முதுகுத் தண்டுவட பிரச்னைகளைத் தீர்க்கும் பிரண்டை!

மே, 17 முதுகுத்தண்டு காய விழிப்புணர்வு தினம்
Pirandai
பிரண்டைhttps://mkpetsandgardening.in

யற்கை நமக்கு எத்தனையோ மூலிகைகளைக் கொடுத்துள்ளன. அதில் எலும்புகளை வஜ்ரம் போல பாதுகாக்க உதவும் மூலிகைதான் பிரண்டை. அற்புதமான மூலிகைகளில் ஒன்று பிரண்டை. கொடி போல் வளரும் இதில், இலைகள் இருக்கும். நாம் இதன் தண்டுகளை சாப்பிடுவோம். இதில் நிறைய வகைகள் உள்ளன. உருட்டு பிரண்டை, பிரண்டை, சிவப்பு பிரண்டை, முப்பிரண்டை, தட்டை பிரண்டை, கலிபிரண்டை, தீம் பிரண்டை, ஓலை பிரண்டை ஆகியவை இதன் வகைகளாகும். இந்த பிரண்டை சாறை எடுத்து காயம் உள்ள இடம், வலி உள்ள இடத்தில் போட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

எலும்பு தேய்மானம், நரம்பு பலவீனம் போன்றவற்றால் வரும் எலும்பு வலிகளுக்கும், தண்டுவட வலி பிரச்னைகளுக்கும் அருமையான மருந்து உருட்டு பிரண்டை. இதன் இலைச் சாற்றை 30 மி.கி. காலை, இரவு உணவுக்கு முன் சாப்பிட்டு வர, அனைத்துப் எலும்புப் பிரச்னைகளும் சரியாகும். வாரத்திற்கு இரண்டு முறை உருட்டு பிரண்டை 50 கிராம் எடுத்து, தேங்காய் துருவல் மற்றும் 10 பூண்டு பல் சேர்த்து அரைத்த துவையல் சாப்பிட்டு வர எலும்பு தேய்மானம் மற்றும் பெண்களின் முதுகு தண்டுவட வலி சரியாகும். கழுத்தை அசைத்தால் வலி ஏற்படும் நபர்களுக்கு பிரண்டை ஒரு வரப்பிரசாதம்.

இரத்த ஓட்டத்தை சீராக்கும்: வாரம் ஒருமுறை பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டு வர எலும்பில் உள்ள கால்சியம் அதிகரிக்கும். எலும்பு எளிதில் தேய்மானம் அடையாமல் பாதுகாக்கும். பிரண்டையிலுள்ள மிகையான கால்சியம் சத்து எலும்பு மஜ்ஜையில் திரவம் அதிகமாக சுரக்க வைத்து மூட்டு வலிகளைக் குறைக்கிறது. பிரண்டை சாற்றில் வைரம் கூட பொடியாகும் என்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை உணவில் சேர்த்து வர, 20 நாட்களில் மூட்டு வலியே காணாமல் போய் விடும்.

எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாய்வுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகு வலி, கழுத்து வலியால் அவதிப்படுவார்கள். மேலும், இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்த பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும்.

இந்த பிரண்டையில் பல்வேறு உணவுகளை செய்து சாப்பிடலாம். பிரண்டை உடலைத் தேற்றும். பசியை தூண்டிவிடும். பிரண்டையை துவையலாக சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் இருக்கும் இடமே தெரியாது. மேலும், குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வயிற்றில் இருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும். உடலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். ஞாபக சக்தி பெருகும். மூளை நரம்புகள் பலப்படும். பிரண்டை துவையலை குழந்தைகள் சாப்பிட்டால் எலும்புகள் உறுதியாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகளும் விரைந்து கூடிவிடும். பிரண்டை சாறு 6 டீஸ்பூன் எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரத்திற்கு சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் சீராகும்.

உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்போது இந்த பிரண்டையை சாப்பிடலாம். பிரண்டையை உடல் எடை குறைக்கப் பயன்படுத்துகிறார்கள். உடல் எடையை மட்டும் குறைக்காமல், இது கெட்ட கொழுப்பையும் குறைக்கும். மேலும், மூட்டு வலியை குணமாக்கும். வாய் புண்களை ஆற்றும் குணம் பிரண்டைக்கு உள்ளது.

இதையும் படியுங்கள்:
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் அறிவோம்!
Pirandai

பிரண்டையுடன் சிறிது மிளகாய் சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவுக்கு தினந்தோறும் இரு வேளை சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும். பிரண்டை தண்டுகளை சிறிய அளவில் நறுக்கி ரசத்தில் சேர்த்து வந்தால் எலும்புகள் பலம் பெறும். மேலும், நரம்புத் தளர்ச்சியை போக்கும். கப நோய்கள் நீங்கும்.

பிரண்டையை பச்சையாக நன்றாக அம்மியில் வைத்து மை போல் அரைத்து அடிபட்ட வீக்கத்தில் வைத்து கட்டினால் வீக்கம், இரத்தக்கட்டு குணமாகும். எப்படிப்பட்ட காயமாக இருந்தாலும் சரி, அவற்றின் மீது பிரண்டை பற்று போட்டு ஒரு துணியை கட்டி வர காயம் மாயமாகிவிடும். வாய்வு பிடிப்பு, கை மற்றும் கால் குடைச்சல் இருப்பவர்களுக்கு பிரண்டை சிறந்த மருந்தாக உள்ளது.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் மற்றும் மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் அதிக வலியை போக்கி நல்ல நிவாரணம் அளிக்கிறது. இளம் பிரண்டையை குழம்பு, துவையல், ரசம், வத்தல் என ஏதேனும். ஒரு வகை சமையலில் பயன்படுத்தலாம். பிரண்டை பிஞ்சாக இருந்தால் அதை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். நல்லெண்ணெய்யை சற்று அதிகமாக, அதாவது பிரண்டை அந்த எண்ணெய்யில் மூழ்கும் அளவுக்கு ஊற்ற வேண்டும். பிறகு, பிரண்டையை அதில் சேர்த்து நன்றாக வதக்கி, எண்ணெய்யை மட்டும் வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணெய், மூட்டு வலிக்கு மிகவும் நல்லது. பித்தத்தை அதிகப்படுத்தும் குணம் பிரண்டைக்கு உண்டு. எனவே, பித்தம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள் பிரண்டையை தவிர்ப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com