இதயத்துக்குச் செல்லும் இரத்த நாளங்களில், கொழுப்பு படிதல் மற்றும் இரத்த உறைவு போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்பட்டு ஸ்ட்ரோக் போன்ற அபாயகரமான நோய் வருவதைத் தடுக்கவும், இதய ஆரோக்கியத்தைக் காக்கவும் உதவும் ஏழு வகையான இயற்கை உணவுகள் என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
* தக்காளி மற்றும் தக்காளியை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் சாஸ் போன்ற பிற உணவுகளிலும் ஒரு வகை தாவரக் கூட்டுப்பொருள் அடங்கியுள்ளது. இது அதெரோஸ்க்ளெரோசிஸ் (Atherosclerosis) எனப்படும். இது இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்க வல்லது.
* வெங்காயத்தில் இதயத்துக்குச் செல்லும் இரத்த வால்வுகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது உள்பட ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன.
* முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவரில் இதயத்துக்குச் செல்லும் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை குறையச் செய்யும் குணங்கள் நிறைந்துள்ளன. இவை இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ஸ்ட்ரோக் வரும் அபாயத்தைத் தடுக்கின்றன.
* பூண்டில் உள்ள அதிகளவு ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை அறவே தடுக்க வல்லவை.
* புரோக்கோலியிலுள்ள புரதச் சத்துக்கள் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை எதிர்த்து இயற்கை அரணாய் நின்று பாதுகாப்பு ஏற்படுத்தக் கூடியவை.
* பீட்ரூட்டில் அதிகளவு டயட்டரி நைட்ரேட்ஸ் உள்ளன. இவை இரத்த ஓட்டத்துடன் கலக்கும்போது நைட்ரிக் ஆக்ஸைடாக மாறுகின்றன. நைட்ரிக் ஆக்ஸைட் இதய ஆரோக்கியம் காப்பதில் பெரும் பங்காற்றக் கூடியது.
* பசலை போன்ற அடர் பச்சை நிறம் கொண்ட கீரைகளிலும் டயட்டரி நைட்ரேட்ஸ் உள்ளன. இவை இரத்த நாளங்களின் ஆரோக்கியம் மேம்படவும், இதயத்தைப் பாதுகாக்கவும் உதவி செய்கின்றன.
மேற்கூறிய காய்கறி வகைகளை நாம் அனைவரும் தினசரி உணவில் சேர்த்து உட்கொண்டு இதய ஆரோக்கியம் காப்போம்.