
ரேவதி என் தோழி. பள்ளியில் கணித வகுப்பு எடுக்கிறார். தனியாக அபாகஸ் வகுப்பும் நடத்திக் கொண்டிருக்கிறார். நமது மூளையின் வலிமை மற்றும் இடது, வலது என இருபக்க மூளை பழக்கத்தால் அதிகரிக்கும் செயல்திறன் குறித்து அவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இதோ உங்களுக்காக....
எந்தப் பக்க மூளை அதிகமாக வேலை செய்கிறது என்பதைப் பொறுத்து ஒருவரின் திறன்களும், குணங்களும் மாறுபடும் என்பது உங்களுக்கு தெரியுமா? உங்களின் எந்தப் பக்க மூளை அதிகம் வேலை செய்கிறது என பார்ப்போம்.
வலது பக்கம் மூளை வேலை செய்கிறது எனில் இந்த குணங்கள் எல்லாம் இருக்கும். இவர்கள் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பார்கள். 'எப்படி' என்பதை விட 'ஏன்' என அதிகம் கேட்பார்கள். மிகவும் உணர்வு பூர்வமான சிந்தனை உள்ளவராக இருப்பார்கள். சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
வலது பக்கமே வண்ணங்களை பதிய வைக்கும். எமோஷனலாக வேலை செய்ய வைக்கும். எதையும் முழுமையாக பார்ப்பார்கள். காட்சிப்படுத்தும் திறன் அதிகம் இருக்கும். இசை, ஓவியம், பாடல் எனக் கலைத் திறன் அதிகம் இருக்கும். எதையும் வடிவம் சார்ந்து பேட்டர்னாக பார்ப்பார்கள். படைப்புத் திறன் அதிகம் இருக்கும்.
இடது பக்கம் மூளை வலிமையாக செயல்படுகிறது என்பதை இந்த செயல்களால் அறியலாம். ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள். 'ஏன்' என்பதை விட 'எப்படி' என அதிகமாக கேட்பார்கள். விதிகளுக்கும், விளக்கங்களுக்கு ம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். எதிலும் வேறுபாட்டை கண்டு கொள்வார்கள். நேரத் திட்டமிடல் இருக்கும்.
இடது பக்கமே எண்களைப் பதிய வைக்கும். முழுமையாக பார்க்கும் முன் பகுதியாக பார்ப்பார்கள். கேட்கும் திறன் அதிகம் இருக்கும். எழுத்து, பேச்சு என மொழியைக் கற்றுக் கொள்ளும் திறன் உள்ளவர்களாக இருப்பார்கள். எதையும் உண்மை சார்ந்து விளக்கமாக புரிந்து கொள்வர். நேர்க் கோட்டில் சிந்திப்பர்.
உங்கள் மூளையை கண்டறிய எளிய பரிசோதனை....
உங்களுக்கு எந்த காது அதிகமாக கேட்கிறது என்று கதவில் காதை வைத்துக் கேளுங்கள். சத்தத்தை கவனியுங்கள். உங்களுக்கு எந்த கண் அதிகமான வலிமையோடு இருக்கிறது என்பதைக் கண்டறியுங்கள். உங்களுக்கு எந்தக் காலால் பந்தை அதிக விசையுடன் அடிக்க முடிகிறது என நோக்குங்கள்.
இவற்றில் வலது பக்கம் அதிகத் திறன் இருந்தால் உங்களுக்கு இடது பக்க மூளை வலிமை. இடது பக்கம் அதிகமாக பயன்படுத்தப் பட்டால் வலது பக்க மூளை வலிமை என உணர்ந்து கொள்ளலாம்.
இடது, வலது என இருபக்கமும் மூளையை பழக்கப்படுத்த செயல்திறன் அதிகரிக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)