில் இருக்கும்போது நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை இருக்கும். ஆனால், ஒருவர் ஓய்வில் இருக்கும்போது அவருக்கு ஒரு நிமிடத்திற்கு இதயத் துடிப்பு 80க்கு மேல் இருந்தால் அடுத்து வரும் 20 வருடங்களுக்குள் அவர் மிகப்பெரிய இதயநோய்யை சந்திப்பார் என்கிறார்கள்.

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் சிலருக்கு அவர்களுக்கு விலா எலும்பு வலியாகவும், முதுகு வலியாகவும் கூட தெரியும் என்கிறார்கள்.

குறிப்பிட்ட வயதிற்கு மேல் உங்கள் முழங்காலில் அடிக்கடி எலும்பு உடைவது போல சப்தம் வருகிறதா? உங்களுக்கு பின்னாளில் முடக்கு வாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.

உங்களுக்கு தீராத மலச்சிக்கல் பிரச்னை இருந்தால், விரைவில் சிறுநீரகக் கோளாறுகள் வரப்போகிறது என்று அர்த்தம்.

வேலை போய்விடுமோ என்ற மன உளைச்சல் மற்றும் வேலை சம்பந்தப்பட்ட மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பவர்களுக்கு விரைவில் ஆஸ்துமா வரும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com