தீபாவளிக்கு மறுநாள் கண் எரிச்சல், தொண்டை கரகரப்பா? தப்பிக்க 5 வழிகள்!

பட்டாசுப் புகையால் ஏற்படும் கண் எரிச்சல், தொண்டை கரகரப்பு மற்றும் சுவாசப் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க மருத்துவர்கள் தரும் ஆலோசனைகள்.
Diwali Firecracker smoke | பட்டாசுப் புகை
Diwali Firecracker smoke | பட்டாசுப் புகைImage Credit: ChatGPT
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

சில பட்டாசுகள் உலக சுகாதார அமைப்பின் (WHO) அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு மேல் நச்சுத் துகள்களை(PM) வெளியிடுகின்றன. உதாரணத்திற்கு குழந்தைகள் அதிகம் பயன்படுத்தும் பாம்பு மாத்திரையானது 464 சிகரெட்டுகளிலிருந்து வரும் புகைக்கு சமமான புகையை உருவாக்குகிறது என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டி உள்ளன. பட்டாசுகள் நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சு மற்றும் ஆபத்தான வாயுக்களை வெளியிடுவதாகவும் கூறப்படுகின்றன. இவை அனைத்தும் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பல நோய்களை ஏற்படுத்தும். அதுவும் ஆஸ்துமா, ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இவை அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும்.

தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் காற்றில் கலந்திருக்கும் பட்டாசுப் புகையால் கண் எரிச்சல், தொண்டை கரகரப்பு மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது பொதுவானது. இந்த மாசடைந்த காற்றில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மருத்துவர்கள் சில முக்கிய வழிகளை பரிந்துரைக்கிறார்கள்.

வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்:

தீபாவளிக்கு மறுநாள் குறிப்பாக அதிகாலையில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அதிகாலை மற்றும் காலை வேளைகளில் காற்றில் மாசு மற்றும் புகையின் அளவு மிக அதிகமாக இருக்கும். எனவே அதிகாலை நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சிக்காக வெளியில் செல்வதை தவிர்த்து விட வேண்டும். வீட்டிற்குள்ளேயே சில எளிய பயிற்சிகளை அந்த நாட்களில் செய்யலாம். அத்துடன் வெளியில் உள்ள நச்சுப் புகை வீட்டுக்குள் வராமல் பாதுகாக்க வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைப்பதும் நல்லது.

தீபாவளி | Diwali
தீபாவளி | DiwaliImage credit; Gemini AI

முகக்கவசம் அணிவது:

ஏதேனும் அவசரம் அல்லது அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் செல்ல வேண்டி இருந்தால் சாதாரண துணி முகக்கவசங்களுக்கு பதிலாக N95 முகக்கவசத்தை கட்டாயம் அணிந்து செல்வது பாதுகாப்பானது. இது காற்றில் உள்ள நுண்ணிய நச்சுப் புகைத் துகள்கள் (PM 2.5) சுவாசப் பாதைக்குள் அதாவது நுரையீரலுக்குள் செல்வதைத் தடுக்கும்.

கண்களை குளிர்ந்த நீரால் கழுவுவது:

கண் எரிச்சல் அல்லது கண்களில் அரிப்பு ஏற்பட்டால் கண்களைக் கைகளால் தேய்க்கக் கூடாது. சுத்தமான குளிர்ந்த நீரால் கண்களை மெதுவாகக் கழுவலாம். வெளியில் செல்லும் பொழுது முழுமையாக மூடிய கண்ணாடிகளை (Sunglasses) அணிவது நச்சுப் புகை நேரடியாகக் கண்ணில் படுவதைத் தடுக்கும். கண் எரிச்சல் அதிகமாக இருப்பின் மருத்துவரின் ஆலோசனையுடன் கண்களை ஈரப்பதமாக வைக்கும் 'லூப்ரிகேட்டிங் கண் சொட்டு மருந்துகளை' பயன்படுத்தலாம்.

Drinking water
Drinking water

வெதுவெதுப்பான நீர் மற்றும் உப்பு நீர் கொப்பளிப்பு (Gargling):

தொண்டை கரகரப்பு மற்றும் வறட்டு இருமலைக் குறைப்பதற்கு அடிக்கடி வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நல்ல பலனைத் தரும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து தொண்டையில் படுமாறு நன்கு கொப்பளிப்பது தொண்டை நச்சுக்களை நீக்கி நிவாரணம் தரும்.

இதையும் படியுங்கள்:
தீபாவளி பட்டாசு: ஆஸ்துமா நோயாளிகளும் செல்லப் பிராணிகளும் தப்பிக்க 5 வழிகள்!
Diwali Firecracker smoke | பட்டாசுப் புகை

நீராகாரங்கள் மற்றும் ஆவி பிடித்தல்:

நச்சுப் புகையினால் உடலில் வறட்சி ஏற்படாமல் இருக்க நிறைய தண்ணீர், பழச்சாறுகள் மற்றும் இஞ்சி, துளசி போன்ற மூலிகைகளைக் கொண்டு தேநீர் தயாரித்துப் பருகலாம். தொண்டைக்கு இதம் தரும் சூடான சூப், சீரகத் தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் கலந்து குடிப்பது தொண்டைக்கு இதமளிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

தொண்டையில் உள்ள அடைப்பு மற்றும் நெஞ்சுப் புகையை நீக்குவதற்கு சுத்தமான நீரில் ஆவி பிடிப்பது (Steam inhalation) மூக்கடைப்பு மற்றும் தொண்டை எரிச்சலுக்கு நல்ல பலனைத் தருவதுடன் சுவாசப் பாதையை சீராக்கவும் உதவும்.

ஆஸ்மா, அலர்ஜி அல்லது சைனஸ் போன்ற சுவாசப் பிரச்சனைகள் இருப்பவர்கள் மருத்துவர் பரிந்துரைத்த இன்ஹேலர் அல்லது மருந்துகளைத் தவறாமல் டாக்டரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்வது நல்லது. பாதிப்பு அதிகமாக இருப்பின் சுய மருத்துவம் எதுவும் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறப்பு.

இதையும் படியுங்கள்:
தீபாவளி லேகியம் சாப்பிடுவது ஏன்? சாஸ்திரமும் அறிவியலும்!
Diwali Firecracker smoke | பட்டாசுப் புகை

Reference: