'நா' காக்க மறக்காதீங்க ப்ளீஸ்!

அல்சைமர் நோய்...
அல்சைமர் நோய்...Image credit - onlymyhealth.com
Published on

ன்றைய காலகட்டத்தில், அநேகர் உடற்பயிற்சி, யோகா என பலவகை பயிற்சிகளை, உடம்பை ஃபிட்டாக வைக்க மேற்கொள்கின்றனர். ஆனால் நாக்கை மறந்து விடுகின்றனர். அதற்கு பயிற்சி கொடுப்பது கிடையாது.

வயதாகையில் பல வகையான நோய்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கின்றன. ஆனால், பலர் மிகவும் கவலைப்படுவது அல்சைமர் நோயைப் பற்றித்தான். தன்னையும்  கவனித்துக் கொள்ள முடியாமல், குடும்பத்தினருக்கும் மிகவும் சிரமத்தை ஏற்படுத்தக்கூடியது. 

நெருங்கிய நண்பர் வீடு சென்றிருக்கையில், அவர்களின் டாக்டர் ஃப்ரெண்ட் ஒருவர் (அமெரிக்காவில் மருத்துவர்)  வந்திருந்தார். இது பற்றி பேசுகையில் அவர் கூறியது,

அல்சைமர் நோயின் தாக்கத்தை குறைக்க,  நாக்கு பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். மேலும்,

 1.உடல் எடை

2.உயர் இரத்த அழுத்தம்

3.மூளையில் இரத்தம் உறைதல் 4.ஆஸ்துமா

5.தொலைநோக்கு பார்வை

6.காது சத்தம்

7.தொண்டை தொற்று

8.தோள்பட்டை / கழுத்து தொற்று

9.தூக்கமின்மை போன்றவைகளை குறைத்து மேம்படுத்த உதவும்.

நாக்கு  பயிற்சி செய்வது எவ்வாறு?

தினமும் காலையில் முகத்தை கழுவும்போது, கண்ணாடி முன் நின்று உங்கள் நாக்கை நீட்டி,  அதை வலதுபுறமாகவும் பின்னர் இடதுபுறமாகவும் 10 முறை நகர்த்தவும்.   தினமும் இவ்வாறு நாக்கிற்கு பயிற்சி கொடுத்தால், மூளைத் தக்கவைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். மனம் தெளிவாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். 

இதையும் படியுங்கள்:
எல்லா பிரச்னைகளையும் தீர்க்கும் வல்லமை நமக்கு உண்டு!
அல்சைமர் நோய்...

அல்சைமர் நோயைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் "நா" பயிற்சி உதவுகிறது. பெரிய மூளையுடன் நாக்குக்கு தொடர்பு இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி கண்டறிந்து உள்ளது.

நமக்கு வயதாகி, உடல் பலவீனமாகையில் முதலில் தோன்றும் அறிகுறி, நாக்கு விறைப்பாக மாறி, அடிக்கடி நம்மை நாமே கடித்துக் கொள்வதுதான்.

நாக்குக்கு அடிக்கடி பயிற்சி அளிப்பது, நமது மூளை சுருங்குவதைக் குறைத்து ஆரோக்கியமான உடலைப்பெற உதவும். வாரத்தில் 3 - 4 நாட்கள் இதை செய்யலாம்.

மற்ற பயிற்சிகளுடன், "நா" காத்து,  நாமும் ஆரோக்கியமாக வாழலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com