கண்களில் விடாமல் நீர் வடியுதா? அலட்சியப்படுத்தினால் ஆபத்தா?

கண்களில் நீர் வடியுதா? கவனிக்க வேண்டிய 5 முக்கிய காரணங்கள் இதோ!
Watery eyes
Watery eyes Reasons, symptoms and remediesImage credit: AI Image

கண் கலங்குதல் (Watery Eyes/ Epiphora)  என்பது கண்களில் இருந்து அளவுக்கு அதிகமாக நீர் வடிவதைக் குறிக்கும். இது ஒரு தற்காலிக எரிச்சல் முதல் தீவிர கண் நோய்கள் வரை பல காரணங்களால் ஏற்படலாம்.

1. கண் கலங்குதலுக்கான காரணங்கள்:

Causes of watery eyes
Causes of watery eyesImage credit: AI Image

உலர் கண் (Dry Eye) நோய்க்குறி: கண்கள் வறண்டு போகும்போது, கண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அதிகப்படியான நீரை சுரக்கின்றன.

ஒவ்வாமை: தூசு, மகரந்தம், செல்லப் பிராணிகளின் முடி அல்லது வாசனை திரவியங்களால் அலர்ஜி ஏற்பட்டு கண்களில் இருந்து நீர் வழியும்.

கண் தொற்று: விழி வெண்படல அழற்சி (conjunctivitis) அல்லது பாக்டீரியா / வைரஸ் தொற்று காரணமாகவும் கண்கள் கலங்கலாம்.

கண்ணீர் நாள அடைப்பு (Blocked Tear Duct): கண்ணீர் வெளியேறும் பாதையில் அடைப்பு ஏற்படுதல்.

சுற்றுச்சூழல் காரணிகள்: புகை, காற்றில் உள்ள மாசு, அதிக காற்று. 

கண்ணிமை பிரச்னைகள்: கண் இமை உள்பக்கமாக (Entropion) அல்லது வெளிப்பக்கமாக (Ectropion) திரும்புதல்.

கண் அழுத்த நோய்(Glaucoma): குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் கண்ணழுத்த நோய். 

திரை நேரம்: கணினி, மொபைல் திரையை நீண்ட நேரம் பார்ப்பது. 

2. அறிகுறிகள்: 

Symptoms of watery eyes
Symptoms of watery eyesImage credit: AI Image
  • கண்களிலிருந்து தொடர்ச்சியாக கண்ணீர் வடிதல்.

  • கண்களில் எரிச்சல், அரிப்பு அல்லது சிவத்தல். 

  • காலையில் எழுந்தவுடன் கண் இமைகள் ஒட்டிக் கொள்ளுதல்.  பார்வை மங்கலாகத் தெரிதல்.

  • ஒளி கூச்சம்(வெளிச்சத்தை பார்க்க முடியாமை). 

  • கண்ணில் மணல் விழுந்தது போன்ற உணர்வு.

3. தீர்வுகள் மற்றும் சிகிச்சைகள் (வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் வீட்டு வைத்தியம்):

Solutions and treatments
Solutions and treatmentsImage credit: AI Image

திரை நேரத்தைக் குறைத்தல்: 20-20-20 விதியை பின்பற்ற வேண்டும். (ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும், 20 அடி தூரத்தில் உள்ள பொருளை, 20 நொடிகள் பார்க்கவும்).

சுடு தண்ணீர் ஒத்தடம்: சுத்தமான துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து மூடிய கண்களின் மேல் சில நிமிடம் வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
தொக்கம், உறம் எடுத்தல் விபரீதம்: ICU-வில் குழந்தை! பெற்றோரே உஷார்!
Watery eyes

கண் பாதுகாப்பு: வெளியில் செல்லும் பொழுது சன் கிளாஸ் அணியவும். கணினி, மொபைல் பார்க்கும் பொழுது அடிக்கடி இமைக்கவும்.

சுத்தம்: கண்களை கசக்குவதை தவிர்க்கவும். அத்துடன் கைகளை அடிக்கடி கழுவவும்.

4. மருத்துவ சிகிச்சைகள்:

Medical treatments
Medical treatmentsImage credit: AI Image

செயற்கை கண்ணீர் சொட்டு மருந்துகள்: உலர் கண் பிரச்சனைக்கு உதவும். 

ஒவ்வாமை சொட்டு மருந்துகள்: அலர்ஜியால் ஏற்படும் நீர் வடிதலை குறைக்க உதவும். 

மருத்துவர் ஆலோசனை: தொற்று இருந்தால் பாக்டீரியா எதிர்ப்பு சொட்டு மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.

அறுவை சிகிச்சை: கண்ணீர் நாளம் முழு அடைப்பு அல்லது இமை பிரச்சனைகளுக்கு சிறு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும் தெரியுமா? சுய மருத்துவம் எப்பொழுதும் ஆபத்தானது. எனவே பார்வையில் திடீர் மாற்றம் அல்லது மங்கலாகத் தெரிந்தால் கண்களில் கடுமையான வலி இருந்தால் கண் இமை வீக்கம் அல்லது கட்டிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com