சருமத்தில் வட்ட வடிவத் தடிப்புகளா? சாதாரண அரிப்பு என விடாதீர்கள்!

கோடை காலத்தில் அதிகரிக்கும் ரிங்வோர்ம் பூஞ்சை தொற்றின் அறிகுறிகள், பரவும் காரணங்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
Ringworm Prevention Tips
Ringworm Prevention TipsImage credit: AI Image
Updated on

சருமம் அரிப்பு என்றால் ரிங்வோர்ம் (Ringworm) எனப்படும் பூஞ்சை தொற்று பாதிப்பாக இருக்கலாம். இவை கோடை காலத்தில் ஏற்படும் அரிப்புகள். இத்தகைய அரிப்பு ஏற்பட்டால் சருமத்தில் வட்ட வட்டமாக தோன்றும், தடிமனாக இருக்கும்.

ரிங்வோர்ம், இவை வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலையில் வரும். அசுத்தமான ஆடைகள், அழுக்கான உடற்பயிற்சி கருவிகள் மேஜை, நாற்காலி போன்ற பாதிக்கப்பட்ட நபர் உபயோகித்த பொருட்களை தொடுவதன் மூலம் நோய் பரவலாம்.

அதிகமான வியர்வை, இறுக்கமான ஆடைகள் அணிவது, ஒரே உள்ளாடைகளை அணிவது அல்லது துவைக்காமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் அரிப்புகள் ஏற்படுகிறது. இவை தவிர சர்க்கரை நோய், ரத்த சோகை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு தொற்று அபாயம் உள்ளது.

இவை பெரும்பாலும் மார்பு, தொடைகள் அதிகம் வியர்க்கும் பகுதிகளில் சிவந்த திட்டாக மாறும். சிலருக்கு தலையில் பாதிப்பு ஏற்படலாம். அதன் மூலம் முடி உதிர்வு ஏற்படும்.

டாக்டரின் பரிந்துரை இல்லாமல் நாமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது. ஸ்டீராய்டு மருந்துகளை எடுக்கும் பொழுது டாக்டரின் அறிவுரைப்படி நடந்து கொள்ள வேண்டும்.

சுத்தமான ஆடைகள் சற்று தளர்வான ஆடைகள் அணிவது நல்லது. அதிக அளவில் வியர்வை தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடைகள், பயன்படுத்தும் பொருள்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

சருமத்தில் தடிப்புகள் இருப்பது தெரிந்தால் சுயமாக மருந்து பயன்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். வாய் வழியாக தரப்படும் மருந்துகள், சருமத்தில் தடவும் மருந்துகள் என இரண்டும் அவசியம்.

அறிகுறிகள் குறைய தொடங்கியதும் மருந்துகளை நிறுத்தக்கூடாது. பூஞ்சை முழுமையாக அழிக்கப்படாவிட்டால் மீண்டும் தொற்று ஏற்பட வழி வகுக்கும். வருமுன் காப்பது சிறந்தது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

இதையும் படியுங்கள்:
உஷார் மக்களே! AC பயன்பாடு உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தா?
Ringworm Prevention Tips
logo
Kalki Online
kalkionline.com