

வெளிர் நிறத்தில் காணப்படும் மக்களுள் கண்களை இடுக்கி கொண்டு பார்ப்பவர்களை பல இடங்களில் பொதுவாக பார்க்க முடியும். அவர்கள் ஏன் அப்படி பார்க்கிறார்கள்? (Why albinos' squint eyes?)
வெள்ளை மனிதர்களின் தோற்றம் பற்றி அறிவியல் என்ன கூறுகிறது? ஏன் இவர்கள் கண்களை இடுக்கிக் கொண்டு பார்க்கிறார்கள். இந்த நிறம் இயல்பானதா அல்லது இது ஒரு நோயா? இது ஒரு நோய் என்றால் இதற்கு ஏதாவது மருந்து உண்டா? என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
அறிவியல் இது ஒரு வகை நோய் என்று கூறுகிறது. இது ஒரு மரபு நோய். ஆனால் இதற்கு மருந்து இப்போது கிடையாது. மனித நிறம் இடத்திற்கு இடம் ஆளுக்கு ஆள் வேறுபட்டாலும் மெலனின் என்னும் ஒரு வேதிப்பொருள்தான் மனிதன் நிறத்திற்கு காரணமாக இருக்கிறது. இந்த மெலனின் சரும செல்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது இருக்கும் அளவிற்கு தக்கபடி ஒருவருடைய நிறம் அமைகிறது.
உயிர்களின் எல்லா பண்புகளையும் பண்பு காரணி அலகுகளால் தான் கட்டுப்படுத்த முடியும். அதுபோல் நிறம் ஒரு பண்பு காரணி அலகுகளால் தான் கட்டுப்படுத்தப்படுகிறது.
மனித செல்களில் 46 பண்பு காரணிகள் இருக்கின்றன. பண்பு காரணிகள் சாதாரணமாக எப்போதுமே இணை இணையாகத் தான் இருக்கும். எனவே மனித செல்களில் உள்ள 46 பண்பு காரணிகளும் 23 இணைகளாக உள்ளன. பொதுவாக ஒரு பண்பு காரணியில் உள்ள, பண்புக் காரணி அலகுகள் போன்றே அதன் இணை பண்பு காரணியிலும் இருக்கும். ஒரு பண்பு காரணிகள் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறத்தை கட்டுப்படுத்தும் பண்பு காரணி அலகு இருக்கிறது என்றால் அதனுடைய இணைப் பண்பு காரணியிலும் அதே இடத்தில் நிறத்தைக் கட்டுப்படுத்தும் பண்பு காரணி அலகு தான் இருக்கும்.
பண்பு காரணி அலகுகள் இரண்டு நிலையில் இருக்கும். ஒன்று ஓங்கு நிலை மற்றது ஒருங்கு நிலை. மனித வண்ணத்தை பல பண்பு காரணி அலகுகள் கட்டுப்படுத்துகின்றன. எல்லா பண்பு காரணி அலகுகளும் ஓங்கு நிலையில் இருக்கும்போது மனித நிறம் கருப்பாகவும், ஒருங்கு நிலையில் இருக்கும்போது வெள்ளை நிறமாகவும் இருக்கிறது. ஆனால் எப்போதும் நிறத்தை கட்டுப்படுத்தும் சில பண்பு காரணி அலகுகளாவது ஓங்குநிலையில் இருந்து கொண்டே இருக்கும். எனவே ஐரோப்பியர்களுடைய உடல் வெள்ளை நிறமாக இருப்பினும் முடியிலும் கருவிழியிலும் ஓரளவு வண்ணம் இருப்பதைக் காணலாம்.
சில சந்தர்ப்பங்களில் மனித நிறத்தை கட்டுப்படுத்தும் எல்லா பண்பு காரணி அலகுகளுமே ஒருங்கு நிலையில் அமைந்துவிடும். இது மிகவும் அபூர்வமாகத்தான் நடக்கும். சந்தர்ப்பவசத்தால் நிறத்தை கட்டுப்படுத்தும் ஒரு பகுதி பண்பு காரணி அலகுகள் ஒருங்கு நிலையில் உள்ள இருவர் திருமணம் செய்து கொள்ள நேர்ந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இரு பகுதி பண்பு காரணி அலகுகளும் ஒருங்கு நிலையில் உள்ளதாகி தோல் செல்களில் மெலனின் நிறமி உற்பத்தி ஆகாது. ஆனால் ஒரு பகுதி மட்டும் ஒருங்கு நிலையில் இருக்கும்போது ஓங்கு நிலையில் உள்ள மற்ற பண்பு காரணி அலகுகள் தான் பண்பை வெளிப்படுத்தும். எனவே அத்தகையவர்கள் இயல்பான நிறத்துடனே காணப்படுவர். இவ்வாறு மெலனின் நிறமியை உற்பத்தி செய்யும் எல்லா பண்பு காரணி அளவுகளும் ஒருங்கு நிலையில் இருக்கும். ஒருவரின் உடல், முடி மற்றும் கருவிழி கூட நிறமற்ற காணப்படும். இது அல்பினிசம் எனப்படும்.
மனித உடலை வெப்பத்திலிருந்து காப்பது தான் மெலனின் நிறமியின் முக்கிய வேலை. எனவே வெப்ப பிரதேசங்களில் வசிப்பவர்கள் கருப்பாகவும், குளிர் பிரதேசங்களில் வசிப்பவர்கள் வெள்ளை நிறமாகவும் இருக்கின்றனர். ஆனால் அல்பினோக்கள் சரியான நிறமற்று வெளிர் நிறத்தில் காணப்படுவதால் சூரிய வெப்பத்தை தாங்கமுடியாமல் இவர்களுடைய உடல் சிவந்து கொப்புளங்கள் நிறைந்து காணப்படும். கண்களை சிறு ஒளியிலும் இடுக்கிக் கொண்டு இருப்பார்கள். இத்தகைய அல்பினிசம் அல்லது வெள்ளை மனிதர்கள் உலகம் முழுவதிலும் காணப்படுகின்றனர்.