எளிய மூலிகை (வீட்டு)வைத்தியங்கள்

பல்வேறு உடல் பிரச்சனைகளை தீர்க்கும் எளிய மூலிகை வீட்டு கை வைத்தியங்களை அறிந்து கொள்ளலாம்.
herbal home remedies
herbal home remedies
எஸ்.மாரிமுத்து

கடந்த 15 ஆண்டுகளாக நானும் எனது மனைவி எம். வந்தா. நிறைய இதழ்களில் கதை, கட்டுரை, ஜோக்ஸ், ஆன்மீகம், சமையல் பற்றி எழுதி உள்ளோம். தற்போது கல்கி ஆன்லைனிலும் வருகிறது. கல்கிக்கு நன்றிகள்.

Updated on

இடுப்பு வலி குறைய : முருங்கை இலையில் உப்பு சேர்த்து அரைத்து சாறு பிழிந்து இடுப்பு வலி உள்ள இடத்தில் தடவினால் பிடிப்பு விட்டுவிடும்.

சொறி, சிரங்கு குணமாக : குப்பை மேனி இலையுடன் உப்பு சேர்த்து அரைத்து சொறி சிரங்குகளில் தேய்த்து வந்தால் நாளடையில் குணமாகும்.

நீரிழிவு நோய் தீர : அருகம்புல் சாறை மோருடன் கலந்து குடித்தால் நீரிழிவு நோய் குணமாகும்.

நுரையீரல் நோய் குணமாக : வெற்றிலைச் சாற்றில் இஞ்சிச்சாறு கலந்து குடித்து வந்தால் சளி குறைந்து மூச்சு விட முடியும்.

இதையும் படியுங்கள்:
சாப்பிட்ட பின் வயிறு உப்புசமா? இதோ சில எளிய வீட்டு வைத்தியங்கள்!
herbal home remedies

வயிற்றுப் போக்கு குணமாக : சிறிது கறிவேப்பிலையை, ஒரு டீஸ்பூன் சீரகத்துடன் சேர்த்து நைசாக அரைத்து மோருடன் கலந்து குடித்தால் குணமாகும்.

அஜீரணம் சரியாக : வேப்பிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சீரகப்பொடி, உப்பும் சேர்த்து கலந்து காலை மாலை சாப்பாட்டுடன் சாப்பிட்டால் அஜீரணம் நீங்கும்.

குடல் புண் குணமாக : பண்ணைக் கீரையுடன், பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாதத்துடன் சாப்பிட குடல் புண் குணமாகும்.

சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக : சளி இருமல் வறட்டு இருமல் தொண்டை கரகரப்பு மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு கற்பூர வல்லி இலையைச் சாறு எடுத்து தேன் கலந்து குடித்தால் குணமாகும்.

செரிமானம் குணமாக : 5 கொய்யா இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து குடித்தால் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செரிமானம் சரியாகும். சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

கல்லீரல் ஆரோக்கியம் பெற : 5 மா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து குடித்தால் கல்லீரல் நோய், சிறுநீர் பிரச்னைகள் தீரும்.

முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின்   ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே அவசரத்திற்கு உதவும் கை மருந்துகள்!
herbal home remedies
logo
Kalki Online
kalkionline.com