நம் உடலின் வைட்டமின் குறைப்பாட்டை சுட்டிக் காட்டும் அறிகுறிகள்!

Vitamin deficiency
Vitamin deficiency
Published on

நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்துக் கிடைக்கக்கூடிய வைட்டமின்கள், மினரல்கள் மிகவும் அவசியமாகும். தற்போது  மாறிவரும் உணவுப்பழக்கத்தால், வைட்டமின் குறைப்பாடு ஏற்பட்டு நிறைய பேர் அவதிப்படுகிறார்கள். வைட்டமின் குறைப்பாடுகள் நம் உடலில் இருப்பதை ஒரு சில அறிகுறிகளை வைத்தே நாம் மிக எளிதாக அறிந்துக் கொள்ள முடியும். அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

1. நாம் உட்காரும் போதோ அல்லது கைகளை மடக்கும் போதோ நெட்டி முறிவதுப் போன்ற சத்தம் கேட்கும். இப்படி இருந்தால் உடலில் கேல்சியம் குறைப்பாடு இருப்பதாக பொருள். எனவே, நாம் அன்றாட சாப்பிடும் உணவுகளில் கேல்சியம் அதிகம் இருக்கும் உணவுகளை தேர்வு செய்து சாப்பிடும் போது எலும்புகளில் Cracking sound வராமல் இருக்கும். பால், தயிர், சீஸ், பட்டர், பனீர் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.

2. பிரஷ் செய்யும் போது பல் ஈறுகளில் ரத்தம் வருவது, நாக்கின் அடியில் புண்கள் அடிக்கடி வருவது வைட்டமின் சி குறைப்பாட்டை குறிக்கும். வைட்டமின் சி உடலில் குறையும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடும். வைட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய், ஆரஞ்ச், பப்பாளி, எலுமிச்சை, கொய்யா போன்ற பழங்களில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. இதை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள வைட்டமின் சி குறைப்பாடு குறையும்.

3. கைகால்களில் உள்ள நகங்கள் உடைந்துப் போவது, நகங்களுக்கு அருகில் உள்ள தோல்கள் உரிவது, முடி கொத்து கொத்தாக கொட்டுவது, முடியில் வறட்சி ஏற்படுவது போன்றவை உடலில் பையோடின் என்று சொல்லக்கூடிய வைட்டமின் B7 குறைப்பாட்டால் ஏற்படும் அறிகுறிகள். இதைப் போக்க பயோட்டின் அதிகமாக இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். முட்டை, மீன், பாதாம், சர்க்கரைவள்ளி கிழங்கு, வாழைப்பழம், காலிஃபிளவர், வேர்க்கடலை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

4. முகத்தில் இயற்கையாக இருக்கும் நிறம் மாறி வெளுத்துப் போதல், நகங்கள் வெளுத்துப் போதல், உதட்டின் சிவப்பு நிறம் குறைந்துப் போதல் இதை அனைத்திற்கும் காரணம் உடலில் ஹீமோகிளோபின், இரும்புச்சத்து குறைப்பாடாகும். உடலில் புதிய ரத்தம் உருவாக இரும்புச்சத்து மிகவும் அவசியமாகும். முருங்கைக்கீரை, மாதுளம் பழம், ஆப்பிள், பீட்ரூட் போன்றவற்றில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. இதை சாப்பிட்டு வரும் போது இரும்புச்சத்து குறைப்பாட்டை போக்கி இரத்தத்தை உடலில் அதிகரிக்க முடியும்.

5. சிலருக்கு நகங்களில் வெள்ளை நிறப் புள்ளிகள் இருப்பதை பார்க்க முடியும். இதற்கு காரணம் Zinc சத்துக் குறைப்பாடேயாகும். Zinc சத்து ஆண்களுக்கு மிகவும் அவசியமானதாகும். ஏனெனில், ஆண்கள் உடலில் உள்ள Testosterone ஹார்மோன் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது இந்த Zinc சத்து.

இதையும் படியுங்கள்:
முகப்பொலிவை கூட்டும் 5 உணவுகள்!
Vitamin deficiency

இது குறைவாக இருக்கும் போது ஆண்களுக்கு மீசை, தாடி சரியாக வளராது. Muscle growth சரியாக இல்லாமல் இருக்கும், சோர்வாக இருப்பார்கள். Zinc அதிகமாக இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதால் இதை சரிசெய்ய முடியும். பாதாம், முந்திரி, பருப்பு வகைகள், தானிய வகைகள் இந்த உணவுகளில் Zinc சத்து அதிக அளவில் உள்ளது. இதை சாப்பிடுவதால் Zinc சத்து குறைப்பாட்டை சரிசெய்ய முடியும். இந்த வைட்டமின் குறைப்பாடுகள் உங்களுக்கு இருந்தால், அதற்கு ஏற்ற சரியான உணவுகளை எடுத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழங்கள்.

முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.

இதையும் படியுங்கள்:
வாரம் ஒருமுறை வாழைப்பூ சாப்பிடுங்கள்; கிடைக்கும் நன்மைகளை உணர்ந்திடுங்கள்!
Vitamin deficiency

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com