திடீரென உடல் எடை குறையுதா? ஜாக்கிரதை! 

Sudden Weight Loss Issue
Sudden Weight Loss Issue

இன்றைய காலத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இதனால் பாதிக்கப்படுகின்றனர். என்னதான் உடல் எடையை குறைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டாலும் சிலருக்கு உடல் எடை குறைவதே கிடையாது. ஆனால் உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு திடீரென உடல் எடை குறைந்தால் அது மகிழ்ச்சியான விஷயம் அல்ல. ஏனெனில் இது ஆரோக்கியப் பிரச்சனையின் ஆரம்பகட்ட அறிகுறியாக இருக்கலாம். சரி வாருங்கள் இந்த பதிவில் திடீரென உடல் எடை குறைவதற்கான காரணங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். 

இதையும் படியுங்கள்:
ப்ளீஸ் உங்க போனை உடனே அப்டேட் செய்யுங்க... காத்திருக்கும் ஆபத்துக்கள்!
Sudden Weight Loss Issue
  1. வாழ்க்கை முறை மாற்றங்கள்: வாழ்க்கை முறை பழக்கங்களில் மாற்றங்கள் கொண்டு வருவதினால்கூட திடீரென எடை இழப்பு ஏற்படலாம். எனவே ஆரோக்கியமான உணவு முறைகளைப் பின்பற்றி, வழக்கமான உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தாலே இயற்கையாகவே எடை இழப்பு ஏற்படும். மேலும் மன அழுத்தம், பதட்டம், புதிய வேலை அல்லது உறவு போன்றவற்றால் கூட வளர்ச்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு உடல் எடை குறையலாம்.

  2. குடல் பாதிப்பு: சில இரைப்பை குடல் கோளாறுகள் திடீர் எடை இழப்பை ஏற்படுத்தும். பெருங்குடல் அழற்சி, நாள்பட்ட கணைய அழற்சி, செலியாக் நோய் போன்றவற்றால் கூட ஊட்டச்சத்து உறிஞ்சுதல் குறைந்து எடை இழப்புக்கு வழிவகுக்கும். எனவே நாள்பட்ட வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. 

  3. ஹைப்பர் தைராய்டிசம்: தைராய்டு சுரப்பி அதிகப்படியான தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் நிலையான ஹைபோ தைராய்டிசம் காரணமாக வளர்ச்சிதை மாற்றம் தூண்டப்பட்டு எடை இழப்புக்கு வழி வகுக்கலாம். எனவே தைராய்டு அதிகம் இருப்பது போல நீங்கள் சந்தேகித்தால் சரியான முறையில் அதைக் கண்டறிந்து, எதுபோன்ற சிகிச்சை பெறலாம் என சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது முக்கியம். 

  4. நீரிழிவு நோய்: திடீரென எடை இழப்பு ஏற்பட்டால், அது நீரிழிவு நோயின் ஆரம்பக்கட்ட அறிகுறியாக இருக்கலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகமாக இருக்கும்போது, உடல் தசை மற்றும் கொழுப்பை உடைத்து அதிக ஆற்றல் தேவையை பூர்த்தி செய்யும்போது, உடல் எடை இழப்புக்கு வழிவகுக்கும். எனவே சரியான நீரிழிவு மேலாண்மைக்கு உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். 

  5. புற்றுநோய்: எடை இழப்பு புற்று நோயுடன் சம்பந்தப்பட்டதில்லை என்றாலும், திடீரென உடல் எடை குறைவது என்பது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். நுரையீரல், இரைப்பை, குடல் அல்லது கணையப் புற்றுநோய் போன்ற பல வகையான புற்று நோய்களுக்கு ஆரம்ப அறிகுறியாக எடை இழப்பு இருக்கிறது. புற்று நோயுடன் தொடர்புடைய எடை இழப்பு என்பது சோர்வு, வலி அல்லது குமட்டல் போன்றவற்றுடன் தொடர்புடையது. இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com