சாதாரண பிரட் Vs வாட்டிய பிரட் - எது ஆரோக்கியமானது?

Which is best?
Which is best?
Published on

இப்போதெல்லாம் காலையில் பிரட்டும் ஜாமும் , அல்லது பிரட்டுடன் வெண்ணையும் கலந்து சாப்பிடுவது இந்தியாவிலும் சகஜமாகி வருகிறது . ஒரு சிலர் பிரட்டை அப்படியே பயன்படுத்தியும், ஒரு சிலர் டோஸ்ட் செய்த பிரட்டையும் உணவாக உட்கொள்கின்றனர். இரண்டும் ஒருவரின் தனிப்பட்ட சுவை வழக்கத்தை சார்ந்தது .

ஆயினும் வெறும் பிரட்டுக்கும் டோஸ்ட் செய்த பிரட்டுக்கும் ஏதேனும் ஆரோக்கிய நன்மை இருக்கிறதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் எந்த வகை பிரட் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்பதை காண்போம். இதில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ள பிரட் நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கும், மேலும் அது எடை இழப்புக்கும் உதவும்.

சாதாரண பிரட் இனிப்பு சுவை உள்ளது. அது லேசாக பஞ்சு போல உள்ளே செல்லும். இருப்பினும் அதிலும் கலோரிகள் உள்ளன.

பிரட்டை வாட்டுவதால் அதன் ஈரப்பதம் போய் எடை குறைந்து லேசாகவும் மொறு மொறுப்பாகவும் மாறுகிறது. சாதாரண பிரட்டுடன் ஒப்பிடும்போது டோஸ்ட் செய்யப்பட்ட பிரட்டின் GI அளவு சற்று குறைவாக இருக்கும். இதனால், நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதில் ஸ்டார்ச்சின் சிறிது குறைவாக இருக்கும். பலரும் பிரட்டை வாட்டுவதால் அது அதன் கலோரிகளைக் குறைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது ஈரப்பதத்தை மட்டுமே குறைக்கிறது; கலோரிகளை பெரிதும் குறைப்பது இல்லை. மிக குறைவான அளவிலேயே கலோரி வித்தியாசம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கு அவசரத்துக்கு உதவும் மூலிகை மருத்துவ குறிப்புகள்..!
Which is best?

சாதாரண ரொட்டி , அல்லது வறுத்த ரொட்டி இரண்டிலும் நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த விரும்பினால், வாட்டப்பட்ட ரொட்டி ஒரு நல்ல தேர்வாக இருக்கும். அதே வேளையில் அதிக சக்தி மற்றும் நார்ச்சத்து தேவைப்பட்டால், பழுப்பு ரொட்டி அல்லது பல தானிய ரொட்டியைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது தான் சிறந்ததாக இருக்கும் .

எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் சரியான வகை பிரட்டை தேர்வு செய்ய வேண்டும். சாதாரண பிரட்டோ டோஸ்ட் செய்யப்பட்ட பிரட்டோ சரியான தீர்வு இல்லை. வெள்ளை பிரட்டுக்கு பதிலாக, பலதானிய மாவு பிரட்டை சாப்பிடுவது நல்ல தேர்வாக இருக்கும். ஏனெனில் இது வெள்ளை ரொட்டியை விட குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.

செரிமானம், வயிற்றுப்புண் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் வறுத்த பிரட்டை சாப்பிடுவது தான் சரியாக இருக்கும். அமிலத்தன்மை பிரச்சனை இருந்தால் வாட்டிய ரொட்டியை சாப்பிடுவது சரியான தேர்வாக இருக்கும். பிரட்டை சூடாக்குவதால் அதில் உள்ள ஸ்டார்ச்சை குறைந்து, சாப்பிட்ட பின் வயிற்றில் லேசான உணர்வை ஏற்படுத்தி, அமிலத்தன்மையைக் குறைக்க உதவும்.

அதிக ஆற்றல் தேவைப்படும் நபர்களுக்கு சாதாரண பிரட் சாப்பிடுவது தான் சரியாக இருக்கும். உங்களுக்கு சாதாரண பிரட் தான் பிடிக்கும் என்றால், அதை உணவாக உட்கொள்ளும் போது நிறைய காய்கறிகள் வைத்து சாண்ட்விச்சாக, அதை சாப்பிடுவது தான் கலோரிகளை குறைக்கும் வழியாக இருக்கும். இந்த சாண்ட்விச்சில் வெள்ளரிக்காய் , தக்காளி போன்ற கலோரி குறைக்கும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். வறுத்த பிரட் சாப்பிட விரும்புபவர்கள் அதில் சிறிய அளவில் மட்டும் வெண்ணெயை பயன்படுத்தி சாப்பிடுங்கள். அதில் ஜாம், சீஸ் போன்றவை வைத்து சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.

ஒப்பீட்டளவில் சாதாரண பிரட்டை விட வாட்டிய பிரட் தான் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வீட்டில் தயாரிக்கப்படும் பிரட்டாக இருந்தால் இன்னும் நல்லது.

இதையும் படியுங்கள்:
கடனை அடைக்க அந்தப் படத்தில் நடித்தேன் – அமிதாப் பச்சன்!
Which is best?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com