கர்நாடக மாநிலத்தில் சிவப்பு அரிசி வகைகளில் ஒன்றான ராஜமுடி ரைஸ் அதிலுள்ள அதிகளவு ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் அதன் வித்தியாசமான சுவைக்காகவும் பிரசித்தி பெற்று வருகிறது. அதிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. வெள்ளை அரிசியை விட ராஜமுடி ரைஸ் குறைந்த அளவு க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாகக் கலக்கச் செய்வதால் திடீரென சர்க்கரை அளவு உயர வாய்ப்பிருக்காது. எனவே. நீரிழிவு நோய் உள்ளவர்கள் உண்பதற்கு ஏற்ற உணவு இது.
2. ஒயிட் மற்றும் பிரவுன் அரிசிகளில் உள்ளதை விட ராஜமுடி ரைஸில் நார்ச்சத்து அதிகம். இதனால் ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும். சாப்பிட்ட பின் அதிக நேரம் வயிறு நிரம்பிய உணர்வை கொடுப்பதால் மீண்டும் பசியேற்படும் நேரம் அதிகரிக்கும்.
3. ராஜமுடி ரைஸ் க்ளூட்டன் ஃபிரீயானது. எனவே. க்ளூட்டன் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் உண்ண ஏற்ற உணவாகிறது. மேலும். மற்ற அரிசிகளில் இருப்பதை விட இதில் புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது. அது தசைகளின் வளர்ச்சிக்கும், சிதைவடைந்த தசைகளின் சீரமைப்பிற்கும் சிறந்த முறையில் உதவும்.
4. ராஜமுடி ரைஸை அரை மணி முதல் ஒரு மணி வரை ஊற வைத்துப் பிறகு சமைத்தால் அதன் சுவை கூடுவதோடு செரிமானமும் சீராக நடைபெறும். சரியான முறையில் சமைக்கும்போது இந்த உணவு ச்சூவி (chewy)யாகவும் சிறிது உப்பின டெக்ச்சருடனும் தோற்றமளிக்கும்.
5. ராஜமுடி ரைஸின் பன்முகத்தன்மை கொண்ட குணமானது இதை பிரியாணி, புலவ், தோசை, இட்லி, சூப், சாலட், ஸ்டிர் ஃபிரை போன்ற எந்த வகை உணவுகளுடனும் சேர்த்து சமைக்க உதவும். அதில் இதன் நட்டி ஃபிளேவர் மற்றும் தனித்துவம் கொண்ட டெக்ச்சர் மேலோங்கி நிற்கும்.
6. கர்நாடகா மாநிலத்தில் மட்டும் கிடைக்கக்கூடிய இந்த ரைஸின் விலை ஒயிட் ரைஸை விட மிக அதிகம். ஆனால், இதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களின் அளவும் அதன் சுவையும், நாம் கொடுக்கும் விலையை நியாயப்படுத்தவே செய்யும்.
7. அதிகளவு ஆரோக்கியம் தரும் அரிசியை வாங்க நினைப்பவர்களுக்கு ராஜமுடி ரைஸ் ஒரு சிறந்த தேர்வாகும். ஏனெனில், இதில் மற்ற அரிசிகளில் இருப்பதை விட அதிகளவு புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் சுவை உள்ளது.