உடலில் வளர்சிதை மாற்றம் குறைவதை உணர்த்தும் அறிகுறிகளும் எதிர்கொள்ளும் விதமும்!

Signs of a slowing metabolism
Signs of a slowing metabolism
Published on

மது உடலில் செரிமானம், சுவாசம், இரத்த ஓட்டம் மற்றும் வெப்பநிலை கட்டுப்பாடு போன்ற பல செயல்பாடுகளுக்கு வளர்சிதை மாற்றம் (metabolism) மிகவும் அவசியமாகும். இது உணவை ஆற்றலாக மாற்றும் உடல் செயல்முறையை குறிக்கிறது. வளர்சிதை மாற்றம் குறைவதை உணர்த்தும் அறிகுறிகளும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

சோர்வு: உடலில் வளர்சிதை மாற்றம் மெதுவாக நடக்கும்போது எப்போதும் அல்லது அடிக்கடி சோர்வாக இருப்பது போன்ற அறிகுறி இருக்கும். ஏனென்றால், உணவை ஆற்றலாக மாற்றும் செயல்முறை மெதுவாக நடக்கும். அதனால் உடல் செயல்பாடுகளும் மந்தநிலையில் இருக்கும் அதனால் பகலில் மிகவும் சோர்வாக உணரலாம்.

வறண்ட சருமம்: குளிர்கால மாதங்கள் மட்டுமல்லாது, பிற மாதங்களிலும் வறண்ட சருமம் இருப்பது வளர்சிதை மாற்றம் குறைவாக நடப்பதன் அறிகுறி ஆகும். ஏனென்றால், தைராய்டு ஹார்மோன்களில், சருமத்தின் நீரேற்ற அளவைப் பராமரிப்பதில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்போது சருமம் வறண்டு போகிறது.

இதையும் படியுங்கள்:
அமெரிக்க ஜனாதிபதியாகவே இருந்தாலும் இவருக்கும் உண்டு சில கட்டுப்பாடுகள்!
Signs of a slowing metabolism

எடை அதிகரிப்பு: சிலர் சத்தான உணவை உட்கொண்டு உடற்பயிற்சி செய்தாலும் அவர்களது உடல் எடை குறையாமல் கூடிக்கொண்டே போகும். இது வளர்சிதை மாற்றம் மெதுவாக நடப்பதன் காரணமாகும். உடலால் உணவை விரைவாக ஆற்றலாக மாற்ற முடியாது. குறைவான கலோரிகளையே எரிக்கிறது. அதனால் அதிகக் கலோரிகள் உடலில் கொழுப்பாக சேமிக்கப்பட்டு உடல் எடை கூடுகிறது.

குளிர்ச்சியாக உணர்வது: மெதுவான வளர்சிதை மாற்றத்தின் காரணமாக உடலின் வெப்பநிலை வழக்கத்தை விட குறைவாக இருக்கும். மேலும், தைராய்டு ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு இந்த உடல் வெப்பநிலையை குறைக்கிறது.

மனநிலை மாற்றங்கள்: அடிக்கடி மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும். எரிச்சல், விரக்தி, கோபம் போன்ற உணர்வுகளுக்கு வித்திடும். உடலின் குறைந்த ஆற்றல் அளவுகள் மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் வளர்சிதை மாற்றத்தை குறைக்கின்றன.

செரிமானப் பிரச்னைகள்: உடலின் செரிமான செயல்முறை மற்றும் வளர்சிதை மாற்ற விகிதம் இரண்டும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. செரிமானம் என்பது உணவை உடைக்கும் செயல்முறையைக் குறிக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றம் என்பது உணவை ஆற்றலாக மாற்றுவதைக் குறிக்கிறது. இதனால் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் மாறுபாடுகள் செரிமானத்தை பாதித்து மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற அசாதாரண செரிமானக் குறைபாடுகளை ஏற்படுத்தும்.

வளர்சிதை மாற்றம் குறைவதற்கான காரணங்கள்: மரபியல் காரணங்கள், வயது முதிர்வு, பாலின வேறுபாடுகள், உண்ணும் உணவுகள், வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல், சுகாதார நிலைமைகள் போன்றவை வளர்சிதை மாற்றம் குறைவதற்கான காரணங்களாகும்.

வளர்சிதை மாற்றத்தை விரைவுப்படுத்துவதற்கான குறிப்புகள்:

1. சத்தான உணவு: புரதம் நிறைந்த உணவுகள் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்தும்.

2. போதுமான கலோரி கொண்ட உணவுகளை உண்ணுவது: உடலுக்கு தேவையான கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறைவான கலோரிகள் எடுத்துக் கொள்ளும்போது அது மெதுவான வளர்சிதை மாற்றத்திற்கு வழி வகுக்கிறது.

இதையும் படியுங்கள்:
ரூம் ஹீட்டர்களின் மின்கட்டண செலவை குறைக்க சில ஆலோசனைகள்!
Signs of a slowing metabolism

3. சுறுசுறுப்பாக இருத்தல்: உடல் ரீதியாக எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது நல்லது. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவை தசையை வலுப்படுத்துகின்றன.

4. தூக்கம்: போதுமான அளவு தூங்குவது வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது.

5. மகிழ்ச்சியான மனநிலை: மன அழுத்தத்தில் இருக்கும்போது வளர்சிதை மாற்றம் தடைபட்டு, உடல் செயல்பாட்டில் குறுக்கிடுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com