யோகா செய்யும் முன் சாப்பிட வேண்டிய ஏழு வகையான உணவுகள்!

Seven types of food to eat before doing yoga
Seven types of food to eat before doing yogahttps://tamil.oneindia.com

பொதுவாக காலையில் வெறும் வயிற்றில் யோகா பயிற்சி செய்வதுதான் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால். ஒர்க் அவுட்டுக்கு முன் ஆரோக்கியமான உணவுகளை உண்பது நல்லது. சிலர் யோகா செய்யும்போது உடல் சோர்வடைந்து போகிறார்கள். பயிற்சிகளை மந்தமாக செய்கிறார்கள். அதனால் யோகாவிற்கு முன்பு சில உணவுகளை உண்பது ஆற்றலை அதிகரிக்கவும் அதிக கலோரிகளை எரிக்கவும் உதவும்.

யோகா செய்யும் முன் சாப்பிட வேண்டிய ஏழு உணவுகள்:

1. வாழைப்பழம்: உடலுக்குத் தேவையான பொட்டாசியம் உள்ளிட்ட முக்கியமான ஊட்டச்சத்துக்களை கொண்டது வாழைப்பழம். இது ஒரு அத்தியாவசிய தாது மற்றும் எலக்ட்ரோலைட் ஆகும். இது உடலுக்கு தெம்பையும் ஆற்றலையும் தருகிறது. நரம்பு செல்களை தூண்டி இதயத்தை தொடர்ந்து நன்றாக இயங்க வைக்கிறது. தசைகள் சுருங்கி அதிக ஆற்றலை செலுத்த உதவுகிறது. வாழைப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேடுகள் எடை கூடாமல் இருக்க உதவுகிறது.

2. தயிர்: இது தசைகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ப்ரோபயோடிக் உடன் புரதமும் நிறைந்துள்ளதால் இது யோகா செய்யும்போது ஏற்படும் வீக்கம் அல்லது அசௌகரியத்தை தடுக்க உதவுகிறது. குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பில்லாத தயிரை உண்ணவும்.

3. அவகோடா: கிரீமி மற்றும் சுவையான வெண்ணெய் பழங்களில் ஆரோக்கியமான கொழுப்புகள் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. யோகாவுக்கு முன் சாப்பிட ஏற்றது. இதில் உள்ள கொழுப்புகள் நல்ல ஆற்றலை உடலுக்கு வழங்குகின்றன. இதில் உள்ள நார்ச்சத்து யோகா செய்யும்போது முழுமையாகவும் திருப்தியாகவும் உணர வைக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் தசை பிடிப்பை தடுக்கவும் உடல் தளர்வை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

4. ஓட்ஸ்: விருப்பமான பழங்கள் அல்லது கொட்டைகளுடன் ஒரு கிண்ணம் ஓட்மீல் எடுத்துக்கொள்வது நல்லது. இதில் நார்ச்சத்தும் புரதமும் சேர்ந்துள்ளது. எடை இழப்புக்கு உதவுகிறது. யோகா செய்ய தேவையான ஆற்றலை வழங்கி உடலை சுறுசுறுப்புடன் வைக்கிறது. யோகா செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஓட்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.

5. ஸ்மூத்தீஸ்: பலவிதமான பழங்கள், இலைகள், கீரைகள், தயிர், புரதத் தூள் போன்ற புரதம் நிறைந்த பொருட்கள், வெண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளுடன் கூடிய ஸ்மூத்தீஸ் ரெடி செய்யலாம். இவை கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புகள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியவை. உடலுக்கு நிறைந்த ஆற்றலைத் தரும். தசைகளை மீட்டெடுக்க உதவுகிறது. உடலை நீரேற்றம் மற்றும் புத்துணர்ச்சியுடன் வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய மசாலா பொருட்கள்... மீறி சாப்பிட்டா?
Seven types of food to eat before doing yoga

6. புரதம் நிறைந்த உணவுகள்: டோஃபு, உலர்ந்த பழங்கள், பருப்புகள், தயிர், ஓட்மீல் மற்றும் புரோட்டீன் ஷேக்குகள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை சேர்ப்பது உடலில் உள்ள தசைகளின் செயல்பாடு மற்றும் செல்களை ஆதரிக்க உதவும். புரோக்கோலி சூப், இனிப்பு உருளைக்கிழங்கு, வேகவைத்த பீன்ஸ் போன்ற கார்போஹைட்ரேட்டுகளுடன் புரதத்தை இணைப்பது தசைகளை மீட்டெடுக்கும் மற்றும் விரைவாக இரத்த ஓட்டத்தில் ஆற்றலை வெளியிடும். யோகா செய்யும்போது மந்தமான நிலையை தடுத்து சுறுசுறுப்பாக உடலை வைக்கிறது.

7. பாதாம்: பாதாம் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த சிற்றுண்டியாகும். இது புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் கலவை. இது உற்சாகமாகவும் திருப்தியாகவும் உணர வைக்கிறது. பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை செயல்பாடு மற்றும் தளர்வு ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலை ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது.

மேற்கண்ட உணவுகளை சாப்பிட்டு 45 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரம் வரை சென்ற பின்புதான் யோகா செய்ய வேண்டும். முழு உணவு உண்டால் 3 மணி நேரத்துக்கு பின்புதான் யோகா செய்ய வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com