
1. செவ்வாழைப் பழத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
2. அன்னாசிப் பழச்சாறுடன், திராட்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால், ரத்த சோகைக்கு தீர்வு கிடைக்கும்.
3. தேங்காய்ப்பாலுடன் சிறிது படிகாரம் சேர்த்து வாய் கொப்பளித்து வந்தால், ஈறுகளில் ரத்தம் படிவது கட்டுப்படும்.
4. வெயில் அதிகமாக இருக்கும் சமயங்களில் சுரைக்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால், தாகம் எடுக்காது.
5. தேங்காயைத் துருவி பாலெடுத்து, அதை கூந்தலில் தடவி சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாக, செழிப்பாக வளரும்.
6. புருவங்கள் அடர்த்தியாக வளர இரவில் படுக்கப்போகும் முன் புருவங்களில் விளக்கெண்ணைய் தடவி வர வேண்டும்.
7. உடலில் சிரங்கு கரப்பான் இருந்தால், கருஞ்சீரகத்தை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து நல்லெண்ணெயில் குழைத்துப் பூசினால் விரைவில் பலன் கிடைக்கும்.
8. வாய்ப்புண் உள்ள இடத்தில் தேன் அல்லது வெண்ணையைத் தடவி வர வாய்ப்புண் விரைவாக குணமடையும்.
9. சின்ன வெங்காயச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவடையும்.
10. ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு மூடி எலுமிச்சைச் சாறு, துளி உப்பு, துளி புளிக்காத தயிர் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துக் கலக்கிக் குடித்தால், வயிற்றுப்போக்கு உடனே நின்று விடும்.
11. கால் ஸ்பூன் பொடித்த ஓமத்துடன் ஒரு கிராம் பொடித்த கல் உப்பைச் சேர்க்கவும். அதை ஒரு டம்ளர் மோரில் சேர்த்து, உணவுக்குப்பின் பருக மூல வியாதி அண்டாது.
12. தினமும் காலையில் கொஞ்சம் துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)