

பூசணி விதை மற்றும் சூரியகாந்தி விதைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தன.
சூரியகாந்தி விதையில் ஆரோக்கியமான கரையாத கொழுப்பு சத்து, அதாவது ஒரு அவுன்சுக்கு 28 கிராம் அளவு உள்ளது. மேலும் 250 கலோரிகள், புரதச்சத்து 6 கிராம், கார்போ ஹைட்ரேட் 6 கிராம், நார்சத்து 2 கிராமும் உள்ளன.
பூசணி விதையில் ஒரு அவுன்சுக்கு 28 கொழுப்புச் சத்து, 160 கலோரிகள், 8 கிராம் புரதம் நார்சத்து ஒரு கிராம், ஆகியவை உள்ளன.
சூரியகாந்தி விதையில் நார்சத்து அதிகம் உள்ளது பூசணி விதையில் புரதம் அதிகம் உள்ளது.
சூரியகாந்தி விதையில் வைட்டமின் ஈ சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
பூசணி விதையில் அதிக அளவு மக்னீசியம் மாற்றும் துத்த நாகம் உள்ளன. சிறந்த ஊட்டச்சத்து நிறைந்தது.
சூரியகாந்தி விதையில் வைட்டமின் சத்தும், செலினியமும் நிறைந்துள்ளதால் இது சரும ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.
பூசணி விதையில் மக்னீசியம், இரும்பு மற்றும் துத்தநாக சத்து உள்ளதால் எலும்பு ஆரோக்கியம் மற்றும் நோயேதிர்ப்புக்குச் சிறந்தது.
சூரியகாந்தி விதைப் பயன்கள்
ஊட்டச் சத்துக்கள் நிறைந்த இது இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. கரையாத கெழுப்புச் சத்துக்கள் இதில் உள்ளதால் மேலும் ஒமேகா 6 அமிலக் கொழுப்பு நிறைந்ததாகவும் உள்ளதால் கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் அதிக அளவு உள்ள ஈ சத்து சிறந்த ஆன்டி ஆக்சிடண்டாக செயல் படுவதால் அழற்சியைக் குறைத்து இதயத்தை ஆக்சிடேடிவ் அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. இதில் உள்ள மக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதால் இதய ஆரோக்கியம் மேம்பட்டு மாரடைப்பு நோயைத் தடுக்கிறது.
இதன் ஈ சத்து சருமத்தை அல்ட்ரா வயலெட் கதிர் களிடமிருந்து பாதுகாத்து சுருக்கங்களை நீக்கும். இதில் அதிக அளவில் இருக்கும் ஆன்டி ஆக்சிடணாட்ஸ் அழற்சியைக் குறைத்து, திசுக்களின் ஆரோக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்குகிறது. தோற்றத்தையும் இளமையாக்குகிறது.
இதன் புரதம் நார்சத்து மற்றும் கொழுப்புச் சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் அதிகம் உட்கொள்வது தடுக்கப்பட்டு எடையை சீராக வைக்க முடிகிறது. இதன் நார்சத்து இரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கிளது. மெட்டபாலிசத்தை ஊக்குவிக்குகிறது.
பூசணி விதைப் பயன்கள்
இதன் மக்னீசிய சத்து எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதன் துத்தநாக சத்து ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு நோயைத் தடுக்கிறது.
ப்ராஸ்டேட் ஆரோக்கியத்திற்கு இது சிறந்தது. இதில் உள்ள ஃபடோஸ்டீரோல்ஸ் ப்ரோஸ்ஸ்டாடிக் ஹைபர்ப்ளேசியா என்ற நோயைத் தடுக்கிறது. இதன் ஈ சத்து மற்றும் துத்தநாகம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இருவிதைகளில் புரதச்சத்துக்கள் இருந்தாலும் பூசணி விதையில் புரதம் சிறிது அதிகம் உள்ளது. இதனால் புரதச்சத்து அதிகம் வேண்டுபவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். இந்த இரு விதைகளிலும் அமைனோஅமிலம் உள்ளது. பூசணி விதையில் துக்கத்தை சரிசெய்யும் செரடோனின் அதிகம் உள்ளது.
இது இரண்டில் எது சிறந்தது?
சூரியகாந்தி விதையில் ஒமேகா 6 கொழுப்பு அமிலம் உள்ளது. இது இதயத்திற்கும் சிறந்தது. பூசணி விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளதால் இது அழற்சியைக் குறைத்து இதயம் மேம்பட சிறந்ததாகக் கருதப்படுகிறது. பூசணி விதையில் கலோரிகள் சிறிது குறைவாக உள்ளதால் மேலும் இது ரத்தச் சர்க்கரையைக் கட்டுப் படுத்துவதால் பசி ஏற்படும் உணர்வைத் தடுப்பதாலும் இது எடைக்குறைப்புக்குச் சிறந்தது.
சூரியகாந்தி விதையில் ஈ சத்து இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. பூசணி விதையில் துத்தநாகம் மற்றும் மக்னீசியம் எலும்பிற்கு நல்லது. இரண்டு விதைகளுமே ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருப்பதால் உங்கள் உடல் குறைபாட்டிற்குத் தகுந்தால் போல் இரண்டு விதைகளின் பயன்களை கவனம் வைத்து உணவில் சேர்ப்பதால் உடல் நல்ல ஆரோக்கியம் பெறுவீர்கள்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference