ஏலக்காய் என்றதும் அதனுடைய நல்ல நறுமணமும், சுவையும்தான் நினைவிற்கு வரும். ஏலக்காயை பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட், வைட்டமின், மினரல் ஆகியவை நமக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தருகிறது. தினமும் காலையில் ஏலக்காய் ஊற வைத்த நீரை குடிப்பதால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. காலையில் வெறும் வயிற்றில் ஏலக்காய் ஊற வைத்த தண்ணீரை குடிப்பதால், நல்ல செரிமானம் நடக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல், வயிறு சம்பந்தமான பிரச்னைகளான உப்புசம், அஜீரணம், பேதி போன்ற பிரச்னைகளை சரிசெய்கிறது.
2. ஏலக்காய் ஊற வைத்த நீரில் Diuretic பண்புகள் இருக்கின்றன. எனவே, இது ஒரு சிறந்த டீ டாக்ஸிக் பானமாக உள்ளது. இதை காலையில் அருந்துவதால், உடலில் உள்ள கெட்ட நீரையும், நச்சுக்களையும் வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
3. உடலில் மெட்டபாலிசம் நன்றாக செயல்பட வேண்டும் என்று நினைத்தால் காலையில் ஏலக்காய் ஊற வைத்த நீரை எடுத்துக்கொள்வது சிறந்தது. இது நம் உடலில் மெட்டபாலிசம் நன்றாக செயல்பட உதவுகிறது. இதனால் கலோரிகள் அதிகமாக எரிக்கப்படுவதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த பானம் அருமருந்தாக இருக்கிறது.
4. ஏலக்காய் ஊற வைத்த நீரை காலையில் எடுத்துக்கொள்வது வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்குகிறது. ஏலக்காயில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் Anti fungal பண்புகள் உள்ளன. இது வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்குவதோடு மட்டுமில்லாமல், நல்ல நறுமணத்தையும் கொடுக்கிறது. மேலும் தொண்டை கரகரப்பு, வறட்சியை குணமாக்குகிறது.
5. சருமம் நன்றாக பளபளப்பாக இருக்க காலையில் ஏலக்காய் ஊற வைத்த நீரை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் ப்ரீரேடிக்கலால் ஏற்படும் பாதிப்புகளை போக்கி சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைக்கிறது.
6. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியைப் போக்க ஏலக்காய் ஊற வைத்த நீரை காலையில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் Antispasmodic பண்புகள் இருப்பதால், மாதவிடாயால் ஏற்படும் வயிற்று வலியை குறைக்க உதவுகிறது. மேலும், ஹார்மோன் பிரச்னைகளை சரி செய்கிறது.
7. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஏலக்காய் ஊற வைத்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். எனவே, காலையில் ஏலக்காய் நீரை எடுத்துக்கொண்டு உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.