
மனப்பதற்றம் என்றால் என்ன? அப்படின்னு கேட்ட யாருக்கும் சொல்ல தெரியாது. எந்த நேரமும் படபடப்பாக இருப்பார்கள். மன பதற்றம் என்பது சிறிய நோய்தான் இதை எளிதாக குணப்படுத்தலாம். இதை அப்படியே விட்டு விட்டால் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் ஆக மாற வாய்ப்பு உள்ளது. இதன் அறிகுறிகள் உடல் முழுக்க வலி, வாயு தொல்லை, நெஞ்சு வலி, கழுத்து வலி, அரிப்பு, எரிச்சல் போன்றவை. சிலர் இதை செய்வினை கோளாறு சூனியம் என்று சொல்வார்கள்.
மன அழுத்தம் அதிகமாக இருந்தால் அதை psychosomatic disorder- உளமன நோயியல் அல்லது உளவியல் நோய்க்குறி- என்பார்கள். சிலர் இதை சூனியம் செய்வினை என்று கூறி செலவு வைத்து விடுவார்கள். வாஸ்து நிபுணரிடம் சென்றால் வீட்டை மாற்றி இருக்கச் சொல்வார்கள் .
இது மூளையில் ஏற்படக்கூடிய வேதியியல் மாற்றம் போன்ற சிறிய பிரச்சனை தான். மேலும் மரபணு காரணமாகவும் வரலாம். தாத்தாவிற்கு மனப்பதற்றம் இருந்தால் அது பேரனுக்கும் வர வாய்ப்பு உள்ளது. அனேகமாக இது அடுத்த தலைமுறைக்கும் தொடரும். மனப்பதற்றம், மன அழுத்தம் தென்பட்டால் மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நலம்.
உடலில் எந்தப் பிரச்சனை இல்லாமல் எந்தக் கோளாறு இல்லாமல் இருந்தாலும் இது தென்படும். இதன் மூலம் பய உணர்வு, மன பதற்றம்.
ஆள் பார்க்க நன்றாகத்தான் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்குள்ள இந்தப் பிரச்சனைகளை அவர்களால் மட்டுமே உணர முடியும்.
இதற்காக பயப்பட வேண்டியதில்லை. மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நலம்.