உணவு, உடை, உறைவிடம் போல் இன்றியமையாத ஒன்று தண்ணீர். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் கருத்து. 'நீரின்றி அமையாது உலகு' என்ற வள்ளுவர் சிறப்பித்துக் கூறிய தண்ணீரை எப்படி அருந்த வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஹெர்னியா: தண்ணீர் குடிக்கும்போது அமர்ந்து குடிக்க வேண்டும். நின்று கொண்டு தண்ணீரைக் குடிக்கும்போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாகச் சென்று ஹெர்னியா எனப்படும் குடலிறக்கப் பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. நின்றுகொண்டே தண்ணீரைக் குடிக்கும்போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாகத் தாக்கி குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்பட்டு செரிமான பாதையில் பிரச்னை ஏற்படவும் வாய்ப்புண்டு.
சிறுநீரக பாதிப்பு: தண்ணீரை நின்றபடியோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்து, சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. உட்கார்ந்து குடிக்கும்போது நீரானது உடலின் அனைத்து இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சிறுநீரகங்களுக்குக் கொண்டு சென்று, நச்சுக்களை உடலில் இருந்து முறையாக வெளியேற்றிவிடும்.
ஆர்த்ரைடிஸ்: சில ஆய்வுகளில் நின்றுகொண்டே தண்ணீர் குடிப்பதால், ஆர்த்ரைடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாகச் சொல்லப்படுகிறது. தண்ணீரை நின்றவாறு குடிப்பதால், உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்தி மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரைடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும்.
நரம்புகள் டென்ஷனாகும்: பொதுவாக, நின்று கொண்டிருக்கும்போது சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பிப்பதால் இதயத் துடிப்பு அதிகமாகும். இரத்த நாளங்கள் விரிந்து நரம்புகள் அதிகமாக டென்ஷனாகி, கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்படுவது என்று உடலே சுறுசுறுப்புடன் இயங்கும். அந்நேரம் தண்ணீர் குடித்தால், நீரானது நேரடியாக சிறுநீர்ப்பையை அடைந்து வெளியேறும். ஆனால், உட்கார்ந்து இருக்கும்போது பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து, உடல் ரிலாக்ஸ் ஆகி, செயல்பாடுகளின் வேகம் குறைந்து, நரம்புகள் அமைதியாகி, உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் நீர் அனைத்தும் மெதுவாக செரிமான மண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும்.
தண்ணீரை அண்ணாந்து குடித்தால் காது நோய் ஏற்படுத்தும்: டம்ளரில் வாய் வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப்போகும். அண்ணாந்து தண்ணீர் குடிப்பதால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன.
சில குறிப்புகள்: உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து குடிக்க வேண்டும். அதிலும், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
* காலையில் எழுந்ததும் 1 முதல் 3 டம்ளர் தண்ணீர் குடிக்கவும்.
* மதிய உணவுக்கு முன் 1 மணி நேரத்திற்கு முன் 2 முதல் 3 கப் தண்ணீர் குடிக்கவும்.
* இரவு உணவு உண்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன் 2 முதல் 3 கப் தண்ணீரை வாய் வைத்து அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும்.
* வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்க உதவும்.
* நம்மில் பலரும் நின்று கொண்டு நீர் அருந்துவதும், இடது கையால் அருந்துவதும், ஒரே மூச்சில் அவசரமாக தண்ணீர் அருந்துவதையும் அவசியம் தவிர்க்க வேண்டும்.